விபத்தில் சிக்கிய ஏர்ஏசியா விமானத்தின் பணிப்பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தனது காதலருக்கு, ‘நான் உன்னை 38,000 அடி உயரத்தில் இருந்து காதலிக்கிறேன்’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஏர்ஏசியா விமானத்தில் பணியாற்றி நிஷாவின் (வயது 22) கடைசி சமூக வலைதளப் பதிவு இதுவாகும். நிஷா புகைப்பட தகவலை இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளார்.
‘நான் உங்களை 38,000 அடி உயரத்தில் இருந்து காதலிக்கிறேன்’ என்று எழுதி, கேபின் ஜன்னலில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
ஆனால் எந்த விமானத்தில் வைத்து இந்த புகைப்படத்தை எடுத்தார் என்பது தெளிவாகவில்லை. இது அவரது காதலர் தியோவிற்கு அனுப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தியோ, நிஷாவின் அனைத்து பதிவுகளிலும் குறிப்பிடபட்டு வந்துள்ளார்.
விமானம் விபத்துக்கள் சிக்கிய பகுதியில் இருந்து, நேற்று மீட்கப்பட்ட உடல்களில் விமான பணிப்பெணின் உடலும் அடங்கும். உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்ததை வைத்து அடையாளம் காணப்பட்டது.
இந்தோனேஷியாவில் உள்ள சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேருடன் கடந்த 28–ந் தேதி புறப்பட்டு சென்ற ஏர்ஏசியா ‘ஏ320–200’ ஏர் பஸ் விமானம், நடுவானில் திடீரென மாயமானது. இதனையடுத்து, இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் (கரிமட்டா ஜலசந்தி பகுதியில்) விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டது. அப்பகுதியில் நேற்று பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியதாலும், 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாலும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இன்று கடல்பகுதியில் வானிலை சீராக காணப்படுகிறது. இதனையடுத்து மீட்பு குழுவினர் மீண்டும் மீட்பு மற்றும் தேடுதல் பணியினை தொடங்கியுள்ளனர்.
விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறிய உதவும் கருப்பு பெட்டியையும், பலியானவர்களின் உடல்களையும் தேடும் பணியில், நீரில் மூழ்கித் தேடும் வீரர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்