ர­ஹேன்­பிட்­டி­யி­ல் சிறிய ரக விமானம் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது என்ற செய்தி கடந்த செவ்­வா­யன்று மாலையாகும் போதுபலரின் காது­க­ளுக்கு எட்டி நாட­ளா­விய ரீதியில் காட்டுத் தீ போல் பர­வி­யது.

கொழும்பு நகரின் பிர­ப­ல­மான பிர­தே­ச­மான நார­ஹேன்­பிட்­டியில் அமைந்­துள்ள பொரு­ளா­தார மத்­திய நிலையத்தின் களஞ்சிய­சா­லை­யொன்றில் இருந்தே இந்த விமானம் மீட்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் விமா­னத்­துடன் தொடர்­பு­பட்ட கட்டுக் கதை­க­ளுக்கும் கற்­ப­னை­க­ளுக்கும் கூட தடை இருக்­க­வில்லை.

அப்­ப­டி­யானால் உண்­மையில் நடந்­தது என்ன? அந்த விமானம் யாரு­டை­யது? போன்ற கேள்­விகள் உங்கள் உள்­ம­னதை கேட்பது எமக்­குத்­தெ­ரி­கி­றது.

ஆம், அது கடந்த 13 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நேரம் எப்­ப­டியும் மாலை 6 மணியை எட்­டி­யி­ருக்கும். பொலிஸ் அவசரசேவைப் பிரி­வான 119 இற்கு ஒரு அழைப்பு. சேர்… நான் நார­ஹேன்­பிட்டி பகு­தி­யி­லி­ருந்து பேசு­கிறேன்.

இங்­குள்ள பொரு­ளா­தார மத்­தி­யநிலையத்தில் விமானம் ஒன்று உள்­ளது. சிலர் அதனை கொண்டு போக முயற்­சிக்­கின்­றனர் என தக­வலை அளித்­த­வுடன் துண்­டிக்­கப்­பட்­டது அந்த அழைப்பு.

இத­னை­ய­டுத்து விடயம் உட­ன­டி­யாக நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ருக்கு பரி­மாற்­றப்­பட்­டது. உட­ன­டி­யாக செயற்­பட்ட நாரஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி  விசேட  குழு­வொன்­றுடன் குறிப்­பிட்ட இடத்­துக்கு விரைந்தார்.

அந்த பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை அடைந்த பொலி­ஸா­ரினால் அவர்­களின் கண்­களை நம்ப முடி­ய­வில்லை. ஆம். விமானம் ஒன்று அங்கு முழு­தாக இருந்­தது.

சிறிய ரக விமானம் அது 4R – RAY என்ற நீலம், வெள்ளை, சாம்பல் நிறம் கலந்த அந்த விமா­னத்தில் இருவர் மட்­டுமே பயணிக்கக் கூடி­ய­வாறு இரு ஆச­னங்கள்.

இவை­யெல்­லா­வற்­றையும் விட அந்த விமா­னத்தின் சிற­கு­களை நால்வர் கழற்­றிக்­கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்த போது பொலிஸார் மேலும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

vimanam-2இரத்­ம­லா­னையில் உள்­ளது ஏசியன் ஏயார் சென்டர். இது தனியார் விமான ஓட்­டுநர் பயிற்சி நிலையம். இந்த நிலை­யத்தை சேர்ந்த நால்­வரே அந்த விமா­னத்தை பாகங்­க­ளாக பிரித்­துக்­கொண்­டி­ருந்­தனர்.

இத­னை­விட அந்த களஞ்­சி­யசாலையில் தனியார் விளை­யாட்டு ஊடகம் ஒன்­றுக்கு சொந்­த­மான வெளிக்­கள ஒளி­ப­ரப்­புக்கு உதவும் கரு­விகள், பொறி ஒன்றும் இருந்­தன.

இவை அனைத்­தையும் வைத்துப் பார்த்த பொலிஸார் ஏதோ ஒன்று நடை­பெ­று­வதை ஊகித்துக் கொண்டு விமா­னத்தை பாகங்­க­ளாக பிரிக்கும் நட­வ­டிக்­கையை நிறுத்தச் செய்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்பக் கட்ட விசா­ர­ணை­களில் அந்த விமானம் பழு­த­டைந்த நிலையில் உள்­ளதை தெரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது.

இந்த நிலையில் இந்த விமானம் யாரு­டை­யது? ஏன் இந்த இடத்தில் வைக்­கப்­பட்­டுள்­ளது? அதனை அவ­ச­ர­மாக கொண்டு செல்ல காரணம் என்ன?

ஏதேனும் சட்ட விரோத நட­வ­டிக்­கைக்கு இது பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா உள்­ளிட்ட கேள்­வி­க­ளுக்கு பொலிஸார் உட­ன­டி­யாக பதில் தேட வேண்­டி­யி­ருந்­தது.

showImageInStory
இந்­நி­லை­யில்தான் பிர­பல சிங்­கள திரைப்­பட இயக்­குனர் சந்­திரன் ரத்னம் நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ருக்கு ஒரு வாக்கு மூலம் ஒன்றை வழங்கி அந்த விமா­னத்­துக்கு உரி­மை­யா­ள­ராக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­து­கிறார்.

yoshitha_rajaphasha_killer_004யோஷித்தராஜபக்ஷ

குறித்த விமா­னத்தின் முதல் சொந்­தக்­காரர் தானே என பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் சந்­திரன் ரத்னம் குறிப்பிட்­டுள்ள நிலையில் அதனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின்  இளைய மக­னான யோஷித்தராஜபக்ஷவுக்கு தான் பரி­ச­ளித்­த­தாக குறிப்­பி­டவே விசா­ர­ணைகள் மற்­றொரு கோணத்தை நோக்கி நகர்ந்­தன.

நார­ஹேன்­பிட்டி பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த விசா­ர­ணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இடம்­பெ­ற­லா­னது.

நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ருக்கு இயக்­குனர் சந்­திரன் ரத்னம் வழங்­கிய வாக்கு மூலம் பின்­வ­ரு­மாறு இருந்­தது.

ஆம். இந்த விமானம் என்­னு­டை­ய­துதான். நான் 2013ஆம் ஆண்டு ஜன­வரி மாத­ம­ளவில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப­க் ஷவின் மக­னான யோஷித்­த­வுக்கு அதனை வழங்­கினேன்.

அதற்கு முன்னர் இரு முறை அதில் பயணம் செய்­துள்ளேன். அது தற்­போது பய­ணிக்க முடி­யாத நிலையில் பழுதடைந்துள்ளது.

showImageInStoryஇயக்­குனர் சந்­திரன் ரத்னம்

செவ்­வா­யன்று குமார் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்ற நபர் கேட்டுக் கொண்­ட­தற்­கி­ணங்­கவே எனது நிறு­வ­னத்தை சேர்ந்தவர்கள் நார­ஹேன்­பிட்­டிக்கு சென்று அதனை இரத்­ம­லா­னைக்கு கொண்டு போக முயற்­சித்­தனர். வேறு எந்த காரணமும் கிடை­யாது.

யோஷித்­த­வுக்கு வழங்­கி­யதன் பின்னர் அந்த விமானம் தொடர்பில் நான் எதையும் அறிந்­தி­ருக்­க­வில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இயக்­குனர் சந்­திரன் ரத்­னத்தின் வாக்கு மூலத்தை ஒரே­ய­டி­யாக நம்­பி­வி­டாத பொலிஸார் அதனை ஆராய்ந்து வரு­கின்­றனர்.

இத­னி­டை­யேதான் அந்த விமானம் உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்­டது என்ற விடயம் ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்படுத்தப்பட்­டன.

இந்த விமா­ன­மா­னது பேராசிரியரே விஜே­வர்­த­னவே வடி­வ­மைத்து தயா­ரித்­த­தாக பல்­வேறு புகைப்­பட ஆதா­ரங்­க­ளுடன் தகவல்கள் வெளி­யா­கின.

இந்­நி­லையில் அந்த கூற்­றுக்­களை மேலும் வலுப்­ப­டுத்தும் வித­மாக சிலாபம் – பங்­க­தெ­னிய தெமட்­ட­பிட்­டிய பிர­தே­சத்தை சேர்ந்த தொழில்­நுட்­ப­வி­ய­லா­ள­ரான ஹெம்லட் மார்டிஸ்ட் என்­ப­வரின் கூற்­றுக்கள் அமைந்­தி­ருந்­தன.

அதா­வது இந்த விமா­னத்தை பேரா­சி­ரியர் ரே விஜே­வர்த்­தன வடி­வ­மைத்த போது தான் அதன் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­ய­தா­கவும் குறிப்­பி­டு­கின்றார்.

அவர் அந்த விமானம் குறித்து வெளிப்­ப­டுத்­திய தக­வல்­க­ளையும் நாம் உங்­க­ளிடம் பகிர்ந்து கொள்­கின்றோம்.

நான் அந்­நாட்­களில் பேரா­சி­ரியர் ரே. விஜே­வர்த்­த­ன­வி­டமே வேலை பார்த்தேன். அவர் புது விட­யங்­களை செயற்­ப­டுத்த விருப்­ப­மு­டை­யவர்.

நாங்கள் பல­வற்றை உரு­வாக்­கினோம். வெளி­நாட்­டி­லி­ருந்து கொண்டு வந்த பாகங்­க­ளையும் உள்­நாட்டில் பெற்­றுக்­கொண்ட பொருட்­க­ளையும் கொண்டே  நாம் அந்த சிறிய விமா­னத்தை தயா­ரித்தோம்.

vimanamஇந்த விமா­னத்தின் என்ஜின் 64 குதிரை வலு கொண்­டது. 35 லீற்­றர்கள் வரை எரி­பொ­ருளை நிரப்ப முடியும். கடல் மட்டத்திலி­ருந்து 5,800 அடி உயரம் வரையில் பறக்கும் வல்­லமை அந்த விமா­னத்­துக்கு உள்­ளது.

இரு­வ­ருக்கும் மட்­டுமே பய­ணிக்க முடியும். எனினும் ஒரு சந்­தர்ப்­பத்தில் குறித்த உய­ரத்தை விட சற்று மேல் நாம் இருவரும் பய­ணித்தோம். எனினும் அதிக உஷ்ணம் கார­ண­மாக திரும்­பினோம்.

ரே. விஜே­வர்த்­த­ன­வுடன் இந்த விமா­னத்தில் சிலாபம்,- களுத்­துறை ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு சென்­றுள்ளேன். அக்­கா­லத்தில் ரே விஜே­வர்த்­த­ன­வுக்கு சொந்­த­மான   சிறிய ரக விமா­ன­மொன்று சிலாபம் – இர­ண­வில பிர­தே­சத்தில் விழுந்து நொருங்கியது. அவர் இவற்றை பொழுது போக்­கிற்­கா­கவே உரு­வாக்­கினார். வேறு காரணம் கிடை­யாது.

இந்த விபத்தின் பின்னர் அர­சா­னது தனியார் விமா­னங்கள் பறக்க தடை விதித்­தது. அதனை தொடர்ந்து இந்த விமா­னத்­தினை விமான ஓட்­டுனர் பயிற்சி நிலையம் ஒன்­றுக்கு வழங்க ரே. விஜே­வர்த்­தன விருப்பம் கொண்­டி­ருந்தார்.

நான் இதனை புரா­தன பொரு­ளாக காக்க கோரிய போதும் அவர் வழங்­க­வில்லை என கூறும் ஹெம்லட் மார்டிஸ்ட் பல புகைப்­ப­டங்­க­ளையும் ஆதா­ர­மாக சமர்ப்­பிக்­கின்றார்.

இந்­நி­லையில் இந்த சிறிய ரக விமானம் தொடர்பில் நார­ஹேன்­பிட்டி பொலிஸார் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்­டவின்   மேற்­பார்­வையில் மேற்­கொண்ட   விசா­ரணை கொழும்பு   குற்­றத்­த­டுப்பு பிரி­விடம் (சீ.சீ.டி) ஒப்படைக்கப்பட்டுள்­ள­தாக பொலிஸ் ஊடக பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

விசே­ட­மாக இந்த விமானம் தொடர்­பான விசா­ர­ணையில் பின்­வரும் கார­ணங்­களை நாம் வெளிப்­ப­டுத்திக் கொள்ள எதிர்­பார்க்­கின்றோம் என சில கேள்­வி­களை பட்­டியல் இடு­கின்றார் பொலிஸ் பேச்­சாளர் அஜித் ரோஹண.

இந்த விமா­னத்தின் உண்மை முதல் உரி­மை­யாளர் யார்? இந்த விமா­னத்தை ஒரு­வ­ருக்கு வழங்கும் போது உரிய சட்ட நடை­மு­றைகள் பின்­பற்­றப்­பட்­டுள்­ள­னவா? நார­ஹேன்­பிட்டி பிர­தே­சத்­துக்கு இந்த விமானம் ஏன் எடுத்து வரப்­பட்­டது? எப்­படி கொண்டு வரப்­பட்­டது? மீண்டும் எடுத்துச் செல்ல முற்­பட்­ட­மைக்­கான காரணம் என்ன?

ஆகிய விட­யங்­க­ளுக்கு நாம் விசா­ர­ணை­களில் பதிலை எதிர்­பார்க்­கின்றோம். அதனால் விசா­ர­ணை­க­ளுக்கு பாதிப்­பேற்­படா வண்ணம் விமானம் இன்னும் அந்த களஞ்­சி­ய­சா­லை­யி­லேயே வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அந்த இடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

இந்நிலையில் திரைப்பட இயக்குனரான சந்திரன் ரத்னம் உள்ளிட்ட சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ள பொலிஸார் யோஷி த்த ராஜபக் ஷவுக்கு இந்த விமானத்தினை சந்திரன் ரத்னம் வழங்கியபோது உரிய சிவில் விமான உரிமை சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்கின்றனர்.

4R–-RAY விமானம் யாருக்கு சொந் தமானது? என்ற கேள்விக்கு மிக விரைவில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப் பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் சில்வா தலைமையிலான பொலி ஸார் விடையளிப்பர் என எதிர்பார்க்கலாம். அத்துடன் இதில் புதைந்துள்ள மர்மங் கள் அனைத்தும் மிக விரைவில் வெளிப்படுத்தப்படும். அதுவரை நாம் அவதானத் துடன்….

D0650d

Share.
Leave A Reply