பாரிஸில் ஷார்லி எப்தோ சஞ்சிகையின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆயுததாரிகளும் பிரான்சின் வடமத்திய பிராந்தியத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், கிழக்கு பாரிஸிலும் வென்சென் பகுதியில் உள்ள யூத சூப்பர் மார்க்கெட்டுக்குள் பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
அந்தக் கடைக்குள் ஆயுததாரி ஒருவர் பலரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்து அவர்களைக் கொன்றுவிடப் போவதாக எச்சரித்திருந்தார்.
ஷார்லி எப்தோ சஞ்சிகை மீதான தாக்குதல் சந்தேகநபர்களான குவாச்சி சகோதரர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை படையினர் கைவிட வேண்டும் என்று அந்த ஆயுததாரி கோரியிருந்தார்.
பின்னர், அந்த ஆயுததாரி கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தத் தாக்குதலில் பணயக்கைதிகள் நால்வரும் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத் துறைத் தகவல்கள் கூறுகின்றன.
படையினர் உள்ளே நுழைய முன்னதாக ஐந்து வெடிச் சத்தங்கள் கேட்டன.
அதன்பின்னர், பணயக் கைதிகள் பலர் படையினரால் வெளியில் கொண்டுவரப்பட்டனர்.
Exclusif France 2 : les images du face-à-face…