முன்னால் ஜனாதிபதி அளவுக்கு அதிகமான வாகனங்களை பயன்படுத்தினார். என்கிற குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டநிலையில் அதற்கான ஆதாரங்களை குற்றத் தடுப்புப் பிரிவு தனது புலனாய்வு மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. பல லட்சம் பணம் பயன் படுத்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலையம் திறந்து வைக்கப்பட்டது, அங்கு பல கோடிகள் பெறுமானமுள்ள வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுளதாக ஊடகச் செய்திகள் வெளிவந்தன. உயர்பாதுகாப்பு வலைய வீதிகளில் காணப்பட்ட வாகனங்களை மக்கள் திரளாகச் சென்று பார்வையிட்டனர்.

பல வெள்ளை வான்களும், இலக்கத் தகடுகள் இல்லாத வாகனங்களும் அங்கு காணப்பட்டதாக காணொளிகளை ஊடகங்கள் வெளியிட்டன. ராஜபக்ச அரசின் ஜனாதிபதிச் செயலகத்தால் இந்த வாகனங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தபட்டிருக்கலாம் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

புலிகள் வன்னியில் அழிக்கப்பட்டதும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டது போன்று ராஜபக்ச சர்வாதிகாரிகளின் பயன்பாட்டிற்கு உட்பட பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மக்களின் உழைப்பும் வியர்வையும் பாசிஸ்ட் ராஜபக்சவின் பேரரசில் கொலைக் கருவிகளாக மாற்றப்பட்டிருக்கும் இக் காட்சிகள் மட்டும் புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிகைய ஏற்படுத்தாது

 

Share.
Leave A Reply