கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரில் தமது குருநாதராகிய மறைந்த இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் சில காட்சிகளில் தோன்றுகிறார்.
இதனூடாக தமது குருவிற்கான கௌரவத்தை வழங்கியுள்ளார் கமல். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் உத்தம வில்லன். பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்தப் படம் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது படத்தை பெப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை நேற்று வெளியிட்டுள்ளனர். இதில் கமல் சினிமா இயக்குநர் மற்றும் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர் என இரு வேடங்களில் வருகிறார்.