இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் 62 வயதாகும் இவர் தற்போது பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.
தற்போது இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிபிசி வானிலை அறிவிப்பாளர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானி செய்தி அறிவிப்பாளரின் பெயர் ரெஹாம் கான் (வயது 41) இவர் ஏற்கனவே விவகாரத்து பெற்றவர் இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.இவர் பிபிசியின் சவுத் டுடே வானிலை அறிவிப்பாளராக உள்ளார். பல மாதங்களுக்கு முன்பே இவர்கள் இடையிலான வதந்தி பரவியது.
தற்போது இவர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இந்த திருமணத்திற்கு இம்ரான் கான் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இம்ரான்கான் 1995-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஜெமிமா கோல்டுஸ்மித் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டு பிரிந்தனர். இத்தம்பதிக்கு சுலைமான், காசிம் என இரு குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளும் தாயுடன் இங்கிலாந்தில் வசித்து வருகின்றன.
புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பிறகே மறுமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக, இம்ரான் கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது..
62 வயதாகும் இம்ரான்கானுக்கு பெண்களுடன் உள்ள சகவாசம் குறித்து சமூக இணையதளங்களில் மோசமான கருத்துகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் அவர் மறுமணம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.இது அவரது அரசியல் இம்மேஜை பாதிக்கலாம் என் அரசியல் விமரசகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.