இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை புரை­யோடிப் போயி­ருக்­கின்­றது. இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக எண்­ணற்ற பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்பட்டன. உள்­ளூரில் பேசப்­பட்­டன. வெளி­ந­ாடு­களில் பேசப்­பட்­டன. இந்தப் பேச்­சுக்கள் பல நேரடி பேச்­சு­வார்த்­தை­க­ளாக அர­சாங்­கத்­திற்கும் தமிழர் தரப்புக்கும்  இடையில் இடம்­பெற்­றி­ருந்­தன.

அதே­நேரம் மறை­முகப் பேச்­சுக்­க­ளாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­டன. இதன் விளை­வாக இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டது. அதி­காரப் பர­வ­லாக்­கலை உறுதி செய்­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பில் 13 ஆவது திருத்தச் சட்­டமும் கொண்டு வரப்­பட்­டது.

இவற்­றை­விட, அர­சாங்கம் தானே இந்தப் பிரச்சினைக்கு ஓர் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­காகப் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­ஒன்றை நிய­மித்து, விடயங்களை ஆராய்ந்­தி­ருக்­கின்­றது.

இதையும் விட இலங்கை அரச தலை­வர்­க­ளினால் கூட்­டப்­பட்ட அனைத்துக் கட்சி மாநா­டுகள், மற்றும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்­ச­வினால் நிய­மிக்­கப்­பட்ட நிபுணர் குழு­ஒன்றும் அர­சியல் தீர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தது.

விடு­த­லைப்­ பு­லி­க­ளுக்கும், அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, இந்­தி­யா­வி­னதும், சர்­வ­தே­சத்­தி­னதும் அழுத்­தத்தின் பய­னாக இலங்கை அர­சாங்­கமும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் நடத்­திய நேரடிப் பேச்­சு­வார்த்­தை­களே, இனப்­பி­ரச்சினைக்குத் தீர்வு காண்பதற்­காகக் கடை­சி­யாக நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது.

ஒரு வருட காலம் நீடித்த இந்தப் பேச்­சு­வார்த்தை செல்­லு­ப­டி­யற்­றது. அதி­கார­மற்­றது எனக் கூறி, அர­சாங்கத் தரப்­பினரே பேச்­சுக்­களில் இருந்து விலகிக்கொண்­டார்கள்.

நேரடி பேச்­சு­வார்த்­தை­க­ளுக்குஇடமேஇல்லை. பேச்­சு­வார்த்­தைக்கென கள­மாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வொன்றை நியமித்து, அந்தக் குழுவில் தமிழ்த்­தேசிய கூட்­ட­மைப்பு பங்­கு­பற்றி, பேச்­சுக்­க­ளுக்குவர­வேண்டும். நேர­டி­யாகப் பேச முடியாது.

அத்­த­கைய பேச்­சுக்­களின் மூலம் பிரச்­சினைக்கு அரசு தனித்து தீர்வு காண முடி­யாதுபாரா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் பெற்­றுள்ள அனைத்து அர­சியல் கட்சி­களின் பிர­தி­நி­தி­களும் கலந்து கொள்­கின்ற ஒரு மன்­றத்­தி­லேயே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும். அதுவே நிரந்­தரத் தீர்­வாக அமையும் என்று அர­சாங்கம் பிடி­வா­த­மாக இருந்­தது.

sureshஆனால், நேர­டி­யாக நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களில் ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட பல விட­யங்­க­ளுக்கு அரசு நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­விட்­டது என குற்றம் சுமத்­திய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, இனப்­பி­ரச்சினைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக அடிப்­படை விட­யங்­களில் கூட்­ட­மைப்பும் அர­சாங்­கமும் முதலில் ஓர் உடன்­பாட்­டிற்கு வர­வேண்டும்.

அந்த உடன்­பாட்டை பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தலாம் என்­பது குறித்து பேச்­சுக்கள் நடத்தி முடிவு செய்­யலாம் என்ற தனது நிலைப்­பாட்டை உறு­தி­யாகக் கூறி­யி­ருந்­தது.

அது மட்­டு­மல்­லாலல் தொடர்ந்து அது, தனது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்து வரு­கின்­றது. இந்த நிலை­யில்தான் பேச்­சு­வார்த்தை என்ற பேச்­சுக்கே இட­மில்­லாமல் போயி­ருக்­கின்­றது.

இப்­போது திடீ­ரென பேச்­சு­வார்த்­தைகள் பற்­றிய பேச்­சுக்கள் பர­வ­லாக அடி­ப­டு­கின்­றன. அர­சாங்கம் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்குத் தயா­ராக இருக்­கின்­றது. ஆனால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புதான் தயா­ராக இல்லை என்று அர­சாங்கம் கூட்­ட­மைப்பின் மீது பழி­போட்­டி­ருந்­தது.

அத்­துடன் பேச்­சுக்கள் நடத்த வேண்டும் அர­சாங்கம் அதற்கு முன்­வர வேண்டும் என்ற கோரிக்­கையைக் கூட கூட்­ட­மைப்பு முன்­வைக்­க­வில்லை என்று அர­சாங்கம் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தது.

ஆயினும் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு தாங்கள் தய­ாராக இருப்­ப­தா­கவே அவ்­வப்­போது கூட்­ட­மைப்பு கூறி வந்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­யில்தான் பேச்சுவார்த்­தை­க­ளுக்குத் தான் தயா­ராக இருப்­ப­தாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச சென்­னையில் இருந்து வெளி­வ­ரு­கின்ற இந்து பத்­தி­ரி­கை­யு­ட­னான நேர்காணல் ஒன்றில் கூறி­யி­ருக்­கின்றார்.

அதுவும்  பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது பற்­றியே பேச்­சுக்கள் நடத்தத் தயா­ராக இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். வட­மா­காண  சபைக்­கான காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் குறித்து நீண்ட கால­மாவே சர்ச்­சைகள் நிலவி வந்­தி­ருக்­கின்­றன.

காணி அதி­காரம் கொடுக்க முடி­யாது. பொலிஸ் அதி­கா­ரத்­தையும் வழங்க முடி­யாது என்று அர­சாங்கம் மறுத்து வந்­தி­ருக்­கின்­றது. இரண்­டுமே தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான விட­யங்­க­ளாகக் காட்­டு­வ­தற்­கான முயற்சிகளையே அர­சாங்கம் மேற்­கொண்டு வருகின்­றது.

வடக்கு கிழக்கு பகு­தி­க­ளா­னது, தமிழர் தாயகப்  பிர­தேசம் என்­பது தமிழர் தரப்பு நிலைப்­பாடு. இரண்டு மாகா­ணங்­களும் இணைந்த நிலையில், அங்கு தாங்கள் சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட ஆட்­சி­ய­தி­கா­ரத்தைக்  கொண்­டி­ருக்க வேண்டும் என்­பது தமிழர் தரப்பின் கோரிக்கை.

ஆனால் இந்தக் கோரிக்­கையை நிறை­வேற்­றினால், வடக்கு கிழக்கு இணைந்த ஒரு பிர­தே­சத்தில் தமி­ழர்கள் தமக்­கென தனி­நாடு ஒன்றை உரு­வாக்­கி­வி­டு­வார்கள் என்­றதோர் அச்சம் மிகுந்த ஒரு தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்தி, அத்­த­கைய நிலை­மைகள் உரு­வா­காமல் இருப்­ப­தற்­கான முயற்­சி­களை மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன.

இதன் கார­ண­மா­கவே ஒரே நிர்­வாக அல­காக இருந்த வடக்கு கிழக்கு தனித்­தனி மாகா­ணங்­க­ளாக நீதி­மன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் பிரிக்­கப்­பட்டு வெவ்வேறு மாகா­ணங்­க­ளாக – இரண்டு மாகாண சபை­களின் கீழ் நிர்வ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அத்­துடன், அந்தப் பிர­தே­சத்தைத் தமிழ் மக்கள் தமது தாயகப் பிர­தேசம் என்று தனித்­து­வ­மாக உரிமை கோர முடி­யா­த­வாறு, அந்தப் பிர­தே­சங்­களில் அரசியல் உள்­நோக்­கத்­துடன் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஆட்­சி­யி­லி­ருப்­ப­வர்கள் மேற்கொண்டு வந்­தி­ருக்­கின்­றார்கள்.

இந்த அர­சாங்கமும் அதனை அடி­யொட்டி தீவி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இந்த நிலையில், காணி அதி­கா­ரங்­களை வட­மா­காண சபை­யிடம் வழங்­கினால்  சிங்­களக்  குடி­யேற்­றங்­களை  மேற்­கொள்ள முடி­யாமல் போய்­விடும் என்­பது அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு.

இதற்­கா­கத்தான் அர­சி­ய­ல­மைப்பு சட்டத்­திற்கு அமை­வாக வட­மா­காண சபைசெயற்­படக் கூடி­ய­தாக இருந்­தாலும்,அதனை அவ்­வாறு செயற்­ப­ட­வி­டாமல் தடுப்­பதில் அர­சாங்கம் குறி­யாக இருக்­கின்­றது.

இதன் ஓர் அம்­ச­மா­கவே, யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, மாகாண சபையை உரு­வாக்­கிய 13 ஆவது திருத்தச் சட்­டத்­தையே இல்லாமல் செய்­வ­தற்­கான திருத்­தத்தைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­க­ளிலும், இந்த அர­சாங்கம் ஈடு­பட்­டி­ருந்­தது.

ஆனால், இந்தி­யாவின் தலையீட்டை­ய­டுத்து, அந்தமுயற்சியை அர­சாங்கம் தற்­கா­லி­க­மாகக்கைவிட்டு வட­மா­காண சபைக்­கான தேர்­தலை நடத்தியிருந்தது. இப்­போது அந்தத் திருத்தச் சட்­டத்தைப் பற்றி பேச்­சுக்கள் நடத்­தலாம் என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கின்றார்.

வட­மா­காண சபையின் நிலை­மைகள் விடு­த­லைப்­பு­லி­களை பயங்­க­ர­வா­திகள் என்றும் அவர்­களே இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான பெரும் தடை­யாக இருப்­ப­தா­கவும், கூறி வந்த அர­சாங்கம், யுத்தம் முடி­வுக்கு வந்­ததும் நடத்­தப்­ப­டு­கின்ற தேர்­தலில் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற தமிழ்ப் பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்­சுக்கள் நடத்தப் போவ­தாகத் தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­தது. விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டார்கள். இதன் மூலம், அர­சாங்­கத்­தினால் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­வாறு – பேச்­சு­வார்த்­தைக்குத் தடை­யாக இருந்த விடு­த­லைப்­பு­லிகள் அரங்­கத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட்­டி­ருந்­தார்கள். தேர்­தல்­களும் நடத்­தப்­பட்­டன.

பல்­வேறு சாதக பாதக நிலை­மை­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற தேர்­தல்­களில் பெரும்­பான்­மை­யான தமிழ் மக்கள் கூட்­ட­மைப்­பி­ன­ரையே தமது பிர­தி­நிதிகளாகத் தெரிவு செய்­தி­ருந்­தனர். எனினும் வாக்­க­ளித்­தி­ருந்­த­படி, அர­சாங்கம் அவர்­க­ளுடன் பேச்­சுக்கள் நடத்­து­வதற்குத் தானாக முன்­வ­ரவே இல்லை.

இந்­தியா உள்­ளிட்ட வெளி அழுத்­தங்­க­ளுக்குப் பணிந்து, அரசு கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்­சுக்­களை நடத்­து­வ­தாகத் தெரி­வித்து, ஒரு வருட காலத்­திற்கு இழுத்­த­டித்து, ஓர் ஏமாற்று நாட­கத்தை நடத்­தி­யி­ருந்­தது.

ஆனால், இப்­போது வட­மா­காண சபைக்­கான தேர்­தல்கள் நடத்­தப்­பட்டு, சுமார் ஒரு வருட காலம் நிறை­வ­டையப் போகின்ற நிலையில், 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தை­களை நடத்தத் தயா­ராக இருப்­ப­தாக ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்திருக்கின்றார்.

பதின்­மூன்­றா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் பிர­ச­வமே மாகாண சபை முறை­மை­யாகும். இந்தச் சட்­டத்தில் மாகாண சபை­க­ளுக்கு என்­னென்ன அதி­கா­ரங்கள் இருக்­கின்­றன என்­பது தெளி­வாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆயினும் அந்த அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்த முடி­யா­த­வாறு பல்­வேறு தடை­களை ஏற்­ப­டுத்தி வட­மா­காண சபையின் நிர்­வாகச் செயற்­பா­டு­களை அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக முடக்கி வரு­கின்­றது.

சாதா­ரண விட­யங்­க­ளைக்­கூட வட­மா­காண சபை முன்­னெ­டுக்­கவோ அல்­லது அந்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பான வேலைத்­திட்­டங்­க­ளையே செயற்­ப­டுத்­தவோ முடி­யா­த­வாறு பல்­வேறு வழி­களில் அர­சாங்கம் தடை­களைப் போட்­டுள்­ளது.

இதற்கு முக்­கிய கரு­வி­யாக வட­மா­காண ஆளு­ந­ரையும், அதற்கு உத­வி­யாக மாகாண சபையின் பிர­தம செய­லா­ள­ரையும் அர­சாங்கம் தாரா­ள­மாகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றது.

வட­மா­காண சபைக்கு அர­சாங்­கத்­தினால் முறைப்­படி ஒதுக்க வேண்­டிய நிதியை முழு­மை­யாக அர­சாங்கம் இன்னும் ஒதுக்­க­வில்லை என்று வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் பகி­ரங்­க­மாகக் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்றார்.

வட­மா­காண சபையின் வரவு செலவுத் திட்­டத்தின் போது, அந்த மாகாணத்தின் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கு, அந்த மாகாண சபைக்கு இப்­போ­துள்ள நிதிக்­கட்­ட­மைப்பின் ஊடாக வழங்­கப்­ப­ட­வுள்ள நிதி போது­மா­ன­தல்ல என்­பதை முத­லமைச்சர் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

vikisureshவட­மா­காணம் – விசேடதேவைக்­கு­ரிய மாகாணம்

வட­மா­காணம் என்­பது விசேட தேவைக்கு உட்­பட்ட பிர­தே­ச­மாகும். மனி­தர்­களில் விசேட தேவைக்கு உட்பட்.டவர்­களை, சாதா­ரண மனி­த­ருடன் ஒப்­பிட்டு நடத்­து­வ­தில்லை.

அவர்­களின் விசேட தேவைகள் கவ­னத்திற் கொள்­ளப்­பட்டு, அதற்­கேற்ற வகையில் அவர்­க­ளுக்கு வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டு­வ­துண்டு. வெறும் மனி­தா­பி­மா­னத்­திற்­காக இது செய்­யப்­ப­டு­வ­தில்லை.

மனி­தா­பி­மா­னத்தைக் கடந்த நிலையில் அவர்­க­ளு­டைய நிலை­மை­களைக் கவ­னத்­திற்­கொண்டு. அவர்­க­ளுக்­கு­ரிய உரி­மை­யா­கவே அந்த வச­திகள் செய்­யப்­ப­டு­கின்­றது. சக்­கர நாற்­கா­லி­களில் செல்­கின்ற விசேட தேவைக்­க­ரு­தியே, பொதுச் சேவை­களை வழங்­கு­கின்ற அரச கட்­டி­டங்­களில் ரயில் நிலையம் போன்ற போக்­கு­வ­ரத்து நிலை­யங்­களில் அவர்­க­ளுக்­கான விசேட பாதைகள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

விழிப்­பு­ல­னற்ற விசேட தேவைக்கு உட்­பட்­ட­வர்­களின் உரி­மை­களை மதிப்­பதன் கார­ண­மா­கத்தான், பெருந்­தெ­ருக்­களில் கூட அவர்கள் இல­கு­வாக நடந்து செல்­லத்­தக்க வகை­யி­லான நடை­பா­தைகள் நாடெங்­கிலும் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த வகை­யில்தான் வட­மா­காண சபையின் விசேட தேவை­களும் கவ­னத்திற் கொள்­ளப்­பட்டு, அதற்­கான அதி­கா­ரங்­களை வழங்கி, நிதி வச­தி­க­ளையும் அர­சாங்கம் செய்­தி­ருக்க வேண்டும்.

ஏனெனில் நீண்ட கால­மாக அங்கு சிவில் நிர்வாகம் சீராக நடை­பெற்­றி­ருக்­க­வில்லை. யுத்தம் கார­ண­மாக அந்தப் பிர­தே­சத்தின் சகல கட்­ட­மைப்­புக்­களும் நிர்­மூ­ல­மா­கி­யி­ருக்­கின்­றன. மக்­களின் வாழ்க்கை, அவர்­களின் வாழ்க்கை முறை­மைகள், வாழ்­வி­டங்கள், என பல வழி­க­ளிலும் அந்தப் பிர­தேசம் சீர­ழிந்து கிடக்­கின்­றது.

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர்அங்கு மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்­டுள்ள அர­சாங்கம் பொது வச­தி­களை மேம்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்­பது உண்­மைதான். உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை சீர் செய்­தி­ருக்­கின்­றது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

ஆனால் அங்கு அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள புனர்­வாழ்வு மற்றும் புனர்­நி­ர்மாண நட­வ­டிக்­கைகள் யானைப் பசிக்கு சோளப் பொரி போட்ட வகை­யி­லேயே இருக்­கின்­றன. அந்தப் பிர­தே­சத்­தி­னதும் அங்­குள்ள மக்­க­ளி­னதும் தேவைகள் அதிகம். அவற்றைப் பூர்த்தி செய்­யத்­தக்க வகையில் செயற்­பா­டுகள் இன்னும் முழு­மை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யில்தான், 5831 மில்­லியன் ரூபாவை வட­மா­காண விருத்­திக்கு நாம் ஒதுக்­கி­யுள்ளோம் என்று கூறி விட்டு 1876 மில்­லியன் ரூபாவை மட்டும் அர­சாங்கம் வட­மா­காண சபைக்குத் தந்­துள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் கூறி­யி­ருக்­கின்றார். மிகு­தி­யான 3955 மில்­லியன் ரூபாவை அர­சாங்கம் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்து செலவு செய்து கொண்­டி­ருப்­ப­தாக அவர் தகவல் தெரி­வித்­துள்ளார்.

இந்தத் தொகை எவ்­வாறு எதற்கு செலவு செய்­யப்­ப­டு­கின்­றது என்­பதை வட­மா­காண சபைக்கு அர­சாங்கம் தெரி­விக்­கா­ம­லேயே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்­கின்றார். அது மட்­டு­மல்­லாமல், அர­சாங்கம் வட­மா­காண சபைக்கு பெரு­ம­ளவு நிதியை ஒதுக்­கீடு செய்­துள்­ளது,

அந்த நிதியை வட­மா­காண சபையை நிர்­வாகம் செய்­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் செல­வி­டு­வ­தில்லை என அரச ஊட­கங்­களின் ஊடாக எதிர்ப் பிர­சா­ரத்­தையும் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

வட­மாகாண சபைக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதியில் பத்து வீதத்தைக் கூட அவர்கள் செலவு செய்­ய­வில்லை என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்சரு­மா­கிய கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல வாராந்த செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் வாய் கூசாமல் கூறி­யி­ருக்­கின்றார்.

அர­சாங்­கத்தின் இந்தப் போக்­கா­னது, தமிழ்ப்­பேசும் மக்­களின் ஆதங்­கங்­களை, அபி­லா­ஷைகளை, ஆசை­களை, எதிர்­பார்ப்­புக்­களை அடி­யோடு சாய்த்துத் தமது கர­வான நிகழ்ச்சித் திட்­டங்­க­ளுக்கு மெரு­கூட்ட விழை­வதை எடுத்துக் காட்­டு­கின்­றன.

இதற்கு எம்­ம­வர்­களில் சிலர் ஒத்­தூ­து­வது வருத்தத்தைத் தரு­கின்­றது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

கூட்­ட­மைப்பும் பேச்­சுக்குத்தயார், ஆனால்…….ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச கூட்­ட­மைப்­பி­னர்தான் தன்­னுடன் பேசு­வ­தற்கு வரு­கின்­றார்­க­ளில்லை. ஆனால் தான் தய­ராக இருப்­ப­தாகத் தெரி­விப்­ப­தற்கு முன்பே, வவு­னி­யாவில் நடை­பெற்ற இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தேசிய மாநாட்டில் வைத்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அர்த்­த­முள்ள ஒரு பேச்­சு­வார்த்­தைக்குக் கூட்­ட­மைப்பு தயா­ராக இருக்­கின்­றது என கூறி­யி­ருந்தார்.

பேச்­சு­வார்த்­தை­யா­னது, தமிழ் மக்­களின் உரி­மை­களைப் பற்­றி­ய­தாக, அவர்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் நிலைப்­பா­டு­களை சுதந்­தி­ர­மாக உறுதி செய்­யத்­தக்க ஒரு தீர்வைப் பற்­றி­ய­தாக இருக்க வேண்டும் என்­பது தமிழர் தரப்பின் நிலைப்­பா­டாகும்.

முன்­னைய சந்­தர்ப்­பங்­களில் பட்­ட­றிந்த கசப்­பான அனு­ப­வங்­களை மனதில் கொண்டு, பேச்­சு­வார்த்­தைகள் என்­பது சர்­வ­தேச பிர­சன்­னத்­துடன் – சர்­வ­தேச கண்­கா­ணிப்பில் நடை­பெற வேண்டும் என்­பதை சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

அத்­துடன் நடை­பெ­று­கின்ற பேச்­சு­வார்த்­தைகள் குறிப்­பிட்ட குறு­கிய ஒரு காலப் பகு­திக்குள் நடத்தி முடிக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் நிபந்­த­னை­யாக அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச பேச்சு நடத்­து­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாகக் கூறிய பின்­னரும், கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தன்­னு­டைய நிலைப்­பாட்டை மீண்டும் வலி­யு­றுத்தி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அர­சாங்­கத்தைப் பொருத்­த­மட்டில், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தை­யென்­பது, பொழுது போவ­தற்கும், காலத்தை இழுத்­த­டிப்­ப­தற்­கு­மான ஒரு காரி­ய­மா­கவே இருந்து வரு­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் – தமிழ் மக்­க­ளையும் இந்த நாட்டின் கௌர­வ­மிக்க பிர­ஜை­க­ளாகக் கருதி உரி­மை­க­ளுடன் வாழ வழி­செய்ய வேண்டும் என்­பதில் அர­சாங்­கத்­திற்கு சிறிதும் அக்­க­றையோ, ஆர்­வமோ இருப்­ப­தாகத் தெரி­யி­வில்லை.

அத்­த­கைய பொறுப்­பு­ணர்ச்சி இருந்­தி­ருக்­கு­மே­யானால், யுத்தம் முடி­வுக்கு  வந்­த­தை­ய­டுத்து கடந்த ஐந்து வரு­டங்­களில் எத்­த­னையோ மாற்­றங்­களை அர­சாங்கம் செய்­தி­ருக்கும் – செய்­தி­ருக்க வேண்டும். தமிழ் மக்­களின்   நல்­வாழ்­வையும் அவர்­களின் அர­சியல் நலன்­க­ளையும் சீர் செய்ய வேண்டும் என்பதற்குப் பதி­லாக நாளுக்கு நாள் நிலை­மை­களைச் சீர­ழித்து, அவர்­களின் அன்­றாட வாழ்க்­கை­யையே, அரசு யுத்த காலத்து வாழ்க்­கை­யிலும் பார்க்க மோச­மா­ன­தாக்க்­யி­ருக்க மாட்­டாது.

அது மட்­டு­மல்ல. ஏற்­க­னவே அர­சி­ய­ல­மைப்பில் உறுதி செய்­யப்­பட்­டுள்ள மாகாண சபைக்­கான அதி­கா­ரங்­களை வழங்­காமல், 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது பற்றி திறந்த மன­துடன் பேச்­சுக்கள் நடத்­து­வ­தற்குத்  தயார் என்று ஜனாதிபதி கூறியிருக்கமாட்டார்.

பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை விடுத்து, இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்துவதற்கே ஜனாதிபதிமுன் வர வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எனவே அதனைப் பற்றி பேச்சுக்கள் நடத்த வேண்டிய தேவையே கிடையாது என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஜனாதிபதி அதற்கு முன்வருவாரா?

Share.
Leave A Reply