முன்னாள் காதலரின் வீட்டுக்குள் நிர்வாண கோலத்தில் இரகசியமாக பிரவேசிக்க முயன்ற பெண் புகைக்கூண்டில் சிக்கிக் கொண்டார்
தன்னிடமிருந்து பிரிந்து சென்ற முன்னாள் காதலரின் வீட்டுக்குள் நிர்வாண கோல த்தில் புகைக்கூண்டு வழியாக பிரவேசிக்க முயற்சித்து அதற்குள் சிக்கிக் கொண்ட பெண்ணொருவரை தீயணை ப்பு படைவீரர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் மீட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பெயர் வெளியிடப்படாத மேற்படி 35 வயதான பெண், சனிக்கிழமை காலை 5 மணியளவில் வூட்கிரெஸ்டிலுள்ள தனது காதலரான டோனி ஹெர்னான் டெஸின் வீட்டிற்குள் புகைக்கூண்டு வழியாக நிர்வாணக் கோலத்தில் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் புகைக்கூண்டுக்குள் சிக்கிக் கொண்ட அந்தப் பெண் உதவி கோரி கூச்சலிடவும் டோனி பொலிஸாரினதும் தீயணைப்பு படைவீரர்களதும் உதவியை நாடியுள்ளார்.
தீயணைப்பு படை வீரர்கள் 2 மணித்தியாலங்களை செலவிட்டு புகைக் கூண்டை உடைத்து அந்தப் பெண்ணை மீட்டு ள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கும் டோனிக்கும் பிறந்த 3 பிள்ளைகள் டோனியுடன் வாழ்கின்ற போதும் சம்பவம் இடம்பெற்ற வேளை அவர்கள் அங்கிருக்கவில்லை.