அது வருடத்தின் முதல் நாள் ஆம், ஜனவரி முதலாம் திகதி. நேரம் எப்படியும் நண்பகல் 12 மணியை கடந்திருக்கும். பகல் உணவை முடி த்து விட்டு இருந்த மொரட்டுவையை சேர்ந்த செல்வந்தர் ஜானகவின் தொலைபேசி அலறுகிறது. ஹலோ…யார் பேசுறீங்க? ஜானக கேட்கும் போதே பதிலும் வந்தது.
நாங்கள் லுணுவில வைத்தியசாலையில் இருந்து கதைக்கிறோம். உங்கள் தொலைபேசி இலக்கத்தை வென்னப்புவையில் உள்ள உங்கள் ஹோட்டலில் இருந்து பெற்றுக்கொண்டோம். உங்கள் தங்கை இன்று பார்ட்டி க்கு வருவதாக கூறினார்.
கூடவே கேக்கும் கொண்டு வருவதாக கூறினார். எனினும் அவர் வரவில்லை. தொலைபேசியும் சேவையில் இல்லை. வீட்டுக்கும் சென்று பார்த்தோம். அங்கும் இல்லை. எங்காவது போயுள்ளாரா ? என டாக்டர் ஒருவர் விசாரிக்க ஜானக பதில் எதுவும் இல்லாது அதிர்ச்சியடைந்தார்.
இல்லை எங்கும் போவதாக என்னிடம் கூற வில்லை என ஜானக பதிலளிக்க விடயம் பொலிஸ் நிலையம் எட்டியது.
வென்னப்புவ பொலிஸ் நிலையம் சென்ற லுணுவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பெரமுனகமகே இவ்வாறு முறைப்பாடொன்றை பதிவு செய்கிறார்.
எமது வைத்தியசாலையில் ஒன்றாக வேலை செய்யும் பெண் பல் சத்திர சிகிச்சை வைத்தியரான பூன்ய குமாரி விஜேதுங்கவை காணவி ல்லை.
வைத்தியசாலைக்கு வருவதாக கூறிய வர் வரவில்லை. தொலைபேசியும் சேவையில் இல்லை. வீடும் பூட்டப்பட்டுள்ளது. வாகனங் கள் வெளியில் உள்ளன என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டது.
இதனையடுத்து ஜானகவை தொடர்பு கொண்ட வைத்தியர் தாம் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதாகவும் வீட்டை உடைத்துப் பார்க்க அனுமதி தர முடியுமா எனவும் வினவியுள்ளார்.
அதற்கு ஜானகவும் ஒப்புதல் அளிக்க வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் தஸநாயக்கவின் கீழ் பொலிஸ் குழு குறித்த வீட்டுக்கு சென்றது.
ஜானக, பூன்ய குமாரியின் மூத்த சகோதரர் அவர் வென்னப்புவையை சேர்ந்தவராக இருந்த போதும் மொரட்டுவையில் திருமணம் செய்து அங்கு வாழ்ந்து வருபவர். பூன்ய குமாரி லுணுவில வைத்தியசாலையின் பல் வைத்தியர்.
43 வயதான அவர் நலின் ஹெட்டி ஆராச்சி 52 என்ற கோடீஸ்வர வர்த்தகரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும் 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
மகன் சாருக மகள் பியூமி. இந்த சிறிய குடும்பம் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாமடம பகுதியிலேயே வாழ்ந்து வந்தனர். நைனா மடமவில் உள்ள வீட்டுக்கே தற்போது டாக்டர் பூன்யகுமாரியை தேடி பொலிஸாரும் லுணுவில வைத்தியசாலை வைத்தியர்களும் செல்கின்றனர்.
வீடு பூட்டியிருக்க வீட்டின் முன் பெண் டாக் டர் பூன்யகுமாரி. அவரது கணவரின் வாகன ங்கள் இருந்தன. 31 ஆம் திகதியின் பத்திரிகை பிரிக்கப்படாமல் வெளியே உள்ள ரீப்போவில் கிடந்தது.
பொலிஸாரும் வைத்தியர்களும் பூன்யகுமாரியின் சகோ தரர் ஜானகவிடம் பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைய கதவை உடைத்த போது அவ ர்கள் அதிர்ந்து போயினர். வீட் டின் அலுமாரிகளில் இருந்த உடைகள் உள்ளிட்டவை வீடெங்கும் சிதறி இருந்தன.
பழுதடைந்த நிலையில் இடியப்பமும் தேங்காய்ப் பாதியும் அப்படியப்படியே இருந்தன. சந்தேகத்துக்கு இடமான தடயங்கள் சிலவும் இருந்த நிலையில் மொரட்டுவையில் இருந்த ஜானகவின் தொலைபேசி மீண்டும் சிணுங்கியது.
நான் தான் டாக்டர் பேசுகிறேன். நீங்கள் உடன் இங்கு வாருங்கள். பூண்யாவின் வீட்டை உடைத்து பார்த்து விட்டோம். ஏதோ அசம்பாவிதம் நடந்ததைப் போல் உள்ளன. நீங்கள் உடன் இங்கு வாருங்கள் என பதற்றத்துடன் பேசி முடித்தார்.
இதனிடையே பொலிஸாரின் கவனம் வீட்டு வளாகத்தை நோக்கி நகர்ந்தது. சுமார் மூன்று ஏக்கர் விசாலமான அந்த தோட்டத்தில் வீட்டின் பின்னால் ஒரு குட்டை இருந்தது.
இதனை விட ஒரு தும்பு ஆலையும் அதனை ஒட்டியதாக ஒரு சிறிய வீடும் இருந்தது. அந்த வீடு காவல் அர ணாக இருக்க வேண்டும் என பொலிஸார் ஊகித்தாலும் அவ்வளவு பெரிய வளாகத்தில் எவரும் இருக்கவில்லை.
வீட்டின் பின்னால் இருந்த குட்டை, மட்டைகளை ஊற வைக்க பயன்படுத்தப்படுவதாகும். எனினும் அப்போது அதில் மட்டைகள் இல்லாத தால் நீர் நிரம்பி அது தெளிந்திருந்ததுடன் தாமரைகளும் பூத்திருந்தன. அந்த காட்சி அழகாக இருக்கவே பொலிஸார் குட்டையை நோக்கி நகர்ந்தனர்.
ஏதேச்சையாக அந்த குட்டையின் கீழ் நோக்கி பார்த்த பொலிஸார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இரு சடலங்கள் நீருக்கடியில் இருப்பது தெளிந்த நீரில் துல்லியமாக தெரிந்தது.
தடியொன்றை எடுத்து பொலிஸார் அதனால் உண்மையில் அது சடலம் தானா என்பதை குத்திப்பார்த்தனர். இதனையடுத்து அதனை உறுதி செய்த பொலிஸார் உடனடியாக விடயத்தை வென்னப்புவ தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த குமாரவுக்கு அறிவித்தனர்.
அவர் இது தொடர்பில் வென்னப்புவைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் துஷித்த குமாரவுக்கும் சிலாபம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாலிய டீ சில்வாவுக்கும் அறிவித்து ஆலோசனை பெற்றுக்கொண்டார்.
அதன்படி முதலாம் திகதி மாலையே இந்த விடயம் தொடர்பான அறிக்கை ஒன்றை மாரவில நீதிவான் சாலியவத்த அபேரத்னவிடம் சம ர்ப்பித்தனர். உடன் ஸ்தலம் விரைந்த நீதிவான் சடலத்தை அந்த தண்ணீர் குட்டையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுத்தார்.
இதனை விட சிலாபம் பொலிஸ் தடயவியல் பிரிவும் சிலாபம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விஜேயரத்னவும் ஸ்தலம் வந்தனர். இவர்கள் முன்னிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன.
முதலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட அதனுடன் கட்டப்பட்டிருந்த பெண்ணின் சடல மும் வெளியே வந்தது. அவை வர்த்தகர் நலின் வைத்தியர் பூன்யகுமாரியினுடையது என்பதை பூன்யாவின் சகோதரர் ஜானகவின் உதவியு டன் பொலிஸார் அடையாளம் கண்டனர்.
அவ்விரு சடலங்களுடனும் பாரிய கொங்றீட் கல்லொன்றும் கட்டப்பட்டிருந்தது. அந்த இரு சடலங்களையும் மீட்ட பின்னர் அதன் கீழ் இன்னொரு சடலம் இருந்தது.
அது 15 வயதான சாருக்க வின் சடலமாகும். அதனையும் பொலிஸார் மீட்டனர். அதனை தொடர்ந்து பொலித்தீன் பை ஒன்றுக் குள் கட்டப்பட்டிருந்த நிலையில் 13 வயதான பியூமி நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
பொலிஸார் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீட்டில் வசித்த டாக்டர் அவரது கணவர். இரு பிள்ளைகள் என நால்வரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதை பார்க்கும் போதே பொலிஸாருக்கு தெரிந்தது.
வீட்டின் பின்னால் இருந்த தும்பு ஆலையில் இரு பெண்கள் வேலை செய்த நிலையில் அவ ர்களுக்கு புதுவருட விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையையும் வீட்டுக்கு ஒரு காவல்காரர் இருந்தமையையும் அவர் தனது மனைவி என கூறிக்கொண்ட ஒருவருடன் வீட்டு வளாகத் தில் உள்ள சிறிய வீட்டில் வாழ்ந்து வந்ததை யும் பொலிஸார் தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிந்து கொண்டனர்.
எனினும் அந்த காவல்காரனும் மனைவியும் அங்கு இருக்கவில்லை. இந்நிலையில் டாக்டர் குடும்பத்தை கொலை செய்தவன் அல்லது கொலை செய்தவர்கள் காவலாளியையும் கொன்றிருக்க வேண்டும் அல்லது காவலாளி இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என ஊகிக்கும் பொலிஸார் அந்த குட்டையை முழுவதுமாய் அவதானித்தும் வேறு சடலங்கள் தென்படாததால் காவல்காரர் மீதான சந்தேக த்தை அதிகரித்துக் கொண்டனர்.
இந்நிலையில் வென்னப்புவ பொலிஸாரின் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதன்படி வைத்தியர் பூன்யகுமாரி டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இறுதியாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளமையும் 31ஆம் திகதி விடுமுறை எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி மீண்டும் அவர் வைத்தியசாலைக்கு வருவதாக குறிப்பிட்டிருந்ததையும் வீட்டில் உணவு பொருட்களின் பழுதடைந்த நிலையையும் அவதானித்த பொலிஸார் இக்கொலை 30 ஆம் திகதி இரவு அல்லது 31 ஆம் திகதி இரவு இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கு வருகின்றனர்.
இந்நிலையில் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்த்தன பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்குமார ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
ஜனவரி 2 ஆம் திகதி கடற்படையின் உதவியை நாடிய பொலிஸார் சடலங்கள் இருந்த குட்டைக்குள் தடயம் தேடினர். எனினும் பயனே துமில்லை.
இதனை தொடர்ந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாலிய டீ சில்வா தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வென்னப்புவ மற் றும் தங்கொட்டுவ ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 50 பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி அந்த மூன்று ஏக்கர் வளாகத்தில் தடயங்களை தேட உத்தரவிட்டார்.
இந்த தேடலில் செருப்பு ஜோடி ஒன்று டோச்லைட் ஒன்று கத்தி ஒன்று மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கத்தியை முகர்ந்த மோப்ப நாய் நேராக காவலாளியின் வீட்டுக்கு சென்றது.
எனவே காவலாளி மீதான சந்தேகம் மேலும் அதிகரித்தது. இதனை விட அந்த தேடலில் பொலிஸாருக்கு 3 தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளும் சிக்கின. அவை பயன்படுத்தப்பட்டவை. இதனைவிட உருப்படியான எந்த தடயமும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையிலேயே விசாரணைகளை குற் றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் கையளிக்கின் றார்.
புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீர ஆகியோரின் மேற்பார்வையில் உபபொலிஸ் பரிசோதகர் வீரசேகர சார்ஜன் ஐ.எம்.என். ஈரியகொல்ல குணரத்ன ஜயரத்ன ஆகியோர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
காவலாளி மீது பலத்த சந்தேகம் நிலவிய நிலையில் மீட்கப்பட்ட 3 மீள் நிரப்பு அட்டைக ளும் அவரால் பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என அனுமானித்த புலனாய்வுப் பிரிவு அதனை தொடர்பு படுத்திய அறிவியல் தடயங்களூடாக விசாரணையை முன்னெடு த்தது.
மீள் நிரப்பு அட்டைகளின் சீரியல் இல க்கத்தினூடாக அவை எந்த தொலைபேசி இலக்கத்தை ரீ சார்ஜ் செய்ய பயன்படுத்தப்பட்டது என்பதை தொலைபேசி நிறுவனத்தின் உதவியுடன் புலனாய்வு பிரிவினர் தெரிந்து கொண்டனர்.
இதனையடுத்து அந்த தொலைபேசி எண்ணின் சமிக்ஞைகளை மையப்படு த்தி பொலிஸாரின் விசாரணைகள் நகர்ந்தன. அதன் பிரதிபலன் கடந்த சனிக்கிழமை அதிகாலை புலானாய்வு பிரிவினர் காவலாளி தம் புள்ளை பிரதேசத்திற்கு அப்பால் உள்ள கல்கிரியாகம எனும் இடத்தில் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டனர்.
அங்கு சென்ற பொலிஸார் கல்கிரியாகம வட்டகல பிரதேசத்தின் வீடொன்றில் காவலாளியும் அவன் மனைவி என கூறிய கள்ளக்காத லியும் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு பொலிஸார் சென்ற போது கள்ளக்காதலி மட்டுமே இருந்த நிலையில் காவலாளி கல்கிரியாகமவிலிருந்து கொழும்பு வர பஸ் நிலையம் சென்றிருந்துள்ளார். உடன் பஸ் நிலையம் சென்ற பொலிஸார் கொழும்பு பஸ்ஸில் அவன் ஏறும்போது கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கெதிகம பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான புஞ்சி கங் கணம்கே குணபால என்பவராவார். இரு பிள்ளைகளின் தந்தையான இவன் மனைவி பிள்ளைகளை விட்டு பல வருடங்களுக்கு முன்ன ரேயே கள்ளக் காதலியுடன் வாழ்க்கை நடத்தி யுள்ளான்.
இருவரையும் கைது செய்த புலனாய் வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. அதன் பயனாக குறித்த நான்கு கொலைகளை யும் காவலாளியே செய்துள்ளதையும் 13 வயதான பியூமியை கொலை செய்ய முன் குணபால பல தடவைகள் பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளமையும் உறுதியானது.
அத்துடன் இந்த கொலைகளின் பின்னர் அவ்வீட்டிலிருந்து கொள்ளையிடப்பட்ட 7000 ரூபா பணம் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொண்ட பொலிஸார் 2 ஜோடி தோடுகள், தங்கச்சங்கிலி ஒன்று, தங்க வளையல், இரு கையடக்கத் தொலைபேசிகளையும் மீட்டனர்.
அத்துடன் டாக்டர் பூன்ய குமாரியின் கல்யாண மோதிர த்தை அபகரிக்க அவரது விரலை துண்டாக்கியதையும் பொலிஸார் கண்டறிந்தனர். ஏனெனில் இது தொடர்பில் குணபால பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருந்தான்.
”சேர் உண்மையை சொல்கிறேன். நான் தான் அவர்களை கொன்றேன். அன்று தோட்டத்தில் எனக்கு எஜமான் அகப்பட்டார். அப்போது நான் அவரிடம் சம்பளம் தொடர்பில் கதைத்து விட்டு முற்பணம் 5000 ரூபா கோரினேன்.
அதனை தர மறுத்த அவர் கோபமாக பேசி னார்.
இந்த சம்பவத்தால் பெரிதும் மன உளைச்சலடைந்த நான் அவரை ஏதாவது செய்ய வேண் டும் என தீர்மானித்தேன். அன்று 30ஆம் திகதி இரவு 7 மணி இருக்கும் வீட்டின் மின் இணைப்பு பிரதான ஆளி நான் தங்கியிருந்த வீட்டிலேயே இருந்தது. அதனை அணைத்தேன்.
முழு தோட்டமும் இருளில் மூழ்கியது. எஜமான் என்ன நடந்தது என்பதை அறிய நாம் தங்கியிருந்த அந்த சிறிய வீட்டின் பக்கம் வந்தார். அப்போது மறைந்திருந்த நான் கைக்கோடரியினால் அவர் பின் மண்டையில் அடித்து வீழ்த்தினேன்.
பின்னர் அவர் சடலத்தை ஒதுக்கினேன். தொட ர்ந்தும் பதுங்கினேன். சிறிது நேரத்தில் கணவரை தேடி டாக்டர் அம்மா வந்தார். அவரையும் அதே பாணியில் கொலை செய்தேன்.
அதன்பின் அவ்விரண்டு பிரேதங்களுடனும் கல்லொன்றை சேர்த்து கட்டினேன். அந்த இட த்தில் இருந்த இரத்தத்தை கழுவி விட்டு அவர்களின் வீட்டுக்குள் சென்றேன். அங்கு பிள்ளை கள் இருவர் மட்டுமே இருந்தனர். மகனின் தலையை கோடரியால் தாக்க அவன் அங்கேயே சாய்ந்தான்.
அதன் பிறகு பியூமியை ஒரு அறைக்குள் பயமுறுத்தி கூட்டிச் சென்றேன். அந்த சிறுமியுடன் காலை வரை ஒன்றாக இருந்தேன். அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தேன். முதல் சந்தர்ப்பத்தில் அந்த சிறுமி மயக்கமடைந்தாள். காலையாகும் போது அவள் இறந்திருந்தாள்.
இருந்த தங்க நகைகளை சுருட்டிக் கொண்டு முதலில் மகனின் சடலத்தை குட்டைக்குள் போட்டேன். பின்னர் டாக்டர் அம்மாவினதும் எஜமானினதும் ஒன்றாக கல்லால் கட்டப்பட்ட சடலங்களை அதன் மேல் போட்டேன்.
சிறுமி யின் உடலை பை ஒன்றில் போட்டு கட்டி வீசி விட்டு 31ஆம் திகதி அதிகாலையிலேயே எனது கள்ளக் காதலியோடு அங்கிருந்து கிளம்பினேன். கொலைக்கு பயன்படுத்திய கோட ரியை சுற்றி எடுத்துக் கொண்ட நான் முதலில் வென்னப்புவையில் இருந்து நீர்கொழும்பு – தோப்புவ பாலம் அருகே சென்றோம்.
அங்கு கோடரியை மா ஓயா பகுதியில் வீசி விட்டு அங்கிருந்து பஸ்ஸில் குருணாகல் வந்தோம். குரு ணாகலில் இருந்து கல்கிரியாகம வந்தோம் என குணபால நான்கு உயிர்களை ஈரவிரக்கமின்றி பறித்த கொடூரத்தை வாக்கு மூலமாக புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கினான்.
இந்நிலையில் கொலை துஷ்பிரயோகத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் குணபாலவின் கள்ளக் காதலியையும் புலனாய் வுப் பிரிவு பொலிஸார் தடுத்து வைத்து விசாரி த்து வந்தனர்.
கடந்த நவம்பர் 2 ஆம் திகதியே பத்திரிகை விளம்பரம் மூலம் 15000 ரூபா சம்பளத்துக்கு குணபால காவலாளியாக வேலைக்கு சேர்க்கப்பட்டிருந்தான். இந்நிலையிலேயே கள்ளக் காதலியை மனைவி எனக் கூறி குணபால அங்கு தங்க வைத்துள்ளான்.
இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியை மீட்க புலனாய்வுப் பிரிவு பொலிஸார் குணபாலவையும் அழைத்துக் கொண்டு தோப்புவ மா ஓய பாலத்துக்கு அருகே சென்றனர். குணபாலவின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டிருந்த நிலையில் அன்று சனிக்கிழமை இரவு வேளையில் தோப்புவ பா லம் அருகே பலத்த வாகன நெரிசல் காணப்பட் டது.
இதனை சாதகமாக பயன்படுத்திய குணபால புலனாய்வுப் பிரிவினரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான். எனினும் புலனா ய்வுப் பிரிவினர் அவனை விடாது துரத்த மா ஓயா ஆற்றினுள் குணபால குதித்து தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக குணபாலவை பொலிஸார் ஆற்றிலிருந்து மீட்ட போதும் அவனை காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில் அவனின் சடலத்தை ஒருவரும் பொறுப்பேற்க முன்வராத நிலையில் அரச செலவில் பொலிஸார் அடக்கம் செய்தனர்.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக கைது செய்யப்பட்ட குணபாலவின் கள்ளக் காதலி புலனாய்வுப் பிரிவினரால் வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவளை விசா ரணை செய்த வென்னப்புவ பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்து கொண் டுள்ளனர். கடந்த 04ஆம் திகதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாக்கு மூலத்தில் அவள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாள்.
எனது கள்ளக் காதலன் டாக்டர் அம்மாவின் மகளை துஷ்பிரயோகம் செய்யும் போது அச் சிறுமி கதறினாள். என்னை தேனீர் தயாரித்து தருமாறு கூறியே அவர் அவ்வாறு செய்தார். நான் தேனீர் எடுத்து வரும் போதே அந்த சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்வதை கண்டேன். என்ன நாய் வேலை செய்கிறாய். அதனை நிறுத்து என நான் சத்தம் போட்டேன்.
சத்தம் போடாதே. ஓரமாக இருந்து வேடிக் கைப் பார். வாய் திறந்தால் உன்னையும் கொன்று விடுவேன் என குணபால என்னையும் அச்சுறுத்தினான் என குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எம்.சீலாவதி என்ற பெயருடைய குறித்த பெண்ணுக்கும் குணபாலவுக்கும் இடையிலான கள்ள உறவு சில வருடங்களுக்கு முன்னரேயே ஆரம்பித்துள்ளது.
எஸ்.எம்.சீலாவதி தங் கொட் டுவை பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன் றில் பணி புரிந்தபோது மிஸ் கோல் ஒன்று ஊடாக வளர்ந்த தொடர்பால் குணபாலவை அறி முகமாகியுள்ளதுடன் அதிலிருந்து கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துள்ளமை விசார ணைகளில் தெரிய வந்துள்ளது.
அன்பு, பாசம், கருணை, செல்வம் என அழ காக வாழ்ந்த ஒரு குடும்பத்தை காமம், கோபம், பேராசை என்ற கெட்ட எண்ணங்களின் மொத்த வடிவமொன்று பலியெடுத்து அடங்கி விட்டது. இன்று டாக்டர் அம்மா அவர் கணவர் பிள்ளைகள் இருவரும் கல்லறையில் துயில் கொள்ளும் நிலையில் அவர்களின் ஆத்மாக் களுக்காக ஆயிரம் உறவுகள் பார்த்திருக்கின்றன.
(பொலிஸ் தகவல்களை வைத்து எழுதப்பட்டது)