குடியரசு தினவிழாவில் வீர தீர செயலுக்கான விருதுகள் வழங்கபட்டது. அதில் வீரதீர செயலுக்கான விருதை திரிபுராவை சேர்ந்த ரிபாதாஸ் என்ற சிறுமிக்கு வழங்கபட்டது.
குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான விருதை பெறவந்த சிறுமி ரிபாதாஸை பிரதமர் மோடி செல்லமாக அழைத்து காதை திருகிய படம் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனக்குப் பின்னால் நின்று கொண்டு தனது காதைப் பிடித்து செல்லமாக திருகியதைப் பார்த்து ரிபாதாஸ் வாய் நிறைய புன்சிரிப்புடன் நெளிகிறார்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ரிபாதாஸ் (வயது 8) கடந்த ஆண்டு இவரது வீடு தீ விபத்தில் சிக்கியபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது தம்பியை மீட்டு வந்தார்.
சிறுமியின் வீடு கடந்த ஆண்டு திடிரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அவரது தாயார் தம்பியுடன் பக்கத்து அறையில் தூங்கிகொண்டிருந்தார்.
வீட்டில் தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து பயந்து போன அவரது தாயார் பதறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து விட்டார்.
அறைக்குள் ரீபா தாஸ் தம்பி மாட்டி கொண்டான். ரீபாதாஸ் தனது தம்பியை காப்பாற்ற எரிந்து கொண்டிருந்த வீட்டில் ஓடி சென்று தம்பியை மீட்டு வந்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தனடு டுவிட்டர் பக்கத்தில் ரீபாதாஸ் குறித்து கூறியதாவது: ரிபாதாஸின் செயலை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
தீ விபத்தில் இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையின் உயிரை காப்பாற்றிய சிறுமிக்கு எனது பாராட்டுகள். என்று கூறியுள்ளார்.