ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே வெல்வார் என ஜனாதிபதி மைத்ரியின் சகோதரர் டட்லி சிறிசேனவிடம் பந்தயம் கட்டியிருந்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த பெரேரா, மாகாணசபை

அமைச்சர்களுக்கான விசேட அனுமதியில் இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 2.5 கோடி பெறுமதியான சொகுசு வாகனத்தை இழந்துள்ளார்.

தனது பந்தயம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்திலும் பகிரங்கமாக விளம்பரம் செய்துவந்த அவர் தற்போது தோல்வியின் பின் வாகனத்தை டட்லி சேனாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் வடமேல் மாகாண சபையின் ஆட்சி எதிர்க்கட்சிக்கு மாறும் நிலை தோன்றியிருப்பதோடு பெரும்பாலும் இன்று அல்லது நாளை எதிர்க்கட்சித் தலைவர் ஆளுனரை தொடர்புகொள்வார் எனவும் எனதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply