7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இன்று வியாழக்கிழமை(8) நடைபெற்ற நிலையில், யாழ்.மாவட்டத்தில் 61.14 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவித்தாட்சிகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

8(2116)யாழ்;.மாவட்டத்திலுள்ள 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற நிலையில், அவர்களில் 61.14 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நெடுந்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்குப்பெட்டிகள் ஹெலிகப்டர் மூலம் கொண்டுவரப்பட்டதாக சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 74.78 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவித்தாட்சிகருமான நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 68.25 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 69.5 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலரும் தெரிவித்தாட்சிகருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

2 வலயங்களின் வாக்குப் பதிவுகள் இதனுடன் சேர்க்கப்படவில்லையெனவும், அவை சேர்க்கப்பட்டால் 71 வீதமளவில் வாக்குப் பதிவு இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

jaffna_voting_02

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது.

சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம்முறை வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 லட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ் மாவட்டத்தில் 59 வீதமான வாக்குப் பதிவுகளும், வவுனியாவில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும்,

கம்பஹா மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும்,

மாத்தளையில் 72 வீதமான வாக்குப் பதிவுகளும் கேகாலையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், பதுளையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றன.

கொழும்பு மாவட்டத்தில் 76 வீதமானவர்களும், அனுராதபுர மாவட்டத்தில் 76 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.

பொலனறுவையில் 75 வீதமானவர்களும், கேகாலையில் 70 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.

முல்லைத்தீவில் 68 வீதமன வாக்குப் பதிவுகளும், அம்பாறையில் 70 வீதமான வாக்குகளும்,

திருகோணமலையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், மொனராகலையில் 65,

மாத்தறையில் 73 வீதமான வாக்குப் பதிவுகளும், அம்பாந்தோட்டையில் 70 வீதமன வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாள்ர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் 4 மணிவரை வாக்களிப்பு வீதங்கள்

ஜனாதிபதி தேர்தல் 2015. மாலை 4மணிவரை தேர்தல் குறிப்பிட்ட மாவட்டங்களின் வாக்களிப்பு வீதங்கள் வெளியிடப்பட்டுள்ளன

இதன்படி

களுத்துறை 70வீதம்,
கம்பஹா 65வீதம்,
முல்லைத்தீவு 73வீதம்,
இரத்தினபுரி 70 வீதம்,
மொனராகலை 75வீதத்துக்கு மேல்,
அநுராதபுரம் 76 வீதம்,
பொலநறுவை 75வீதத்துக்கு மேல்,
கேகாலை 70 வீதம்,
நுவரெலியா 80வீதம்,
மாத்தறை 73வீதம்,
கண்டி 75வீதம்,
அம்பாந்தோட்டை 70வீதத்துக்கு மேல்,
புத்தளம் 70 வீதம்

ஜனாதிபதி தேர்தல் வடக்குகிழக்கில் 60க்கும் மேற்பட்ட வீத வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2015. வாக்களிப்பு முடிவடைந்த மாலை 4மணிவரை தேர்தல் குறிப்பிட்ட மாவட்டங்களின் வாக்களிப்பு வீதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி யாழ்ப்பாணம் 61.14வீதம், மட்டக்களப்பு 60வீதம் கிளிநொச்சி 67(உத்தியோகபூர்வமற்றது)

திருகோணமலை 72 வீதம், மன்னார் (உத்தியோகபூர்வமற்றது) 59,

வவுனியா 66, முல்லைத்தீவு 73வீதம். களுத்துறை 70வீதம், கம்பஹா 65வீதம்,

இரத்தினபுரி 84 வீதம், மொனராகலை 75வீதத்துக்கு மேல், அநுராதபுரம் 76 வீதம்,

பொலநறுவை 80வீதம், கேகாலை 70 வீதம், நுவரெலியா 80வீதம், மாத்தறை 73வீதம்,

கண்டி 75வீதம், ஹம்பாந்தோட்டை 70வீதத்துக்கு மேல், புத்தளம் 71 வீதம், பதுளை 61வீதம்,

மாத்தளை 75, திகாமடுல்லை 70, குருநாகல்- 77, காலி 79,

கொழும்பின் வாக்களிப்பு வீதம் இன்னும் வெளியாகவில்லை.

jaffna_voting_01jaffna_voting_03jaffna_voting_04

Share.
Leave A Reply