கொழும்பு: ராஜபக்சேவின் மகன்களான நமல், யோஷிதா மற்றும் ரோஹிதா ஆகியோர் பல பெண்களை கடத்தியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உருமயா என்ற சிங்கள அமைப்பு கூறியுள்ளது.
இந்த மூவரும் சேர்ந்து பல பெண்களைப் பலாத்காரம் செய்த செயல் குறித்து தங்களிடம் ஏராளமான தகவல்கள் இருப்பதாகவும், நமல் ராஜப்சேவின் நீலப்படையினர் பெண்களைக் கடத்திச் சென்று இந்த மூன்று காமுகர்களும் சீரழித்துள்ளதாகவும் இந்த அமைப்பின் தலைவரான நிஷாந்தா சிறிவர்ணசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊழல் – பாலியல்
பலாத்காரங்கள் ராஜபக்சேவின் மூன்று மகன்களும் பல்வேறு விதமான ஊழல்களிலும் பாலியல் பலாத்காரச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவற்றை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.
விரிவான தகவல்கள்
இதுதொடர்பாக எங்களிடம் விரிவான தகவல்கள் உள்ளன. அவர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களுக்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இளம் பெண்களை சீரழித்தவர்கள்
இந்த மூன்று பேரும் ஏராளமான இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். செக்ஸ் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நமல் செய்த அட்டகாசம்
நீலப்படை என்ற பெயரில் நமல் செய்த அட்டகாசம்தான் மிகப் பெரியது. இது நாட்டின் மாற்று ராணுவம் போல செயல்பட்டு வந்தது. நமல் தலைமையில் இயங்கி இந்த நீலப்படையினர் கடத்திய பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
எண்ணிலடங்காத பெண்கள்
இந்த மூவராலும் பாதிக்கப்பட்ட பெண்கள் எக்கச்சக்கமாக உள்ளனர். இத்தனை பேர்தான் என்று கூற முடியாத அளவுக்கு சரமாரியாக இவர்கள் பல பெண்களை சீரழித்துள்ளனர்.
பதவியும் பணமும் கொடுத்து
தங்களால் சீரழிக்கப்பட்ட பல பெண்களுக்கு ஏராளமான பணத்தையும், பதவிகளையும் கொடுத்து இவர்கள் சரிக்கட்டியுள்ளனர். இந்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம்.
யாரையும் விடக் கூடாது
இந்த மூன்று பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். யாரையும் தப்ப விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
நடிகைகளுடன் தொடர்பு
ஏற்கனவே இந்த மூன்று பேருக்கும் பல நடிகைகளுடன் தொடர்பு உள்ளதாக ஒரு தகவல் உண்டு. அதிலும் நமல் ராஜபக்சேவுக்கும் இந்திய நடிகைகள் பலருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள், புகைப்பட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன என்பது நினைவிருக்கலாம்.