தனது சகோதரியின் மகளது திருமணத்திற்கு இந்தியா செல்ல முடியவில்லை என்ற கவலையில் குடும்பப் பெண் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தீயில் கருகி மரணமான சம்பவம் யாழ். நல்லூரில் இடம்பெற்றது.
இவரது மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
மரணமானவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. தமிழ் நாட்டில் உள்ள தனது சகோதரியின் மகளது திருமணத்திற்கு செல்வதில் பயண ஒழுங்குகளில் தாமதம் ஏற்பட்ட வேதனையில் காணப்பட்டவர் தனக்குத்தானே தீ மூட்டி மரணமானதாக மரண விசாரணையில் குறிப்பிடப்பட்டது.
தற்கொலை மரணம் என தீர்ப்பு வழங்கிய மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேம்குமார் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிகாயங்களுக்கு ஆளாகி மரணமானோரின் தொகை அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்தார்.