பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் பாகிஸ்தான் ரெஹ்ரீக் ஈ இன்சாவ் கட்­சியின் தலை­வ­ரு­மான இம்ரான் கான், தொலைக்­காட்சி அறி­விப்­பா­ள­ரான ரெஹாம் கானை திரு­மணம் செய்து கொண்­டுள்­ளமை உறுதியாகியுள்ளது.

இஸ்­லா­மா­பாத்­தி­லுள்ள இம்ரான் கானின் இல்­லத்தில் கடந்த 8 ஆம் திகதி இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றுள்­ளது.

இம்ரான் கானின் பேஸ் புக் பக்­கத்தில் இத்­தி­ரு­மணம் குறித்து தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

“பாரி கலா­லாவில் நடை­பெற்ற சாதா­ரண வைப­வ­மொன்றில் ரெஹாம் கானை இம்ரான் கான் இன்று (ஜன­வரி 8) திரு­மணம் செய்­து கொண்டார்.

நிக்கா வைபவம் இம்ரான் கானின் இல்­லத்தில் முப்தி சயீட்­டினால் நடத்­தப்­பட்­டது. திரு­மண பைவத்தை தொடர்ந்து வறி­ய­வர்­க­ளுக்கு உணவு விநி­யோக நிகழ்வு நடை­பெறும்.

1420794579-473இத்­தி­ரு­மணம் இம்ரான் கானின் பிரத்­தி­யேக வாழ்க்­கையில் ஆசிர்­வா­த­கங்­களை கொண்டு வரட்டும். ஆமீன், பாராட்­டுக்கள்” என இம்ரான் கானின் பேஸ் புக் பக்த்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் பெஷாவர் நகரில் பாட­சா­லை­யொன்றில் நடை­பெற்ற தாக்­கு­தலில் 145 பேர் கொல்­லப்பட் நிலையில் தமது திரு­மண வைப­வத்தை ஆடம்­ப­ர­மின்றி நடத்த இம்ரான் கான் தீர்­மா­னித்தார் என அவரின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

62 வய­தான இம்ரான் கானுக்கும் 41 வய­தான ரெஹாமா கானுக்கும் இது இரண்­டா­வது திரு­மணம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இம்ரான் கான் 1995 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தைச் சேர்ந்த ஜெமிமா கானை திரு­மணம் செய்து 2004 ஆம் ஆண்டு விவா­க­ரத்து பெற்­றி­ருந்தார். இத்­தம்­ப­திக்கு இரு மகன்கள் உள்­ளனர்.

ரெஹாமா கான் உள­வியல் நிபுணர் ஒரு­வரை திரு­மணம் செய்து 3 பிள்­ளை­க­ளுக்கு தாயா­ரா­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பாகிஸ்­தா­னிய பெற்­றோரின் மக­ளாக லிபி­யாவில் பிறந்த ரெஹாமா கான், பி.பி.சி. தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையில் வானிலை அறி­விப்­பா­ள­ரான பணி­யாற்­றி­யவர்.

பின்னர் அவர் பாகிஸ்­தா­னுக்கு திரும்பி பாகிஸ்தான் தொலைக்­காட்­சியில் பணி­யாற்­றி­வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ரெஹா­மாவும் இம்ரான் கானும் திரு­மணம் செய்­யப்­போ­வ­தாக கடந்த சில வாரங்­க­ளாக சமூக வலைத்­த­ளங்­களில் தகவல்கள் பர­வின.

இவர்கள் இர­க­சி­ய­மாக திரு­மணம் செய்து ­கொண்­ட­தாக கடந்த வாரம் தகவல் வெளி­யா­னது.

இது குறித்து கருத்து தெரி­வித்த இம்ரான் கான் பாகிஸ்தான் மக்­க­ளுக்கு தனது திரு­மணம் குறித்து விரைவில் நல்ல செய்தி கூறப்­போ­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் இந்த ஜோடி திரு­மணம் கொண்­டமை தற்­போது உறு­தி­யா­கி­யுள்­ளது.

இத்­தி­ரு­ம­ணத்தை இம்ரான் கானின் சகோ­த­ரிகள் விரும்ப­வில்லை என ஏற்­கெ­னவே தகவல் வெளி­யா­கி­யி­ருந்­தது. இந்நிலையில் இத்­தி­ரு­மண வைபவத்தில் அவர்கள் கலந்­து­கொள்­ள­வில்லை.

ஆனால், மண­ம­க­ளான ரெஹாம் கானின் தாயார், சகோ­த­ரிகள், மற்றும் இரு நெருங்­கிய நண்­பிகள் இவ்­வை­ப­வத்தில் கலந்­து­கொண்­டனர்.

இம்ரான் கானும் ரெஹாம் கானும் தமது திரு­ம­ணத்தின் பின்னர் தேனி­ல­வுக்குச் செல்­லாமல், அறக்­கட்­ட­ளை­யொன்­றினால் நடத்­தப்­படும் இஸ்­லா­மா­பாத்­தி­லுள்ள சிறுவர் இல்­ல­மொன்­றுக்கு விஜயம் செய்து அங்கு தங்­கி­யுள்ள சிறார்கள் மற்றும் ஊழியர்­க­ளுடன் இணைந்து மதிய உணவை உட்­கொண்­டனர்.

இந்த சிறுவர் இல்­லத்­துக்கு விஜ­யம்­செய்­த­போது தமது வாக­னத்தை இம்ரான் கானே செலுத்தி வந்தார். அவருக்கு அருகிலிருந்த ஆசனத்தில் பல வர்ணங்களிலான ஆடை அணிந்த திருமதி ரெஹாமா கான் அமர்ந்திருந்தார்.

இத்திருமணத்துக்கான மஹர் பணமாக 82,000 பாகிஸ்தான் ரூபாவை (சுமார் 1,05,000 இலங்கை ரூபா) இம்ரான் கான் வழங்கினார் என இம்ரான் கானின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

24571A9C00000578-2891756-image-m-4_1420018061842Ms Khan, a divorced mother-of-three, was a BBC weather girl but is now a news anchor of AAJ TV

24571A9400000578-0-image-a-15_1420512746063imran-khan-reham-khan1

Share.
Leave A Reply