மும்பை: திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகை வித்யா பாலன் திடீர் திடீர் என பரபரப்பைக் கிளப்புவது ரசிகர்களுக்குப் பழக்கமான ஒன்றுதான். காலண்டர் ஒன்றின் விளம்பரத்திற்காக உடலில் ஆடைகள் இல்லாமல், பேப்பரால் மறைத்துக் கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
பா, கஹானி உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை வித்யாபாலன், டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சிகரமான நடிப்பால் கலக்கியிருந்தார்.
டர்ட்டி பிக்சர் படம் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டது என்பது இங்கு நினைவுக் கூரத்தக்கது. இந்நிலையில், மிகவும் கவர்ச்சியாக காலண்டர் ஒன்றின் அட்டைப்படத்திற்காக போஸ் கொடுத்துள்ளார்.
காபி வித் வித்யா…
இதில், உடை எதுவும் அணியாமல் கையில் ஒரு கப் காபியும், மற்றொரு கையில் பேப்பரும் கொண்டு காட்சி அளிக்கிறார் வித்யா. இது இந்தாண்டு காலண்டருக்காக எடுக்கப் பட்ட போட்டோ ஷூட்.
முதல்முறையல்ல…
இவ்வாறு ஆடைகளைத் துறந்த நிலையில் போஸ் தருவது வித்யா பாலனுக்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே, பல வார, மாத இதழ்களுக்கு இதே போல் கவர்ச்சி போஸ் பல அவர் கொடுத்துள்ளார்.
கவர்ச்சி அட்டைப்படங்கள்…
குறிப்பாக எப்.ஹெச்.எம். என்ற இதழுக்கு இது போன்ற கவர்ச்சி போஸ்கள் விதவிதமான அவர் கொடுத்துள்ளார். படுக்கையில் அமர்ந்தபடி பெட்ஷீட்டால் உடலை மூடியபடி ஒரு அட்டைப் படத்தில் போஸ் கொடுத்துள்ளார்.
சேலை அணிந்த வித்யா…
மற்றொரு இதழின் அட்டைப்படத்தில் சேலை அணிந்திருந்திருக்கும் வித்யா, ஜாக்கெட் அணியாத முதுகைக் காட்டியபடி அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் எடுக்கப் பட்டுள்ளது.
அரை நிர்வாணமாக…
இந்தப் புகைப்படத்தில் மேலாடை இன்றி உடலில் ஏதோ வெள்ளையாக ஒன்றைப் பூசியபடி போஸ் தந்துள்ளார் வித்யா
லுங்கி டிரஸ்….
இதுவும் எப்.ஹெச்.எம். அட்டைப்படம் தான். இதில் கைலி போன்ற துணியால் உடலைப் போர்த்தியுள்ளார் வித்யா. ஆனால், இம்முறையும் முதுகில் மட்டும் ஆடை மிஸ்ஸிங்.
உள்ளாடை விளம்பரமா…?
இது மேக்ஸிம் அட்டைப்படமாக வெளியான புகைப்படம். இதில் மேக்ஸிமம் கவர்ச்சியில், உள்ளாடை விளம்பரம் போன்று காட்சி அளிக்கிறார் வித்யா.
டர்ட்டி டீச்சர்…
போட்டோ ஷூட்களிலேயே இவ்வளவு தாராளம் காட்டும் வித்யாபாலன். சில்க் ஸ்மிதா போன்ற கவர்ச்சி நடிகையின் வேடத்தில் நடிப்பதென்றால், சும்மா இருப்பாரா.. அதுதான் கவர்ச்சி மழையில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார் டர்ட்டி பிக்சர் படம் மூலம்.!