தான் கிண்டலுக்காகவே மிஸ்டர் பிர­பா­க­ரன்  என்று  சொன்னதாகவும்  “மிஸ்டர்” என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றும்  கூறியிருக்கிறார் சந்திரிக்கா.

மிஸ்டர் என்பதற்கு   ‘திரு’ என்பது மட்டும் அர்த்தம் இல்லை  என்றால்  வேறு என்ன அர்த்தத்தில்    மிஸ்டர் பிரபாகரன் என அழைத்திருப்பார்??

பிரபாகரன்   பொதுக் கூட்டங்களில்  கலந்து கொள்ளும்போது  ‘திரு’  ‘திரு’  என முழிப்பதை பார்த்து   திரு. பிரபாகரன் என அழைத்திருப்பாரோ?

சந்திரிக்கா  படுகொலை செய்ய முனைந்து, அவரின்   ஒரு கண்ணை  பறித்த   பிரபாகரனை   மரியாதை  செய்து   ‘திரு’  என்று அழைத்திருக்கமாட்டார்.  கட்டாயமாக  கிண்டலாகவே இப்படி கூறியிருப்பார்.  (எந்தவொரு   பதவிகளிலும்   இல்லாதவர்களை   “மிஸ்டர்”   என்றே அழைக்கிறார்கள்)

பிரபாகரனின் பெயரை மூன்று முறையே உச்சரித்துள்ளேன்; சந்திரிகா

பிர­பா­க­ரனின் பெயரை மூன்று முறையே உச்­ச­ரித்­துள்ளேன். இந்­நி­லையில் மிஸ்டர் பிர­பா­கரன் என்று கூறி­ய­மையை தேசத்து­ரோகச் செய­லென எடுத்துக் காட்­டு­கின்­றனர்.

இது முட்­டாள்­த­ன­மான செய­லாகும். ஆணையும் பெண்­ணையும் வேறு­ப­டுத்தி காட்­டவே மிஸ்டர் என்ற வார்த்தை பிரயோகிக்­கப்­ப­டு­கின்­றது.

மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆங்­கில மொழி தெரி­யாத குறை­யையே இது எடுத்­துக்­காட்­டு­கின்­றது. எனவே இது தொடர்பில் தேர்தல் முடி­வ­டைந்த பிற்­பாடு நீதி­மன்றம் செல்வேன் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

மேலும் எனது ஆட்­சியின் போது நாட்டை பிள­வு­ப­டுத்­தவோ பயங்­க­ர­வா­தத்தை போஷிக்­கவோ இல்லை. இதன்­பி­றகும் நாட்டை பிள­வு­ப­டுத்த மாட்டேன். எனது பக்கம் தேசத்தை காப்­பாற்­றி­ய­வர்­களே உள்­ளனர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்;

எம் மீது பல­வகை தேசத்­து­ரோக சாயம் பூசு­கின்­றனர். எனது ஆட்­சியின் போது நாட்டை பிள­வு­ப­டுத்தும் வகையில் ஒரு­போதும் செயற்­பட்­டது கிடை­யாது.

எனது ஆட்­சியின் போது யுத்­தத்­திற்கு உரிய முக்­கி­யத்­துவம் அளித்து இரா­ணுவம் பலப்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்­க­மை­யவே யாழ்ப்­பா­ணத்தை நாம் வெற்றி கொண்டோம்.

எனவே, நாட்டை பிள­வு­ப­டுத்தும் தேவை எமக்கு கிடை­யாது. நாங்கள் பயங்­க­ர­வா­தத்தை போஷிக்கக் கூடி­ய­வர்கள் அல்ல. பயங்­க­ர­வா­தத்­தினால் நாமே அதி­க­ளவில் பாதிப்­புக்கு உள்­ளா­கிறோம். ஆகவே, நாட்டை பிள­வு­ப­டுத்தும் நோக்கம் எமக்கும் இல்லை.

நாம் செய்த சேவை­களை மக்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த நாட்டை காட்­டிக்­கொ­டுத்­தது யார்? என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

இதே­வேளை, தற்­போது பர­வ­லாக என் மீது ஒரு வார்த்தை கொண்டு தேசத்­து­ரோக பட்டம் சுமத்­து­கின்­றனர். நான் யாழ்ப்பாணத்­திற்கு தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக சென்ற வேளை மிஸ்டர் பிர­பா­கரன் என்று கூறி­ய­மையே நாட்டை பிளவுபடுத்தும் செய­லென கூறு­கின்­றனர்.

மிஸ்டர் என்ற வார்த்­தையை பிர­யோ­கிப்­பது ஆணுக்கும் பெண்­ணுக்கும் பாகு­பட்­டினை காண்­பிப்­ப­தற்­காகும். ஆங்­கிலம் தெரி­யா­த­வர்கள் முட்­டாள்­த­ன­மான செயலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

நான் மூன்று தடவை பிர­பா­க­ரனின் ??????? திட்டி தீர்க்கும் வார்த்­தை­க­ளையே பிர­யோ­கித்தேன். இதே­வேளை நான் கட்­சியில் இருக்கும் போது ஒருபோதும் மிஸ்டர் பிரபாகரன் என அழைத்தது கிடையாது.

எனினும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி பீடமேறிய உடன் மிஸ்டர் பிரபாகரன் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். எனவே, மிஸ்டர் பிரபாகரன் என்று முதலில் கூறியவர் மஹிந்த ராஜபக் ஷவாகும்.

மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார்.
– See more at: http://www.tamilmirror.lk/137040#sthash.2AxRGWxZ.dpuf
பிரபாகரன் என்ற சொல்லை நான் எனது உரையில் மூன்று முறை பயன்படுத்தினேன். முதன்முறை அச்சொல்லைக் கூறும்போதே மிஸ்டர் என்ற சொல்லையும் இணைத்துக்கொண்டேன். அப்போது கூட நான் அந்த சொல்லை கிண்டலாகவே சொன்னேன். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார். – See more at: http://www.tamilmirror.lk/137040#sthash.2AxRGWxZ.dpuf

 பிரபாகரன் என்ற சொல்லை நான் எனது உரையில் மூன்று முறை பயன்படுத்தினேன். முதன்முறை அச்சொல்லைக் கூறும்போதே மிஸ்டர் என்ற சொல்லையும் இணைத்துக்கொண்டேன்.

அப்போது கூட நான் அந்த சொல்லை கிண்டலாகவே சொன்னேன். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார்.

Share.
Leave A Reply