பாரீஸ்: பிரான்சில் பத்திரிக்கையாளர்கள் 12 பேரை கொன்ற கொலையாளிகளை போலிஸ் சுற்றிவளைத்துள்ளது. பாரீஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிற்றூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர்.

நெடுஞ்சாலையில் போலீஸ விரட்டிச் சென்ற போது 2 பேரும் ஒரு சிற்றூருக்குள் புகுந்தனர். பாரீன் புறநகர் பகுதியில் உள்ள சிற்றூரில் கிடங்கி ஒன்றில் 2 பேரும் பதுங்கி உள்ளனர்.

தீவிரவாதிகள் பிடியில் உள்ள பிணைக்கைதியை மீட்க போலீஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

LiveLeak-dot-com-895_1420759955-08paris10-superJumbo-v2_1420760051_jpg_resized

(Chérif Kouachi, left, 32, and his brother, Said Kouachi, 34, who are suspected in a deadly attack on a satirical newspaper in Paris. CreditFrench Police)

தீவிரவாதிகள் பதுங்கியுள்ள கிட்டங்கி ஹெலிகாப்டர்களில் முற்றுகையிட்டுள்ளனர். முன்னதாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்ததால் பதற்றம் நீடித்தது.

தீவிரவாதிகள் தப்பித்துச் சென்ற காரை விரட்டிச் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடந்த புதனன்று பத்திரிக்கையாளர்கள் 12 பேரை கொன்ற தீவிரவாதிகளை பிரெஞ்ச் போலீஸ் தேடி வருகிறது.

சந்தேகத்தின் பேரில் காரில் சென்ற இருவரை போலீஸ் விரட்டிச் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தினர். விரட்டிச் சென்ற போலீஸ் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகள் தப்ப முயற்சி செய்தனர்.

மேலும் தீவிரவாதிகளை பிடிக்க ஹெலிகாப்டரிலும் போலீஸ் தீவிர முயற்சி செய்தது. தேடப்படும் கொலையாளிகள் கார் ஒன்றையும் திருடிக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் பிணைக்கைதிகளாக சிலரை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றுள்ளதாக போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.


Un habitant de Dammartin-en-Goële: "C'est assez…

Two Brothers Suspected in Killings Were Known to French Intelligence Services

Share.
Leave A Reply