கொழும்பு: தேர்தல் தோல்வி பயத்தால், தனது மகன்களின் விலை உயர்ந்த கார்களை இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அதிபருக்கான தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால், தனது மகன்கள் பயன்படுத்தும் கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள 6 பந்தய கார்களை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இதில், 4 கார்களை கடந்த 31ஆம் தேதி அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இலங்கையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் இரண்டு பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், விமானச் பயணச் சீட்டுகள் விற்பனையாகி விட்டது என அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய குழுவொன்று இலங்கையில் இருந்து செல்லவே இந்த பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும், அது ராஜபக்சேவாகத்தான் இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

carsl_1carsl_2carsl_3

Share.
Leave A Reply