யாழ்.நாவாந்துறைப் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காலில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேயிடத்தை சேர்ந்த சந்திரகுமார் சஞ்சீவன் (வயது 30) என்பவரே படுகாயமடைந்தார்.

இரு குழுக்களுக்கிடையில் வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்ற கைகலப்பை கட்டுப்படுத்த சென்ற இராணுவத்தினரே நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நாவாந்துறை சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் நேற் வெள்ளிக்கிழமை (02) இரவு, கைகலப்பு ஏற்பட்டதையடுத்து, பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு கைகலப்பில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.

கைகலப்பில் ஈடுபட்டவர்கள் அதனைக் கருத்தில் எடுக்காததையடுத்து, இராணுவத்தினர் வானத்தை நோக்கி வெடி வைத்தனர். அதற்கும் அவர்கள் செவிமடுக்காது, கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து, காலுக்கு கீழே இராணுவத்தினர் சுட்டனர்.

இதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்தார். பொலிஸாரும் இராணுவத்தினரும் தொடர்ந்தும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply