அலரி மாளி­கையில் இருந்து அல­றி­ய­டித்து ஓடி­விட்டார் மஹிந்த ராஜ­பக் ஷ. அவர் ‘பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்­பாற்­ற­வில்லை; ஊர் ஊரா கப் போய் பிரா­யச்­சித்தம் தேடிய கட­வு ளும் காப்­பாற்­ற­வில்லை.

‘திருப்­பதி வந்தால் திருப்பம் நேரும்’ என்­பார்கள். திருப்­பதி வந்து போன­வ­ருக்கு நேர்ந்த திருப்­பமோ, திடுக்­கிட வைத்­தது.

ராஜ­பக் ஷவின் வலது கையைப் பார்த்தால் தெரியும். கலர் கல­ராகக் கயி­றுகள் கட்­டி­யி­ருப்பார். யார் மந்­தி­ரித்து கயிறு கொடுத்­தாலும் கட்­டிக்­கொள்வார், யார் ஜோசியம் சொன்­னாலும் கேட்­டுக்­கொள் வார்.

உடல் நலி­வுற்ற நேரத்தில் 24 மணி நேரமும் குடும்ப மருத்­து­வரை தனது பார்­வை­யி­லேயே வைத்துக் கொள்­வதைப் போல, ஆஸ்­தான ஜோதிடர் தேச­பந்து சும­ண­தாச அபே­கு­ண­வர்­த­னவை எப்­போதும் தன் பக்­கத்­தி­லேயே வைத்­தி­ருந் தார்.

‘இலங்­கையில் 8-ஆம் திகதி தேர்தல் வை’ என்­ற­து­கூட தேச­பந்து குறித்துக் கொடுத்­த­துதான். ஜன­வரி 8இ-ல் தேர்தல் என்றால், டிசம்பர் 8இ-ல் வேட்­பு­மனு தாக்கல் செய்தார் ராஜ­பக் ஷ.

அவர் முதன்­மு­த­லாக (2005இ-ல்) ஜனா­தி­பதி ஆனது நவம்பர் 17 கூட்­டுத்­தொகை 8. இரண்­டா­வது முறை (2010-இல்) தேர்தல் நடந்த நாள் ஜன­வரி 26 கூட்­டுத்­தொகை 8. அதற்­கான வேட்­பு­ம­னுவை டிசம்பர் 17 தாக்கல் செய்தார்.

கூட்­டுத்­தொகை 8 ராஜ­பக் ஷ முதன்­மு­த­லாக (2004-இல்) பிர­த­ம­ரா­னது ஏப்ரல் 8. இதை­யெல்லாம் சுட்­டிக்­காட்­டிய தேச­பந்து, ‘8-ஆம் இலக்­கம்தான் உங்­க­ளுக்கு ராசி. சில­ருக்கு அதிர்ஷ்டம் எப்­போ­தா­வ­துதான் வரும்.

ஆனால், உங்­களை அதிர்ஷ்­டம்தான் இயக்கிக் கொண்­டி­ருக்­கி­றது. மூன்­றா­வது முறை மட்டும் அல்ல நான்­கா­வது முறையும் நீங்­கள்தான் ஜனா­தி­பதி’ எனக் குறித்துக் கொடுத்தார்.

சரி­யாக 10:20 மணிக்கு வேட்­பு­மனு கொடுக்கச் சொன்­னார்கள். கொடுத்தார். இடது கையால் தரச் சொன்­னார்கள். (இடது கையால் தரும்­போது நிற்கும், பார்க்கும் திசை நல்­லது! தேச­பந்து பாதை) ராஜ­பக் ஷ தந்தார்.

உலக நாடுகள் ஆத­ரித்­தாலும், மோ டியே வாழ்த்துச் சொன்­னாலும் ‘நாங்கள் மூன்­றா­வது முறையும் ஏமாறமாட்டோம்’ என்­பதை இலங்கை மக்கள் காட்­டி­விட்­டார்கள்.

வயிற்றில் குத்­து­வது போல வந்து முகத்தில் குத்த வேண்டும்’ என சிங்கள ­வர்­க­ளுக்கு இன­வெறிப் பாடத்தை நடத்­திய ஜே.ஆர். ஜய­வர்­த­னதான் சொன் னார். ‘எந்த மக்­க­ளையும் இரண்டு முறை க்கு மேல் நம்பக் கூடாது. மூன்­றா­வது முறை கவிழ்த்­து­வி­டு­வார்கள்.’

ஜே.ஆர்.ெஜவிடம் இருந்து கொடூ­ரத் தைப் படித்­துக்­கொண்ட ராஜ­பக் ஷ, அர­சி யல் பாடம் படிக்­கா­ததன் விளைவே, இந்தத் தோல்வி.

இதை ராஜ­பக் ஷ எதிர்­பார்க்­க­வில்லை. தேர்­த­லுக்கு மூன் று நாட்­க­ளுக்கு முன்பு தனது அலரி மாளி­கைக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களை அழைத்துப் பேசி னார்.

‘உங்­க­ளுக்குப் போட்டி கடு­மை­யாக இருக்­கி­றதே?’ எனத் தைரி­ய­மாக ஒருவர் கேட்டார். ‘உண்­மையில் போட்டி என எது­வுமே கிடை­யாது. அப்­ப­டி­யான போட்டி இருப்­ப­தாக எனக்குத் தெரி­ய­வில்லை. கொழும்பு வந்தால் மட்­டுமே என்னைச் சுற்றி இருப்­ப­வர்கள் போட்டி இருப்­ப­தாகச் சொல்­கி­றார்கள்.

கிராமப் பகு­தியில் அப்­படி எதுவும் இல்லை’ என ராஜ­பக் ஷ சொன்னார். அவரும் அப்­ப­டித்தான் நம்­பினார். தமி ழர்கள் தனக்கு ஓட்டுப் போட மாட்­டார் கள் என ஒப்­புக்­கொண்டார்.

கடந்த தேர்­தலில், 46 ஆயிரம் தமிழர்­ கள்தான் எனக்கு வாக்களித்­தார்கள். ஆனால், இப்­போது அதி­க­மான வாக்குகள் கிடைக்கும்’ என எதிர்­பார்த்தார். ஆம், அது நடந்­துள்­ளது.

யாழ்ப்­பாணம், வன்னி, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் கடந்த தேர்­த­லை­விடக் கூடு­த­லாக தமி­ழர்கள் ராஜ­பக் ஷ­வுக்கு வாக்களித்­துள்­ளனர். அவரே சொன்­னது மாதிரி, தெரி­யாத தேவ­தை­யை­விடத் தெரிந்த பிசாசே மேல் என நம்­பி­ய­வர்­களும் உண்டு.

ஆனால், வேட்டு முறை­யை­விட ஓட்டு முறையில் ராஜ­பக் ஷவை முதலில் முடித்­து­வி­டலாம் என தமி­ழர்கள் நினைத்­த­துதான் இந்த முடி­வுக்குக் காரணம் எனத் தேர்தல் முடி­வு­களை அல­சினால் புரி­கி­றது.

தமி­ழர்­களில் 9,78,111 பேர் மைத்­திரி­ பால சிறி­சே­ன­வுக்கு வாக்களித்­துள்­ளனர். ராஜ­பக் ஷ­வுக்குக் கிடைத்­தி­ருப்­பதோ 3,23,600. சுமார் 6.54 இலட்சம் தமி­ழர்­க ளின் வாக்­கு­களைக் கூடு­த­லாகப் பெற்­றி­ருக்­கிறார் சிறி­சேன.

மொத்த இலங்­கைக்கும் சேர்த்துப் பார்த்தால், சிறி­சேன 62,17,162 வாக்­கு­களும், ராஜ­பக் ஷ 57,68,090 வாக்­கு­களும் பெற்றுள்ளனர். சுமார் 4.49 இலட்சம் வாக்­கு­கள்தான் வெற்றி வித்­தி­யாசம். ஆக, தமி­ழர்­களின் வாக்கு சிறி­சே­ன­வுக்கு விழாமல் போயி­ருந்தால், ராஜ­பக் ஷ மீண்டும் வெற்றி பெற்­றி­ருக்­கக்­கூடும்.

ராஜ­பக்ஷவும் சிறி­சே­னவும் ஒன்­றுதான் (அது உண்­மைதான் என்­றா­லும்­கூட!) என நினைத்து ‘தேர்­தலைப் புறக்­க­ணிக்­கிறோம்’ என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­வித்­தி­ருந்து, தேர்­தலைப் புறக்­க­ணிக்க தமி­ழர்­க­ளிடம் சொல்லி, அவர்­களும் வாக்­குச்­சா­வ­டிக்கு வராமல் போயி­ருந்தால், ராஜ­பக் ஷ­வுக்கு மூன்­றா­வது முறையும் மகுடம் சூட்­டப்­பட்­டி­ ருக்கும்.

2005-ஆம் ஆண்டு தேர்­தலில் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் எடுத்த நிலைப்­பா­டுதான் ராஜ­பக் ஷவை அப்­போது ஆட்­சியில் அமர்த்­தி­யது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவா – ராஜ­பக் ஷவா என இருந்­தது அந்தத் தேர்தல்.

உலகின் பல நாடு­களில் விடு­தலைப் புலிகள் அமைப்பைத் தடை­செய்ய முயற்­சிகள் மேற்­கொண்டு, கரு­ணா­வுக்கு அடைக்­கலம் கொடுத்து அமைப்பைப் பல­வீ­னப்­ப­டுத்தி எனப் பல காரி­யங்­களை ரணில் பார்த்­தாலும், அவர் பச்சைப் படு­கொ­லை­களை நிகழ்த்தப் பயந்­தவர். புலி­களின் போர் நிறுத்­தத்தை ஏற்று, அதை நிரந்­தரப் போர் நிறுத்­த­மாக மாற்ற உத­வி­யவர்.

அவரை 2005-ஆம் ஆண்டு தேர்­தலில் புலிகள் ஆத­ரித்­தி­ருந்தால், ராஜ­பக் ஷ என்ற பிம்­பமே எழுந்­தி­ருக்­காது இத்­தனை பிணங்­களும் விழுந்­தி­ருக்­காது. அந்தத் தேர்­தலைப் புறக்­க­ணிக்கச் சொன்னார் பிர­பா­கரன்.

தமி­ழர்கள் பகு­தியில் யாருமே வாக்­குச் ­சா­வடிப் பக்­கமே போக­வில்லை. சொற்ப வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் ராஜ­பக் ஷ வென்று ஜனா­தி­பதி ஆனார். முதல் தடவை தவ­று­த­லாக வந்­து­விட்­ட­வ­ருக்கு மூன்­றா­வது தட­வை­யா­வது முற்­றுப்­புள்ளி வைக்க தமி­ழர்கள் ஒன்று சேர்ந்­தார்கள்!

மூன்­றா­வது முறையும் ராஜ­பக் ஷ வென் றால், அவர் இது­வரை நடத்­திய பச்சைப் படு­கொ­லை­க­ளுக்கு ஒட்­டு­மொத்த இலங்கையும் பச்சைக்கொடி காட்­டி­விட்­ட­தா கப் பொருள் ஆகி­விடும். உலக நாடு­க ளைத் திசை­தி­ருப்ப இது ஒன்றே போதும். அத­னால்தான் வெற்­றிக்குத்துடித்தார் ராஜ­ பக் ஷ.

கொலை செய்­யப்­பட்ட தமி­ழர்­க­ளது புகைப்­ப­டங்­களை, வீடி­யோக்­களை நாம் பார்த்துக் கொண்­டி­ருக்­கிறோம் அல்லவா? அதேபோல இந்தப் போரில் மரணம டைந்த சிங்­கள இரா­ணு­வத்­தி­னரின் புகை ப்­ப­டங்­களை, வீடி­யோக்­களைச் சேக­ரித்து சிங்களக் கிராமங்­களில் நித்­தமும் கொண்­டுபோய்க் காட்டிச் சொன்னார் ராஜ­பக் ஷ.

‘பாருங்கள். எத்­தனை ஆயிரம் சிங்­கள வீரர்­களை புலிகள் கொன்­றி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளைத்தான் நான் அழித்தேன். என்னை அழிக்க அமெ­ரிக்­காவும் இந்­தி­யாவும் ஐரோப்­பாவும் துடிக்­கின்­றன.

நீங்­கள்தான் என்னை ஆத­ரிக்க வேண்டும். உங்கள் குழந்­தைகள் எதிர்­கா­லத்தில் பாது­காப்­பாக இருக்க வேண்­டு­மானால், என்னை ஆத­ரி­யுங்கள்’ என வெறிகிளப் பி­விட்டார்.

ஏழை சிங்­கள மக்கள் வாழும் கிரா­மப்­பு­றங்­களில் இந்தப் பிர­சாரம் நன்கு எடு­பட்­டது. களுத்­துறை, மாத்­தளை, மாத்­துறை, காலி, அம்­பாந்­தட்டை, அநு­ரா­த­புரம் உள்­ளிட்ட 10 மாவட்­டங்­களில் ராஜ­பக் ஷ அதிக வாக்­கு­களை அள்­ளி­யது அத­னால் தான்.

கொழும்பு, கண்டி, கம்­பஹா, திரு­கோ­ண­மலை போன்ற மத்­தி­ய­தர வர்க்கம் கூடு­த­லாக இருக்கும் மாவட்­டங்கள் சிறி­சே­ன­வுக்குக் கைகொ­டுத்­தன. ராஜ­பக் ஷ வெற்று வாக்­கு­று­தி­களைக் கொடுத்­தாரே தவிர, கடந்த 10 ஆண்­டு­களில் இலங்­கை க்குப் பொரு­ளா­தார ரீதி­யாக எந்த நன்­மை யும் இல்லை.

வறுமை, வேலை­யில்லாத் திண்­டாட் டம் அதி­க­மா­னது. புதிய திட்­டங்கள் இல்லை என்­பதை இந்தப் படித்த, மத்­தி ­ய­தர வர்க்க சிங்­க­ளவர்கள் உணர்ந்­தார்கள். நித்­தமும் நிறம் மாற்றி மாற்றி சட்­டை யைப் போட்­டுக்­கொண்டு, கூட்ட முடி­யாத பூஜ்­ஜி­யங்­களில் முத­லீடு வந்­து ­விட் ட­தாக அறி­வித்து, குத்­து­வி­ளக்கு ஏற்­றி ­விட்டு ஹெலி­ெகாப்டர் ஏறிப் போய்­விட் டால், அதை ஓர் ஆண்டு நம்­பு­வார்கள் மக்கள்.

10 ஆண்­டு­களும் தொடர்ந்தால்? சிங்­க­ள­வர்கள் மத்­தியில் வெறுப்புவர, அது தான் காரணம்.

அதற்­காக சிறி­சே­னவை இரட்­சகர் என சிங்­கள – தமிழ் மக்கள், மதச்சிறு­பான்மை­யினர், மலை­யகச் சொந்­தங்கள் ஏற்­றுக் ­கொ ண்­டு­விட்­டனர் என நினைக்கத் தேவை யில்லை.

கரு­ணா­நி­திக்கு மாற்­றாக ஜெய­ல­லி­தா வும், சோனி­யா­வுக்கு மாற்­றாக மோடியும் வந்­து­வி­டு­வதைப் போலத்தான் இது வும். ஜெய­ல­லி­தாவும் மோடியும் சொர்க்­ கத்தைக் காட்­டு­வார்கள் என நினைத்து, யாரும் வாக்களிப்­பது இல்லை.

ஏற்­கெ­னவே இருந்­தவர் மீதான கோப த்தை, புதி­தாக வரு­பவர் அறுவடை செய்­து­கொள்­கிறார். அவ்­வளவுதான். அது இலங்­கையில் சிறி­சே­ன­வுக்குக் கிடைத்­துள்­ளது.

அர­சியல் இலக்கற்ற வன்­முறைப் போராட்­டத்தில் பங்­கெ­டுத்து, 40 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இரண்டு ஆண்­டுகள் சிறையில் இருந்­ததன் மூல­மாக அர­சிய­லுக்கு வந்­தவர் சிறி­சேன. அதன் பிறகு சந்­தி­ரி­காவின் சுதந்­திரக் கட்­சியில் தன்னை இணைத்­துக்­கொண்டு, அவரோடு இருந் தார். கட்சி சந்­தி­ரி­கா­விடம் இருந்து கை நழுவி ராஜ­பக் ஷ­விடம் வந்­த­போது, அவ­ரோடு கைகோர்த்தார்.

கட்­சிக்கு ராஜ­பக் ஷ தலைவர் என்றால், சிறி­சேன பொதுச் செய­லாளர். கடந்த 10 ஆண்­டுகள் நிலைமை இதுதான். ராஜ­பக் ஷ அமைச்­ச­ர­வையில் சுகா­தாரத் துறை அமைச்சர். 2009-ஆம் ஆண்டு இறுதிப் போர் கால­கட்­டத்தில் இராணுவ அமைச்­ச­ராக இருந்த ‘பெரு­மை’யும் இவ­ருக்கு உண்டு.

ராஜ­பக் ஷவின் சகோ­தரர்களைப் பிடிக்­காமல் கடந்த நவம்­பரில் அந்தக் கட்­சிக்கு முழுக்குப் போட்­டு­விட்டு வெளியில் வந்தார் சிறி­சேன. தமி­ழர்­களின் வாக்­கு­களை வாங்­கு­வ­தற்­கா­கக்­கூட, தமி­ழர்­க­ளுக்கு மறந்தும் எந்த வாக்­கு­று­தியும் தந்­து­ வி­டா­தவர்.

எவ்­வ­ளவு தரை டிக்கெட் அர­சி­யல்­வா­தி­யாக இருந்­தாலும், யாரா­வது தன்னை ஆத­ரித்தால் பதி­லுக்கு ஒரு நன்­றி­யா­வது சொல்வார்.

ஆனால், ‘தமிழ்த் தேசியக் கூட்­ட­மை ப்பு என்னை ஆத­ரிப்­பது அவர்கள் எடு த்த முடிவு. அதற்கும் எனக்கும் சம்­பந்தம் இல்லை’ என இன்றுவரை சர்வ ஜாக்­கி­ர­தை­யாக இருப்­பவர்.

showImageInStory‘தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு நன்றி’ என சொன்­னால்­கூட சிங்­க­ளவர் சினந்து விடு­வார்கள் என நினைக்கும் சூழ்­நிலை அங்கே.

ஓர் உதா­ரணம் – அண்­மையில் ஒரு பேட்­டியில், பிர­பா­கரன் பெயரைச் சொல்லும் போது, ‘மிஸ்டர் பிர­பாகரன்’ எனச் சொல்­லி­விட்டார் சந்­தி­ரிகா. இதைப் பிடித்துக் கொண்­டனர் ராஜ­பக் ஷ ஆட்கள்.

‘மிஸ்டர் பிர­பா­கரன் எனச் சொல்­ப­வர்கள் இலங்­கைக்கு எப்­படி ஜனா­தி­பதி ஆக முடியும்?’ எனக்கிளம்பி விட்­டார்கள். ‘ராஜ­பக் ஷ­வுக்கு ஆங்­கிலம் தெரி­யாது. ஒருவர் ஆணா, பெண்ணா என்­பதைச் சுட்­டிக்­காட்டச் சொல்லும் அடை­யா­ளம் தான் ‘மிஸ்டர்’ என விளக்கம் சொல்­லிக்­கொண்டே இருந்தார் சந்­தி­ரிகா.

என­வேதான் சிறி­சேன மைய­மா­கவே பேசு­கிறார். லாக்கப் டெத் நடத்­திய இன் ஸ்­பெக்­டரை வேறு இடத்­துக்கு மாற்­றி­விட்­டதால் கிடைக்கும் அற்ப சந்­தோ­ஷம்தான் இப்­போது கிடைத்­தி­ருப்­பது. இருந்­தாலும் மாற்­றி­யதே ஒரு வகையில் ‘வெற்­றி’­தானே!

‘எனது அரசு, குடும்ப அர­சாக இருக்­காது. மன்னர் ஆட்சி நடத்த மாட்டேன். இடி­அ­மீனைப் போல ராஜ­பக் ஷ நடந்­து­கொண்டார். முப்­ப­டை­க­ளையும் தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்தார். நாடா­ளு­ மன்­றத்­துக்­கான அதி­கா­ரத்தைக் குறைத்து, தனக்கு அதி­கா­ரத்தைக் கூட்­டிக்­கொண் டார்.

வர்த்­தகத் துறையை தனது குடும்பச் சொத்­தாக மாற்­றினார். நாட்டு மக்­களின் சொத்­துக்­க­ளைக்­கொண்டு மாடமாளிகை கள் எழுப்பினார். அவரது குடும்பம் இல ங்கையின் மன்னர் குடும்பம்போல இருந் தது’ எனச் சொல்லியிருக்கும் சிறிசேன, ‘இது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு. இங்கு இன, மத, மொழி வேறு பாடின்றி ஆள்வோம்’ எனச் சொல்லியிருக்கிறார்.

இன்று பிரதமராக ரணில் பொறுப் பேற்றுள்ளார். ஜனாதிபதி பதவிதான் அதி காரம் பொருந்தியது என அவருக்குத் தெரியும். சிறிசேன இடத்தில் நாம் தானே இருக்க வேண்டும் எனப் பொறாமை ப்படலாம்.

சுதந்திரக் கட்சி என்பது சந்தி ரிகாவின் அப்பா ஆரம்பித்தது. தன் குடும் பச் சொத்தை அடுத்தவர் அனுபவிப்பதா என, சந்திரிகா எரிச்சலடையலாம்.

சிங்கள இனவாதக் கட்சியான ஜாதி ெஹல உறுமயவும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பும் ஒரே ஆற்றில் தண்ணீர் குடிக் கும் அளவுக்கு அகிம்சை தழைக்குமா?

சீன ஆதரவாளர் என்பதால், இதுவரை ராஜ­பக் ஷவை விசாரணை வளையத்துக் குள் கொண்டுவரத் துடித்த அமெரிக்கா, இனி இலங்கை மீது கரிசனம் காட்டும் என்பது என்ன நிச்சயம்? இப்படி ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டி ருக்கிறது ஈழத் தமிழினம்!

நன்றி விகடன்

Share.
Leave A Reply