தமி­ழ­ரசுக் கட்­சியா, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பா, எது முதன்மை பெறப்­போ­கின்­றது? – வவு­னி­யாவில் நடை­பெற்ற இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் 15ஆவது தேசிய மாநாட்­டை­ய­டுத்து, இடம்­பெற்று  வரு­கின்ற நிகழ்­வு­களும் போக்­கு­களும் இந்தக் கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கின்­றன.

தமி­ழ­ரசுக் கட்­சியை முதன்­மைப்­ப­டுத்த வேண்டும் என்ற போக்கு அந்தக் கட்­சிக்­கா­ ரர்கள் மத்­தியில் யுத்தம் முடி­வ­டைந்த பின் னர் ஆரம்­பித்து படிப்­ப­டி­யாக வளர்ச்­சி­ய ­டைந்து வந்­துள்­ளதை வவு­னியா மாநாடு தெளி­வாக உணர்த்­தி­யி­ருந்­தது.

பழை­மை­யான, உறு­தி­யான கொள்­கை­க­ளை­யு­டைய அந்தக் கட்­சியை உயிர்ப்­பித்து அதன் தலை­மையில் செயற்­ப­டு­வதன் ஊடா­கத்தான், இன்­றைய அரசியல் சூழலில்  தமிழ் மக்­களின் உரி­மை­களை  நம்­பிக்­கைக்­கு­ரிய வகையில் பெற முடியும் என்­பது தமி­ழ­ரசுக் கட்­சி­யி­ன­ரு­டைய அசைக்க முடி­யாத நம்­பிக்கை­யாக இருக்­கின்­றது.

தந்தை செல்­வாவின் தலை­மையில் இயங்­கிய தமி­ழ­ரசுக் கட்­சியின் செயற்­பா­டு­களை இந்த நம்­பிக்­கைக்கு ஆதா­ர­மாக, அவர்கள் முன்­வைத்துச் செயற்பட்டு வரு­கின்­றார்கள்.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் தனித்துச் செயற்­பட்டு, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­யாது என்ற அப்­போ­தைய அர­சியல் சூழலில் நன்­கு­ணர்ந்­தி­ருந்த தந்தை செல்வா, மலை­ய­கத் தின் முன்­னணி கட்­சி­யா­கிய  இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸையும்  உள்­ள­டக்­கி­ய­தாகத் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை உரு­வாக்கி செயற்­பட்­டி­ருந்தார்.

அவ்­வாறு உருவாக்­கப்­பட்­டி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும் பின்னர் செய­லி­ழந்து, விடு­த­லைப்­பு­லிகள் அர­சி­யலில் உச்சம் பெற்­றி­ருந்­த­போது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உரு­வாக்­க­ப்­பட்­டது.

காலத்தின் தேவை கரு­தியும், அன்­றைய தமிழர் அர­சியல் சூழ்­நிலை கார­ண­மா­க­வுமே, இந்த மாற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது என்று அர­சியல் ஆய்­வா­ளர்கள் சுட்டிக்­காட்­டியிருக்­கின்­றார்கள்.

Prabha_and_new_MPs_DM20040421விடு­த­லைப்­ பு­லி­களின் காலத்தில் தமிழ் மக்­களை அர­சியல் ரீதி­யாக நாட்டின் அதி­யுயர் ஜன­நா­யகக் கட்­ட­மைப்­பா­கிய பாராளு­மன்­றத்­திலும், அடி­மட்டக் கட்­ட­மைப்­புக்­க­ ளா­கிய உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும்  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பே பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இருந்த போதிலும், இந்தக் கட்­ட­மைப்­புக்­களில் விடு­த­லைப்­பு­லி­களின் நிழல் பிர­தி­நி­தி­க­ளா­கவே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் செயற்படநேர்ந்­தி­ருந்­தது.

இலங்கை அர­சி­யலில் ஆயுத பலம் என்ற இரா­ணுவ சக்­தியே அப்­போது மேலா­திக்கம் பெற்­றி­ருந்­த­மையே இதற்குக் கார­ண­மாகும். இலங்­கையின் அரச படை­க­ளையே ஆட்டம் காணச் செய்யும் அள­விற்கு விடு­த­லைப்­பு­லிகள் அப்­போது இரா­ணுவ ரீதி­யாகப் பலம் பெற்­றி­ருந்­தார்கள்.

அத்­துடன் அர­சியல் செயற்­பா­டு­களை மேவி யுத்த மோதல்கள் முனைப்புப் பெற்று, இரா­ணுவ சம பலத்தில் அர­சியல் அப்­போது நிலை­கொண்­டி­ருந்­தமையே இதற்குக் கார­ண­மாகும்.

இறுதி யுத்­தத்தில் விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, நாட்டின் சிவில் அர­சியல் செயற்­பா­டுகள் வேகத்­தோடு தலை­யெ­டுத்­தன. விடுதலைப்­பு­லி­களின் தலை­வர்கள் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டி­ருந்­த­தை­ய­டுத்து, அந்த அமைப்பின் நிழல் செயற்­பாட்டுக் கட்­ட­மைப்­பாக இருந்த தமிழ்த்­தே­சிய கூட்டமைப்பின்  மீது தமிழ் மக்­களின் அர­சியல் தலைமைப் பொறுப்பு வந்­தி­றங்­கி­யது.

ஏற்­க­னவே, பாராளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­துவம் பெற்­றி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை அர­சாங்­கமும், சர்­வ­தே­சமும் தமிழ்த் தரப்பின் அர­சியல் தலை­மை­யாக ஏற்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு ஆளா­கி­யி­ருந்­தன.

இத்­த­கைய ஒரு சூழ­லில்தான், அர­சாங்கம் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர் நடத்­திய தேர்­தல்­களில் மக்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பிற்கு அமோ­க­மாக ஆத­ர­வ­ளித்து, தமது பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்­தி­ருந்­தார்கள்.

பாரா­ளு­மன்ற தேர்தல் மட்­டு­மல்­லாமல், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையே, வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் தமிழ் மக்கள் தெரிவு செய்­தி­ருந்­தார்கள்.

விடு­த­லைப்­பு­லி­களை அழித்­ததன் பின்னர், விடு­த­லைப்­பு­லி­க­ளினால் கேட­ய­மாக வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் மக்­களை, தானே மீட்டு எடுத்துப் பரா­ம­ரித்து மீள்­கு­டி­யேற்றம் செய்­த­தா­கவும், யுத்த அழி­வு­க­ளுக்கு உள்­ளா­கிய அந்த மக்­களின் வாழ்க்­கையைத் துளிர்க்கச் செய்­வ­தற்­காக, தானே பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­தாக அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருந்த பிர­சா­ரங்கள் தமிழ் மக்கள் மத்­தியில் பெரி­தாக எடு­ப­ட­வில்லை.

தேர்­தல்­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வெற்­றி­பெற்­று­விடக் கூடாது என்­ப­தற்­காக, அர­சாங்கம் பல்­வேறு வழி­க­ளிலும் தடை­க­ளையும் இடர்ப்­பா­டு­க­ளையும் தோற்­று­வித்­தி­ருந்த போதிலும், தமிழ் மக்கள் அந்த முட்­டுக்­கட்­டைகள் அனைத்­தையும் கடந்து தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பிற்கே ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தார்கள்.

தமி­ழ­ரசுக் கட்­சியின் வகி­பாகம்

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, தமிழ்க்­காங்­கிரஸ் ஈ.பி.­ஆர்.­எல்.எவ்., ரெலோ, தமிழர் விடு­தலைக் கூட்­டணி ஆகிய கட்­சிகள் ஆரம்­பத்தில் தமிழ்த்­தே­சிய கூட்டமைப்பில் இணைந்­தி­ருந்­ததன் பின்னர், புளொட் அமைப்­பி­னரும் கூட்­ட­மைப்பில் இணைந்து கொண் டார்கள். கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யாக தமி­ழ­ரசுக் கட்­சியே விளங்­கி­யது, விளங்கி வரு­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பல கட்­சி­க ளின் கூட்­டாக இருக்­கின்­ற­தே­யொ­ழிய அதற்­கென தனி­யான சின்­னமோ கட்­ட­மைப்போ கிடை­யாது. ஒன்­றரை தசாப்தங்­க­ளுக்கு மேலாக தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகத் திகழ்­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்னத்­தி­லேயே தேர்­தல்­களில் களம் இறங்கி வரு­கின்­றது.

இந்த நிலையில் தலைமைப் பொறுப்புடன், கூட்­ட­மைப்பைக் கட்­டுப்­ப­டுத்­து­கின்ற அல்­லது வழி­ந­டத்­து­கின்ற ஒரு சக்­தி­யாக தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர்களே விளங்­கு­கின்­றார்கள்.

முக்­கி­ய­மாக தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்­காக வேட்­பாளர் பட்­டி­யல்­களைத் தீர்­மா­னிப்­ப­திலும், அவற்றை அங்­கீ­க­ரித்து, தேர்தல் சட்­ட­ரீ­தி­யான நடை­முறை­க­ளுக்­க­மை­வாக தேர்தல் திணைக்­க­ளத்தில் சமர்ப்­பிக்கும் ஆளு­மையும் அதி­கா­ரமும் அவர்­களின் கைக­ளி­லேயே இருந்து வரு­கின்­றன.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற கூட்டு அமைப்பின் பெயர் தமிழ் மக்­களின் அர­சியல் அடை­யா­ள­மாகத் திகழ்ந்த போதிலும், தேர்­தல்­களில் போட்டியிடுகின்ற வேட்­பா­ளர்­களை பரிந்­து­ரைத்து தேர்தல் திணைக்­க­ளத்தில் சமர்ப்­பிப்­ப­தற்­கான கையெ­ழுத்­திடும் அதி­காரம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செய­லா­ள­ருக்கே இருக்­கின்­றது. இதன் மூலம், தமி­ழ­ரசுக் கட்­சியே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் சக்தி வாய்ந்த ஒரு கட்­சி­யாக – தலைமைக் கட்­சி­யாகத் திகழ்­கின்­றது.

தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்கள் பட்­டி­யலில் யார் யாரை சேர்ப்­பது என்­பது குறித்து, கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சிகள் தமக்குள் பேச்­சுக்கள் நடத்தி தீர்­மா­னித்து வந்­துள்ள போதிலும், தமி­ழ­ர­சுக்­கட்சி தனக்கு வேண்­டா­த­வர்­களை நீக்­கி­விடக் கூடிய அல்­லது ஒதுக்கித் தள்­ளி­விடக் கூடிய சக்­தியைப் பெற்­றி­ருந்­தது.

இதன் கார­ண­மாகவே, கூட்­ட­மைப்பில் இணைந்து பாராளு­மன்றப் பிர­தி­நி­தி­க­ளாக இருந்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், பத்­மினி சிதம்­ப­ர­நாதன் போன்ற­வர்­க­ளையும், சிவ­நா தன் கிஷோர் உள்­ளிட்­ட­வர்­க­ளையும் தமி ழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து அந்தக் கட்­சி­யி னால் நீக்கக் கூடி­ய­தாக இருந்தது.

Sampanthanதமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ராக இருந்த ஆர்.சம்­பந்­தனே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப் பின் தலை­வ­ரா­கவும் இருந்தார். இப்­போதும் இருக்­கின்றார். இந்தத் தலைமைப் பத­வியின் அதி­கா­ரத்தை அவர் அந்­தந்த சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ற வகையில், தனக்கே உரிய அர­சியல் இயல்­போடு வலு­வான முறையில் பயன்ப­டுத்தி வந்­துள்ளார்.

அவ­ரு­டைய இந் தச் செயற்­பாட்டை அர­சியல் ஆய்­வா­ளர்கள் சிலர் சம்­பந்­தனின் இரா­ஜ­தந்­திரம் அல்­லது அர­சியல் சாணக்­கியம் என்று வர்­ணிக்­கின்றார்கள்.

சம்­பந்­தனின் அர­சியல் சாணக்­கியம்

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்­கா­கவே தமிழ், இளை­ஞர்கள் பல்­வேறு குழுக்­க­ளாக இணைந்து ஆயு­த­மேந்திப் போராடினார்கள். மித­வாதத் தமிழ் அர­சியல் தலை­வர்­களின் சாத்­வீகப் போராட்­டங் களை வன்­மு­றையின் மூலம் இலங்கை அர­சுகள் முறி­ய­டித்து வந்­த­தையும், தமிழ் மக்­களை தூண்டிவிடப்­பட்ட வன்­செ­யல்­க ளின் மூலம் பழி­வாங்கி அடக்­கி­யொ­டுக்­கு­ வ­தற்கு அர­சாங்­கங்கள் எடுத்­தி­ருந்த நட­வ­டிக்­கைகள் எடுத்­தி­ருந்­த­தையும் பொறுக்­க­மாட்­டாத நிலை­யி­லேயே தமிழ் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்த நேரிட்­டி­ருந்­தது.

பல குழுக்­க­ளாக இளை­ஞர்கள் பிரிந்­தி­ருந்து நடத்­திய போராட்டம் சகோ­தரப் படு­கொ­லை­க­ளுக்கு வழி­யேற்­ப­டுத்தி, அது இறுதிக் கட்டத்தை அடைந்து ஆயுதப் போராட்­டத்தின்  தலைமை விடு­த­லைப்­பு­லி­களின் கையில் சென்­ற­டைந்­தி­ருந்­தது.

ஆயினும்….  விடு­த­லைப்­பு­லி­களை அரசாங்கம், இந்­தியா உட்­பட பல உலக நாடு­களின் உத­வி­யோடு விடு­த­லைப்­பு­லி­களை இல்­லா­தொ­ழித்­தது. இதன் மூலம் முப்­பது வரு­டங்­க­ளாக நில­விய பயங்­க­ர­வா­தத்தை ஒழித்துக் கட்­டி­ய­தாகப் பெருமை பேசி அதனை மாபெரும் வெற்­றி­யாக மாற்­றி­விட்­டது.

விடு­த­லைப்­ப­ுலி­களின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையும் ஒரு பயங்­க­ர­வாத அமைப்­பா­கவே அரச தரப்­பினர் கரு­து­கின்­றனர். அர­சுக்கு ஆத­ர­வான பௌத்த மத­வாத தீவிர சக்­திகள் இப்­போதும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரைப் பயங்­க­ர­வா­தி­க­ளுக்குத் துணை­போ­ன­வர்கள், இப்போதும் துணை­போ­கின்­றார்கள் என்று இன­வாதப் பிர­சாரம் செய்­வதைக் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­மையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­லும்­பார்க்க, தமி­ழ­ரசுக் கட்­சியை முதன்­மைப்­படுத்தி தமிழர் தரப்பு அர­சியல் செயற்­பாட்டை முன்­னெ­டுத்துச் செல்­ல­வேண்டும் என்ற நிலைப்­பாடு, தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­­மை­யிடம் காணப்­ப­டு­கின்­றது.

இதையும்­ விட, பழம் பெரும் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சியை மீண்டும் மக்கள் மத்­தியில் செல்­வாக்கு பெற்ற கட்­சி­யாக வளர்த்­தெடுக்க வேண்டும் என்று அந்தக் கட்­சியில் ஊறித்­தி­ளைத்­த­வர்கள் தீராத விருப்­பத்தைக் கொண்­டி­ருப்­ப­தையும் உணர முடி­கின்­றது.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், முன்னர் ஆயு­த­மேந்திப் போராட்டம் நடத்தி, பின்னர் ஜன­நா­யக வழிக்குத் திரும்பி, கூட்­ட ­மைப்பில் பங்கா­ளி­க­ளாக உள்­ள­வர்­களை, தமி ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் சிலர், தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போதும் மற்றும் சந்­தர்ப்­பங்கள் கிடைக்­கும்­போதும் இரத்­தக்கறை படிந்த­வர்கள் என்று மக்கள் மத்தியில் சுட்­டிக்­காட்டி, அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கூடாது என்ற வகையில் பிர­சாரம் செய்து வரு­கின்­றார்கள்.

அது மட்­டு­மல்­லாமல், அர­சியல் சூழலின் நிர்ப்­பந்தம் கார­ண­மாக, முன்னாள் போர­ாளி­க­ளாக இருந்­த­வர்­களின் கட்­சி­க­ளுடன் கூட்டு சேர்ந்­தி­ருக்க நேரிட்டிருக்­கின்றதே என்ன செய்­வது, என்­ற­வொரு அர­சியல் மனப்­பாங்கில் தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் கூட்­ட­மைப்பில் செயற்­பட்டு வரு­வதைப் பலரும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

இத்­த­கைய போக்கு கார­ண­மா­கவே, தமிழ் த்­தே­சிய கூட்­ட­மைப்பை ஓர் அர­சியல் அமைப்­பாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஏனைய கட்­சி­களின் விருப்பமும், கோரிக்­கையும் பெய­ர­ள­வி­லேயே தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரால் ஏற்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால­மா­கவே முன்­வைக்­கப்­பட்டு, விவா­திக்­கப்­பட்டு, அதற்­கான ஏற்­பா­டு­க ளைச் செய்ய வேண்டும் என்று இணக்கம் காணப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், அது இன்­று­வ­ரை­யிலும் சாத்­தி­ய­மா­க­வில்லை.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை முதன்­மைப்­ப­டுத்­து­வ­தை­யும்­விட, தமி­ழ­ரசுக் கட்­சியை மேம்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்­கமே இதற்­கான முக்­கிய காரணம் என பலரும் கரு­து­கின்­றார்கள்.

அதே­நேரம், போருக்குப் பிந்­திய தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யா­னது, அர­சாங்கம் அல்­லது அர­சாங்கத் தரப்பைச் சார்ந்த தீவி­ர­வா­திகள் குறிப்­பி­டு­வதைப் போன்று பயங்­க­ர­வா­தத்­துடன் எத்­த­கைய தொடர்பும் அற்­றது என்­பதை, நடை­மு­றையில் காட்­டு­வ­தற்­காகத் தமி­ழ­ரசுக் கட்­சியில் – அதன் ஊடாகத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில்; புதுப்­பு­னலைப் பாய்ச்­சு­வது போன்ற நட­வ­டிக்­கை­களை அந்த அமைப்­புக்­களின் தலை­வ­ரா­கிய சம்­பந்தன் மேற்­கொண்டு வரு­கின்றார்.

sampanthan-and-vicneswaranஇத்­த­கைய ஒரு போக்கில்தான், சட்­டத்­த­ர­ணி­யா­கிய சுமந்­திரன் தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் உள்­வாங்­கப்­பட்டார், அதனைத் தொடர்ந்து தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் ஏற்பட்ட மோச­மான எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யிலும், மாவை சேனா­தி­ரா­ஜாவைப் புறந்­தள்ளி, வட­மா­காண சபையின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நீதித்துறையைச் சார்ந்­த­வரும் மக்கள் மத்­தியில் செல்­வாக்கு பெற்­றி­ருப்­ப­வ­ரு­மா­கிய விக்­னேஸ்­வ­ரனை சம்­பந்தன் கொண்டு வந்தார் என்று, அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றனர்.

தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையில் மாற்றம்

itak_manadu_001வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ராக வரக்­கூ­டிய சந்­தர்ப்­பத்தை வழங்­காமல் மாவையைத் தள்ளி வைத்­தி­ருந்த சம்­பந்தன், தமி­ழ­ர சுக் கட்­சியின் 15 ஆவது மாநாட்டில் அந்தக் கட்­சியின் தலைமைப் பத­வியை வழங்­கி­யி­ருக்­கின்றார். இதுவும் அவ­ரு­டைய அர­சியல் சாணக்­கிய நட­வ­டிக்­கை­யா­கவே பார்க்கப்­ப­டு­கின்­றது.

இதன் மூலம் தமி­ழ­ரசுக் கட்­சியை வழி­ந­டத்திச் செல்­கின்ற பெரு­மைக்­கு­ரிய பொறுப்பை மாவை சேனா­தி­ரா­ஜா­வுக்கு அவர் வழங்­கி­யி­ருக்­கின்றார். அத்­துடன், மாவைக்கு நெருக்­க­மான ஆத­ர­வா­ளர்­களின் மனக்­கு­றை­யையும் அவர் இதன் மூலம் போக்­கி­யி­ருப்­ப­தா­கவே பேசப்­ப­டு­கின்­றது.

அதே­நேரம், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையை மாவை­யிடம் ஒப்­ப­டைத்து, கட்சிச் செயற்­பா­டு­களை அவ­ரு­டைய பொறுப்பில் விட்­டு­விட்டு, தமி­ழ­ரசுக் கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை அரச மட்­டத்­திலும், சர்­வ­தேச மட்­டத்­திலும் முன்­னெ­டுப்­ப­தற்­கான வாய்ப்­பையும் அவர் உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்றார் என்­பது, தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பொறுப்பில் செய்­யப்­பட்­டுள்ள மாற்­றத்தின் மூலம் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் வவு­னியா மாநாட்­டை­ய­டுத்து, முதற் தட­வை­யாக திரு­கோ­ண­ம­லையில் கூடிய மத்­திய செயற்­குழு கூட்­டத்தில், அந்தக் கட்­சியின் அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து எடுக்­கப்­பட்­டுள்ள முக்­கிய முடி­வுகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பிலும் பார்க்க தமி­ழ­ரசுக் கட்­சியை முதன்­மைப்­ப­டுத்த வேண்டும் என்ற சம்­பந்­தனின் அர­சியல் காய் நகர்த்தல் முயற்சி வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் திரு­கோ­ண­ம­லையில் கூடு­வ­தற்கு முன்­ன­தாக கொழும்பில் கூடி­ய­தாகச் சொல்­லப்­ப­டு­கின்ற தமிழ்த்­தேசிய கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டத்தில், கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வது, கூட்­ட­மைப்பை அர­சியல் ரீதி­யாகப் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக பல­த­ரப்­பட்ட மக்கள் அமைப்­புக்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக தேசிய சபை­யொன்றை அமைப்­பது என்­பது உள்­ளிட்ட நான்கு முக்­கிய தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இவ்­வாறு தகவல் வெளி­யா­கி­யி­ருந்த சூட் ­டோ­டுதான் திரு­கோ­ண­ம­லையில் தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் கூடி­யது பற்­றியும், தமி­ழ­ரசுக் கட்­சியின் உள்ளூர் மற்றும் சர்­வ­தேச விவ­கா­ரங்­களைக் கையாள்­வ­தற்­காக, பாராளு­மன்ற உறுப்­பி­னரும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய ஆர்.சம்­பந்தன் தலை­மையில் அர­சியல் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டி­ருப்­பது பற்­றியும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

indexஅதே­நேரம், இந்தக் கூட்­டத்தில் தமி­ழ­ரசுக் கட்­சியின் உள்ளூர் மற்றும் சர்­வ­தேச பேச்­சா­ள­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் நிய­மிக்­கப்­பட்டிருக்கின்றார்.

தமிழ் மக்­கள்­மீது பல்­வேறு வழி­களில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நெருக்­கு­தல்­களை டிசம்பர் மாதத்­திற்­கி­டையில் அர­சாங்கம் நிறுத்த வேண்டும். இல்­லையேல் அடுத்த வருடம் ஜன­வரி மாதத்தில் பரந்த அளவில் சாத்­வீகப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் என்று தமி­ழ­ரசுக் கட்­சியின் வவு­னியா மாநாட்டில் முக்­கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்காக நாட்டில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளினதும் நேச சக்திகளினதும் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும் என்றும், இந்தப் போராட்டத்தில் மக்கள் தமிழரசுக் கட்சியின் பின்னால் அணிதிரள வேண்டும் என்றும் இப்போது தமிழரசுக் கட்சியினால் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

mavai-1கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா பொறுப்பேற்றதையடுத்து, கிளிநொச்சியில் தொடங்கி, கொழும்பு வரையில் வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் பல இடங்களிலும் புதிய தலைவருக்கும் முன்னாள் தலைவர் உட்பட கட்சியின் முக் கியஸ்தர்களுக்குப் மாலை மரியாதைகளுடன் பெரிய அளவில் வரவேற்பளிக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் செயற்பாடும் கூட, தமிழரசுக் கட்சிக்கு ஓர் எழுச்சியைக் கொடுப்பதற்காகவே மேற்கொ ள்ளப்பட்டிருப்பதாகத் தோன்று கின்றது.

தமிழரசுக்கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டபோதும்சரி, அதற்குப் பின்னரும்சரி, தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்தும் பிரசாரப் பேச்சுக்களே முக்கியத்துவம் பெற் றிருக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பற்றியோ அதன் செயற்பாடுகள் பற்றியோ அந்தப் பேச்சுக்களில் எதுவும் குறிப்பிடப்பட் டதாகத் தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் தமிழரசுக் கட்சி முன்னெடுக்கவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் மக்களை அணிதிரள வேண்டும் என அழைப்பு விடு த்த சம்பந்தன்,    இந்தப் போராட்டம் கட்சி ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளி யாகியிருந்ததைக் காணக்கூடியதாக இருந் தது.

அத்தகைய கருத்தை அவர் வெளியிட் டிருப்பாரேயானால், முன்னெடுக்கப்படவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மலைபோல நம்பியிருக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு என்ன என்ற முக்கியமான கேள்வி எழுகின்றது.

இந்தப் பின்னணியில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பே, தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமையென்று பலரும் கரு தியிருக்கின்ற வேளையில்தான் தமிழரசுக் கட்சியா, தமிழ்த்தேசிய கூட்டமைப்பா, எது முதன்மை பெறப்போகின்றது என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

Share.
Leave A Reply