பிலியந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பிரபலமான அரசியல்வாதியின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படும் ஆடம்பர பந்தயக் கார் ஒன்றை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.

அந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், அவரது புதல்வர் இராணுவத்துக்கு வாகனங்களை விநியோகித்து வருபவர் எனக் கூறப்படுகிறது.

றி முநு 1391 என்ற இலக்கத்தை கொண்ட கறுப்பு, சிவப்பு நிறத்திலான காரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கார் தனது மகனின் நண்பருடையது என பொலிஸாரிடம் வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மூலம் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த காரை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கார் தொடர்பில் வீட்டிலில் இருந்தவர்கள் உரிய ஆவணங்கள் கையளிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கார், இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஓட்டப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, பிலியந்தலையிலிருந்து மீட்கப்பட்ட ஆடம்பர பந்தயக் கார், மினுவாங்கொடையிலுள்ள தொழிற்சாலைக்கு சொந்தமான ஓட்டப்பந்தய கார் என்றும் அக்கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், பொய்யான இலக்கத்தகடை பயன்படுத்தி அக்கார், ஓட்டப்பந்தயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

அந்த காரை, சோதனைக்கு உட்படுத்துவதற்கு பொலிஸாருக்கு அனுமதியளிப்பதாக மினுவாங்கொடை தொழிற்சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Car-011Car-021-600x450Car1

Share.
Leave A Reply