தனது கணவருக்கு பிறிதொரு பெண்ணுடன் காதல் தொடர்பு இருப்பதை அறிந்து சினமடைந்த மனைவியொருவர், கணவரது பிறப்புறுப்பை இரு தடவைகள் வெட்டி துண்டித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஷங்கியு நகரைச் சேர்ந்த வென் பெங் லங் (30 வயது) என்ற பெண்ணே தனது கணவரான பான் லங்கின் (32 வயது) பிறப்புறுப்பை இரண்டாவது தடவையாக வெட்டி துண்டித்துள்ளார்.
பான் லங் தனது மனைவியின் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தி தனது காதலியான ஸாங் ஹங்கிற்கு (21 வயது) காதல் ரசம் ததும்பும் இலத்திரனியல் அஞ்சல்களை அனுப்பிவைத்துள்ளார்.
அவர் கையடக்கத்தொலைபேசியில் தனது மின்னஞ்சல் தொடர்பை துண்டிக்க மறந்ததால் அந்த காதல் ரசம் ததும்பும் செய்திகளை கண்டறிந்த பெங் லங், கையில் கிடைத்த கத்தரிக்கோலுடன் படுக்கை அறைக்குள் பிரவேசித்து அங்கு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த பான் லங்கின் பிறப்புறுப்பை வெட்டித் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு வெட்டப்பட்ட பிறப்புறுப்பு சகிதம் கொண்டு செல்லப்பட்ட பான் லங்கிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரது பிறப்புறுப்பை வெற்றிகரமாக மீள அவருக்கு பொருத்தினர்.
இந்நிலையில் அந்த மருத்துவமனைக்குள் இரகசியமாக பிரவேசித்த பெங் லங், அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட தனது கணவரது பிறப்புறுப்பை மீளவும் துண்டித்து, அதனை ஜன்னலால் வீசியுள்ளார்.
இதனால் கடும் சினத்துக்குள்ளான பான் லங் பிறப்புறுப்பு பகுதியில் குருதி பெருக்கெடுத்தோட நிர்வாணக் கோலத்தில் தனது மனைவியை மருத்துவமனைக்கு வெளியில் துரத்திச்சென்று அவரை அடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் தலையிட்டு அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் மருத்துவமனையிலிருந்த அவரது அறைக்கு தூக்கிச் சென்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனைக்கு விஜயம் செய்த பான் லங்கின் காதலியான ஸாங் ஹங், விரைவில் தனது காதலரை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
மருத்துவமனை ஜன்னலால் வீசப்பட்ட பான் லங்கின் பிறப்புறுப்புப் பகுதியை மீட்பதற்கு மருத்துவர்களும் பொலிஸாரும் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
அந்தப் பிறப்புறுப்பு பகுதியை கட்டாக்காலி நாய் அல்லது பூனை உண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பான் லங்கிற்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளனர்.
பொலிஸார் பெங் லங்கை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர்.