அண்மையில் யாழ்ப்பாணத் தில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடையிலான உயர்மட்டக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை முன்னிலைப்படுத்தி, கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் தான், தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இதனுடன் தொடர்புடைய கட்சியாக இருந்த போதிலும், புளொட் எந்தக் கரு த்தையும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியிடவில்லை.
கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சியுடன் மட்டுந்தான் இணைந்திருக்க முடியு மேயொழிய, வன்முறையோடு சம்பந்தப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்.,ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் அவ்வாறு இணைந்திருக்க முடியாது என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துத்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழரசுக் கட்சி தவிர்ந்த பிற கட்சிகளின் கோபத்துக்கு காரணம்.
அவரது இந்தக் கருத்து, வேண்டுமென்றே வெளியிடப்பட்டது அல்ல.
தமிழரசுக் கட்சியின் சார்பாக நடந்து கொள்கிறீர்கள் என்று, பாராளுமன்ற உறு ப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கான பதிலாகவே அது அமைந்திருந்தது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து, வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று முன்னாள் போராளி இயக்கங்களாக இருந்த தம்மை குறைத்து மதிப்பிடும் வகையில் இருப்பதாக இந்தக் கட்சிகள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில், உரையாடப்பட்ட விடயம், இப்போது ஊடகங்களினூடாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முதலமைச்சர் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிடின், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று செய்தியாளர்களைக் கூட்டி எச்சரித்திருக் கிறார்.
முன்னாள் போராளி இயக்கங்களின் சார்பில் வடக்கு மாகாணசபையில் 14 பேர் இருப்பதாகவும், தமிழரசுக் கட்சிக்கு 17 பேர் தான் உள்ளனர் என்றும், அவர்களில் பலரும் நடுநிலை வகிக்கக் கூடியவர்கள் என்றும், தாம் ஒன்று கூடி முடிவெடுக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் அவர் சொல்ல வந்த செய்தி என்னவென்றால், முதலமைச்சரை எச்சரிப்பது என்பது தான்.
இதுபோன்ற பாரதூரமான கருத்துக ளும், விமர்சனங்களும் இன்றைய நிலை யில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தேவையா என்பதே முக்கியமான வினாவாகும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து, கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கும் கட்சிகளுக்கு பிடிக்கவி ல்லை என்றால், அதனை அந்தக் கூட்டத்திலேயே வெளியிட்டுத் தீர்வு கண்டிருக்க வேண்டும்.
ஆனால், உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயத்தை, அரசியலாக்கி, ஊடகங்களில் பரபரப்பாகத் தம்மைப் பேச வைக்க எத்தனித்தது முறையற்ற அணுகுமுறையாகும்.
தாம் அவ்வாறு கூறியதை விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஏன் அவ்வாறு கூறினேன் என்றும் விபரித்திருக்கி றார். கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சி யுடன் தான் இணைந்திருக்க முடியும் என்பது அவரது முதல் நிலைப்பாடு.
அத்தோடு அவர் நிறுத்திக் கொண்டிருந் தால், இந்தளவுக்குச் சர்ச்சை வளர்ந்திருக்காது. வன்முறையோடு சம்பந்தப்பட்ட, ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நான் இணைந்திருக்க முடியாது என்பது அவரது இரண்டாவது நிலைப்பாடு.
அது தான் சர்ச்சைக்கு காரணமானது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்தா ண்டு அரசியலுக்கு இழுத்து வரப்படுவத ற்கு முன்னர், உயர்நீதிமன்ற நீதியரசராகப் பதவி வகித்தவர்.
அரசியலுக்கு வர முன்னர், நீதித்துறை யில் பணியாற்றிய காலத்தில், சம்பாதித் துக் கொண்ட பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவர் விரும்பியிருக்கலாம்.
அதாவது, முன்னர் போராளி அமைப்புகளாக இருந்த இயக்கங்களுடன், கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவது, தனது நீதித்துறைப் பதவிக்காலத்து புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கருதக்கூடும்.
இப்போது அரசியல் கட்சியாக இருந்தா லும், இந்த அமைப்புகள் முன்னர், ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தவை என்பதை மறுக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில், அவை சட்டபூர்வதன்மையைக் கொண்டிருந்தவையுமல்ல.
ஆனால், பிற்காலத்தில், பொதுமன்னிப் பின் ஊடாக, அரசியல் வழிக்குத் திரும்பி யுள்ளன.
அரசியலில் ஒன்றாகச் செயற்பட்டா லும், கொள்கை ரீதியாக அவர்களுடன் இணைந்திருக்க முடியாது என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அது அவரது தனிப்பட்ட- யாரும் தலையீடு செய்ய முடியாத கருத்து.
அதேவேளை, தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எல்லாக் கட்சிகளுட னும் இணைந்து செயற்படுவதாகவும், பேதம் பார்க்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எல்லாக் கட்சிகளும், இணைந்து கேட்டு க்கொண்டால் மட்டுமே, தாம் முதலமைச் சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என்று அவர் கூறியதை ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
அது உண்மையேயாயினும், தமிழரசுக் கட்சியே அவரை முதலமைச்சர் வேட்பா ளராக முன்மொழிந்து அரசியலுக்குக் கொண்டு வந்ததென்பது மறுக்கமுடியாத உண்மை.
அவர், முதலமைச்சர் வேட்பாளராக அறிமுகமாக முன்னரே, தமிழரசுக் கட்சி யின் அரசியல் மேடையில், ஏறியிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, தமிழரசுக் கட்சி சார்ந்து அவர் செயற்பட விரும்பியதைத் தவறெனக் கருத முடியாது. தமிழரசுக் கட்சியின் கொள்கை அவரை ஈர்த்திருக்கலாம்.
அந்த விடயத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தனிப்பட்ட கருத்தின் மீது, ஏனைய கட்சிகள் கொண்டுள்ள முரண் பாடு எந்தளவுக்கு சரியானது என்ற கேள்வி உள்ளது.
அதைவிட, இந்த விவகாரத்துக்குள், ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற கட்சிகள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் இழுத்து வந்து தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள் ளன.
தேர்தல் பிரசாரத்தின் போது, பிரபாகரனை மாவீரன் என்று புகழ்ந்ததைச் சுட்டிக்காட்டி, கேள்வி எழுப்பப்பட்டது அப த்தமான விடயம்.
ஏனென்றால், விக்னேஸ்வரன் இந்தக் கட்டத்தில் பிரபாகரன் குறித்து கருத்து வெளியிடவுமில்லை, தான் அவ்வாறு புகழ்ந்ததை நிராகரிக்கவுமில்லை.
அதேவேளை, ஆயுதம் ஏந்தியவர்கள் எல்லோருமே பிரபாகரனாகிவிட முடியாது என்பதை, கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள், தமக்காக யாரெல்லாம் போராடினார்களோ அவர்களின் தியாகங்களை மறக்கவில்லை, அதனை மதிக்கிறா ர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
பிரபாகரனைச் சுட்டிக்காட்டிய விவகாரத்தில், காந்தியடிகள், நேதாஜி, சுபாஸ் சந்திரபோஸ் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். ஆனால், அவரது கொள்கையை ஏற்கவில்லை என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார் விக்னேஸ்வரன்.
பிரபாகரன் மீது மதிப்புக் கொண்டுள்ள அனைவருமே, அவரது கொள்கையை ஏற் றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. அதையே அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், இப்போது தோன்றியுள்ளது இதுபோன்ற சர்ச்சை தேவையற்றதொன்று.
ஏனென்றால், இது தமிழரின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான கொள்கையின் ஒரு அம்சமல்ல.
அதனுடன் தொடர்புடைய விடயமும் அல்ல. அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அரசியலாக்கி, எச்சரிக்கை விடுக்கின்ற அளவுக்கு எல்லை மீறுவது, அபத்தமான அரசியல் போக்காகும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத் தின் மீது முரண்பாடுகள் இருந்தால், அதனை உரிய இடத்தில் வெளிப்படுத்து வதே முறையானது, ஏனென்றால், அவர் 1 இலட்சத்து 32 ஆயிரம் விருப்பு வாக்குகளால் தெரிவான ஒருவர்.
அத்தகைய மக்கள் அபிமானம் பெற்ற வெளியுலக மதிப்புப் பெற்ற ஒருவரை, தமிழரின் அரசியல் நலனுக்குச் சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்ள முனை வதே புத்திசாலித்தனமானது. இன்றைய நிலையில், தமிழர்களுக்குத் தேவை அதிக மான நண்பர்களே தவிர, பகைவர்களல்ல.
நண்பர்களைப் பகைத்துக் கொள்வது இன்றைய நிலையில் புத்திசாலித்தனமான அணுகுமுறையுமல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் அனைத்துமே, தமக்கான பொறுப்பையும் கடமையையும், உணர்ந்து செயற்பட்டால், இதுபோன்ற கோழிச் சண்டை, வேலிச்சண்டைகளில் நேரத்தைச் செலவிட நேரமிருக்காது என்பதே உண்மை.
-கபில்-
ISIS–இன் இராணுவ வெற்றிகளும், சிரியா ஈராக் மீதான அமெரிக்க தரை நகர்வு திட்டங்களும் !!