வடமராட்சி பகுதியில் 11 வயது சிறுமியை கற்பிணியாக்கியமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி நெல்லியடியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை கற்பிணியாக்கியமை தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

யாழில் 321 பேர் பொலிஸாரால் கைது
16-01-2015

27781231312யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 321 பேர் குற்­றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ பி.விமலசேன தெரிவித்தார்.

யாழ்ப்பாண தலமைப் பொலிஸ் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளில் யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் அடித்துக்காயம் ஏற்படுத்தியமைக்காக 45 பேரும், களவு தொடர்பில் 29 பேரும், வீதி விபத்து 2 பேரும், அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம் வித்தமைக்காக 28 பேரும்,

சந்தேகத்தின் பேரில் 4 பேரும், பிடிவிறாத்து மூலம் 21 பேரும், கலகம் விளைவித்தமை 9 பேரும், குடித்துவிட்டு கலகம் 3 பேரும், மதுபோதையில்வாகனம் செலுத்தியமை 6 பேரும், தடை செய்யப்பட்ட கத்தி வைத்திருந்தமை ஒருவரும்….,

அத்துமீறி உள்நுழைந்தமை 2 பேரும், பாதுகாப்பு கவசம் 2 பேரும், பொதுமக்களுக்கு கலகம் விளைவித்தமை 4 பேரும், கொலைக் குற்ச்சாட்டு ஒருவரும், பலவந்தமாக பண மோசடி 7 பேரும், சூழல் மாசு ஏற்படுத்தியமை 4, பேருமாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் பாலியல் துஸ்பிரயோகம் 4 பேரும்,

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 பேரும், அவதூறு ஏற்படுத்தியமை 10 பேரும், சந்தேகத்தில் 9 பேரும், ஏனைய குற்றங்களுக்காக 100 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு குற்றத்திற்கு ஏற்ப நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply