தனது கண­வ­ருக்கு பிறி­தொரு பெண்­ணுடன் காதல் தொடர்பு இருப்­பதை அறிந்து சின­ம­டைந்த மனை­வி­யொ­ருவர், கண­வ­ரது பிறப்­பு­றுப்பை இரு தட­வைகள் வெட்டி துண்­டித்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மத்­திய சீனாவின் ஹெனான் மாகா­ணத்தில் ஷங்­கியு நகரைச் சேர்ந்த வென் பெங் லங் (30 வயது) என்ற பெண்ணே தனது கண­வ­ரான பான் லங்கின் (32 வயது) பிறப்­பு­றுப்பை இரண்­டா­வது தட­வை­யாக வெட்டி துண்­டித்­துள்ளார்.

பான் லங் தனது மனை­வியின் கைய­டக்கத்தொலை­பே­சியை பயன்­ப­டுத்தி தனது காத­லி­யான ஸாங் ஹங்­கிற்கு (21 வயது) காதல் ரசம் ததும்பும் இலத்­தி­ர­னியல் அஞ்­சல்­களை அனுப்பிவைத்­துள்ளார்.

அவர் கைய­டக்கத்தொலை­பே­சியில் தனது மின்­னஞ்சல் தொடர்பை துண்­டிக்க மறந்­ததால் அந்த காதல் ரசம் ததும்பும் செய்­தி­களை கண்­ட­றிந்த பெங் லங், கையில் கிடைத்த கத்­த­ரிக்­கோ­லுடன் படுக்கை அறைக்குள் பிர­வே­சித்­து அங்கு நிம்­ம­தி­யாக உறங்­கிக்­கொண்­டி­ருந்த பான் லங்கின் பிறப்­பு­றுப்பை வெட்டித் துண்­டித்­துள்ளார்.

showImageInStoryஇத­னை­ய­டுத்து மருத்­து­வ­ம­னைக்கு வெட்­டப்­பட்ட பிறப்­பு­றுப்பு சகிதம் கொண்டு செல்­லப்­பட்ட பான் லங்­கிற்கு சிகிச்­சை­ய­ளித்த மருத்­து­வர்கள், அவ­ரது பிறப்­பு­றுப்பை வெற்­றி­க­ர­மாக மீள அவ­ருக்கு பொருத்­தினர்.

இந்­நி­லையில் அந்த மருத்­து­வ­ம­னைக்குள் இர­க­சி­ய­மாக பிர­வே­சித்த பெங் லங், அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்­தப்­பட்ட தனது கண­வ­ரது பிறப்­பு­றுப்பை மீளவும் துண்­டித்து, அதனை ஜன்­னலால் வீசி­யுள்ளார்.

இதனால் கடும் சினத்­துக்­குள்­ளான பான் லங் பிறப்­பு­றுப்பு பகு­தியில் குருதி பெருக்­கெ­டுத்­தோட நிர்­வாணக் கோலத்தில் தனது மனை­வியை மருத்­து­வ­ம­னைக்கு வெளியில் துரத்­திச்­சென்று அவரை அடிக்க ஆரம்­பித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து மருத்­து­வ­மனை ஊழி­யர்கள் தலை­யிட்டு அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்த அவ­ரது அறைக்கு தூக்கிச் சென்­றனர்.

இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து மருத்­து­வ­ம­னைக்கு விஜயம் செய்த பான் லங்கின் காத­லி­யான ஸாங் ஹங், விரைவில் தனது காத­லரை திரு­மணம் செய்­ய­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

மருத்­து­வ­மனை ஜன்­னலால் வீசப்­பட்ட பான் லங்கின் பிறப்­பு­றுப்புப் பகு­தியை மீட்­ப­தற்கு மருத்­து­வர்­களும் பொலி­ஸாரும் மேற்­கொண்ட முயற்சி தோல்­வியைத் தழுவியுள்ளது.

அந்தப் பிறப்புறுப்பு பகுதியை கட்டாக்காலி நாய் அல்லது பூனை உண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பான் லங்கிற்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளனர்.

பொலிஸார் பெங் லங்கை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர்.

Share.
Leave A Reply