சென்னை: நடிகை மோனிகா என்கிற ரஹீமாவுக்கும், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் மாலிக் என்பவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்குப் பின்னர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மோனிகா அறிவித்துள்ளார். இஸ்லாமிய முறைப்படி மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் நடந்தது.
மோனிகா என்ற பெயரில் அழகி, சிலந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மோனிகா. இஸ்லாம் மதத்திற்கு மாறிய மோனிகா, தனது பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார்.
சமீபத்தில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார் மோனிகா. மாப்பிள்ளையின் பெயர் மாலிக் என்றும், மதுரையைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்திருந்தார்.
மாலிக் ஏற்றுமதி தொழில் நிறுவனம் நடத்தி வருவதாவும், தனது தந்தையின் நண்பர் மகன் என்றும் மோனிகா தெரிவித்திருந்தார். மேலும், இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர்கள் பார்த்து உறுதி செய்த திருமணம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று ரஹீமா, மாலிக் திருமணம் சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்தேறியது.
உற்றார் உறவினர்கள்
குடும்ப நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது.
குடும்ப நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது.