ஐயோ! ஐயோ!   “அமெரிக்க ஜனாதிபதிக்கு  மோடி  தேனீர்  ஊற்றிக்கொடுத்தது தான்  இந்தியாவில் மிகப்பெரிய   செய்தியாக  இந்திய ஊடகங்களில்  பிரசுரிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க  அதிபரை சந்திப்பதுதான் மோடிக்கு  அதியுயர்  இலச்சியமாக இருந்திருக்கும். அதிலும்…  அமெரிக்க அதிபருக்கு  தன் கையால்  மோடி பணிவிடை  செய்வதென்பது   மோடிக்கு கிடைத்த அரும்பெரும் பாக்கியமல்லவா!

அமெரிக்காவிலிருந்து   ஒபாமா  எப்பொழுது  வெளிகிட்டாரோ…  அவர்கள்  (ஒபாமா, மிஷல் ) விமானத்தில் படியேறுகிறார்கள்  என்பதிலிருந்து..  இந்தியா  வந்து  காலடி வைத்ததிலிருந்து   அவர்களின்  நடையுடை,  பாவனைகள், உண்ணும் உணவுகள்,  பேசும்  தரணங்கள், உதிர்க்கும்  வார்த்தைகள் …  என்பன  பற்றியதான   செய்திகள்   இந்திய  ஊடகங்கள்  முழுவதிலும்  பரவலாக   ஆக்கிரமித்துள்ளன.

ஏதோ  தேவலோகத்திலிருந்து  உதித்தவர் போல்… அமெரிக்க  ஜனாதிபதியை  இந்தியர்கள்  பார்க்கின்றார்கள். அமெரிக்க  ஜெனாதிபதி   தம்பதிகளின்  மலசலங்களைக் கூட கோப்பையில்  ஏந்துகின்றார்களோ  தெரியவில்லை??

ஆண்டுகள் .. ஆயிரம்  சென்றாலும்  அடிமைதன  மனோநிலையிலிருந்து   இந்தியர்கள்  மாறமாட்டார்கள் என்பதைதான் இது எடுத்துக்காட்டுகின்றது.

Obamas_land_TWT_650

இந்திய  இணைய தளமொன்றில்  பார்த்த செய்தியிது…

ஜனாதிபதி மாளிகை விருந்தில் ஒபாமாவுக்காக காத்திருக்கும் நம்ம ஊரு ‘செட்டிநாடு சிக்கன்’!

டெல்லி: குடியரசு தின விழாவுக்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இன்று இரவு, ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி விருந்து அளிக்கிறார். இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. விமானம் வாயிலாக டெல்லி வந்திறங்கிய ஒபாமா, இரவு ஜனாதிபதி மாளிகை விருந்தில் கலந்து கொள்கிறார்.

25-1422169069-obama-modi-120-600

இந்த விருந்தில், ஒபாமா மனைவி மிஷல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விருந்தில் பரிமாறப்பட உள்ள உணவு வகைகள்:

*சிம்லாவில் இருந்து வரவழைக்கப்பட்ட, ‘டிரவுட்’ மீன் பொரியல்.

*வெல்லத்தால் செய்யப்பட்ட, ‘சந்தேஷ்’ எனப்படும் பெங்காலி இனிப்பு.

*மோர்க்குழம்பு போன்ற, ‘கடி’ எனப்படும் குஜராத்தி வகை சைடு டிஷ்.

* புகழ்பெற்ற தமிழகத்தின், ‘செட்டிநாடு சிக்கன்’ வகைகள்.

*அலகாபாத் ஸ்டைல், ‘கெபாப்’ இறைச்சி.

*கோவா கறிக்குழம்பு மற்றும் பஞ்சாபி உணவு வகைகள். ஜனாதிபதி மாளிகையின் தலைமை சமையல்காரர் மச்சீந்திரா கச்சோரி தலைமையில், ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள பிரபல சமையல்காரர்கள் இந்த உணவு வகைகளை தயார் செய்யவுள்ளனர்.

Share.
Leave A Reply