சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் தனது கணவரின் 7 வயது மகளை அடித்துக் கொன்ற பர்மாவைச் சேர்ந்த பெண் பொது இடத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டுள்ளார்.

 சவூதி  அரேபியாவின் மக்கா நகரில் வசித்து வந்த லைலா பின் அப்துல் முத்தலிப் பாசிம் என்ற அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி 7 வயது பெண் குழந்தை உள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் லைலா அந்த சிறுமியை துடைப்பத்தால் அடித்துக் கொலை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு சவ+தி சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரை மக்கா நகரின் தெருவில் இழுத்துச் சென்று வாளால் தலையை துண்டித்து தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

தெருவில் இழுத்துச் செல்கையில் நான் கொலை செய்யவில்லை என்று லைலா மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.

லைலாவை கொல்லும் வீடியோ முதலில் யு+டியு+ப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடியோ கொ^ரமாக இருந்ததால் அதை யு+டியு+ப் நிர்வாகம் நீக்கிவிட்டது.

சவுயில் 2015ம் ஆண்டில் வெறும் 2 வாரங்களில் மொத்தம் 10 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply