கடந்த 24.10.2014 அன்று சமர்ப்பிககப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வரைபும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நாட்டுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன.

வரவு செலவு திட்டத்தில் முன்மொழிய ப்பட்டுள்ள மக்கள் நலன்சார் விடயங்கள் அதிகளவான மக்களின் கவனத்தை பெற்றுள்ளன.சம்பள உயர்வுகள் அரச உத்தியோகஸ்தர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே வரவிருக்கும் ஜனாதிபதி   தேர்தலுக்கான நகர்வுகளே இவை என்கின்ற விமர்சனங்களிலும் உண்மைகள் இல்லாமலில்லை.

கையோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தத்தமது நிலைப்பாடுகள் என்ன என்பதுபற்றியும் அரசியல்கட்சிகளின் அறிக்கைகள் வெளிபடுத்தப்பட்டுவருகின்றன.அதிலும் முன்னுக்கு பின்னான அறிக்கைகளுக்கும் குறைவில்லை.

மலையக கட்சிகளில் பெரும்பாலானவை ஜனாதிபதி மஹிந்தவுக்கே தமது ஆதரவை வழங்கும் முடிவுக்கு வந்திருக்கின்றன. பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமை யிலான தொழிலாளர் தேசிய சங்கமும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.

அந்த சங்கம் எடுத்த முடிவை பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தூதுக்குழுவினர் ஜனாதிபதிக்கு சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவித்தனர். இது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் அலரிமாளி கையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பொறுத்தவரை வழமையான ஏகாதிபத்திய யூ.என்.பி.சார்பு நிலைப்பாடுதான் எடுக்கப்படும் என்றாலும் அதனை இன்னும் சிறிது காலத்துக்கு சஸ்பென்சாக வைத்திருக்கவே விருப்புகின்றனர்.

இது பற்றி பத்திரிகையாரர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் “ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அது தொடர்பாக எவ்விதமான முடிவுகளும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. உரிய காலத்தில் மக்கள் கருத்துக்களைப் பெற்று அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் மேற்கொள் ளப்படும் என்றும் விளாசி தள்ளியிருக்கி ன்றார்.

நிதி அமைச்சர் என்ற வகையில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித் திருந்தார்.வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசார மொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும்.

இந்த தேநீர் விருந்துப சாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

குறித்த கட்சிகள் ஜனாதிபதியின் விருந்து பசாரத்தை புறக்கணித்துள்ளனர்.இது வரவு செலவு திட்டம் சம்பந்தமான வெளிப்பாடுகள் என்பதை விட எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மனதில்கொண்டே இத்தகைய அணுகுமுறைகள் வெளிக் காட்டப்படுகின்றன எனலாம்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் கலந்து  கொண்டுள்ளது. வழமைபோல கொழும்பில் சிங்கள தலைவர்களுடன் குடியும் கும்மாளமும் வடக்கு கிழக்கிலோ வாய்வீச்சு போராட்டம் என்பதாக நடந்தேறியிருக்கின்றது.
tna_parli_03

ஜனாதிபதியின் விருந்துபசாரம்ஒன்றில் கடந்த வருடம்கூட சிக்கன் காலுடன் சம்பந்தர் ஜனாதிபதியருகே அமர்ந்து விருந்துண்ட நிகழ்வுகள் பற்றிய படங்கள் பரவலாக வெளியாகின. இந்த வரவு செலவு திட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடினார்.

தேநீர் விருந்தில் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரா.சம்பந்தனின் தோளில் கை போட்டபடியே மாவை சேனாதிராசாவுக்கு கைலாகு கொடுத்து அமர்க்கள படுத்தியுள்ளார்.

tna_parli_05 copie
ஜனாதிபதியின் விருந்தில் குதூகலித்த சுரேஷ் பிரேமச்சந்திரனின் இழிப்பு பல்பொடி விளம்பரத்துக்கு போஸ் கொடுத்ததுபோல் இருந்தது. சிலவேளை இதுதான் இப்போ தெல்லாம் தமிழ்தேசிய வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் இராஜதந்திர போரோ தெரியாது.

அப்படிஎன்றால் அந்த இராஜதந்திரத்தை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோது களமிறக்கியிருக்கலாமே? 1990 ஆம் ஆண்டிலிருந்து யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்தேவி புகையிரத சேவை அண்மையில் ஆரம்பிக்கப்ப ட்டது.24 வருடங்களுக்கு பின்னர் புகையிரத சேவையை கொண்டு வந்ததற்காக யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதியை இந்த மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கலாமே?

அதை ஏன் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்வ தில்லை? வடக்குக்கு வந்தால் இந்த சுரேசின் முகத்தில் ஒரு ஈ கூட ஆடாது. கடுகடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு போலிஸ் இராணுவ சிப்பாய்களுடன் சிண்டுமூட்டி அதை வீடியோவும் எடுத்து வெளியிடுவார்கள்.

tna_parli_04 copie

மாவையோ அடுத்த போராட்டத்துக்கு வேட்டியை மடித்துக் கட்டாத குறையாக அறைகூவல் விடுப்பார்.. அத்தோடு ஜனாதிபதி தலைமை தாங்கும் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களுக்கு பகிஸ்கரிப்பு. ஆனால் அலரிமாளிகையில் மட்டும் இந்த ஆரவாரங்கள் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு விருந்துண்டு மகிழ எப்படியப்பா உங்களால் முடிகின்றது? அந்த சிவாஜிகணேசன் கூட தோற்றுப்போகும் இந்த நடிப்பை எங்கேதானப்பா கற்றுக் கொண்டீர்கள்?

மக்களின் வாக்குகளில் கிடைக்கின்ற பதவிகள் உங்களது சுகபோகங்களுக்கு மட்டுமே பயன்படுகின்றதே? மாதாந்தச ம்பளங்கள், படிப்பணங்கள், வரிச்சலுகை பெற்ற சொகுசு வாகனங்கள் பாதுகாப்பு பரிவாரங்கள், கணனிகள், ஓய்வூதியங்கள், வாய்ப்பு வசதிகள்,செல்வாக்குகள், சிவத்த பாஸ்போட்டுகள் மற்றும் சிங்கள அமைச்சர்கள் ஒவ்வொரு பருவ காலத்திலும் வழங்கும் முதல்தர தேயிலை தரம்மிக்க மாசிகருவாடு ,மற்றும் கறுவா,கராம்பு அடங்கிய பாராளுமன்ற உறுப்புரிமைக்கான சந்தோசபொதிகள் இவற்றிலெல்லாம் சிங்கள நாற்றம் இருப்பதில்லை.

இவற்றையெல்லாம் பகிஸ்கரிக்க வேண்டும் என்று ஒருபோதும் உங்களுக்கு தோன்று வதுமில்லை.  ஆக உங்கள் வாழ்க்கைக்கும் வளத்துக்கும்  இவையெல்லாம் அவசியம்.
tna_parli_03
ஆனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகள் மட்டும் உங்களுக்கு தீண்டத்தகாதவை. உரிமைகள் உரிமைகள் என்று அழிந்தது போதாது மக்கள் இன்னு மின்னும் வறுமையிலும் சிறுமையிலும் கிடந்து உத்தரிக்க வேண்டும் என்பதே உங்கள் கொள்கை.

மாறாக மக்களின் அன்றாட பிழைப்புக்காக அரசுடன் உறவாடி அரசியல் செய்பவர்கள் பெரும் துரோகிகள். மக்களுக்கு புகையிரதம் வந்தாலென்ன, பஸ் வண்டி ஓடினாலென்ன  வீதி  போடப்பட்டாலென்ன  குளங்கள்  திருத்தப்ப ட்டா லென்ன  பாடசாலைகள் நூல் நிலையங்கள் இருக்கிறதா? இல்லையா?

உங்களுக்கு ஒருகவலையுமே இல்லை.அதுபற்றி கவலையுறுபவன் காட்டிகொடுப்பவன் தமிழ்த்துரோகி. இதுபற்றியெல்லாம் எமது மக்கள் சிந்திக்க தொடங்காதவரை உங்கள் காட்டில் மழைதான்.

– மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்-

Share.
Leave A Reply