பல கோஷங்களை கொண்டு முதன்முதல் அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கியது முஸ்லிம், தமிழர்கள் அல்ல பௌத்த துறவிகள்தான்.
சோபித்த தேரர், ரத்தினதேரர் போன்றவர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்டியிருந்தனர். தற்பொழுதும் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அவர்களே முதலில் எழுந்தவர்கள். நாம் பின்னால் சென்று இணைந்து கொண்டவர்கள். எங்களால் தான் வெற்றிகிடைத்தது.
வடக்கு, கிழக்கு இரண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் கீழ் இருப்பது பற்றி பிரச்சினைகள் எதுவுமில்லை. ஆனால், ஒரு யதார்த்தமான முறையில் இருக்க வேண்டும் என கருதுகின்றோம்.
காரணம் ஏழு மாவட்டங்களிலும் சிங்களவர்கள் இருக்கின்ற போதிலும் கிழக்கிலாவது முஸ்லிம் முதலமைச்சர் இருப்பாராக இருந்தால் அது சமநிலையில் இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் கிழக்கிலும் முஸ்லிம்கள் தேவையில்லை. அங்கும் நாங்கள் தான் ஆட்சி செய்வோம் என பிடிவாதப் போக்கில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான ஹஸனலி தெரிவித்தார்.
அவர் வழ ங்கிய நேர்காணலிலேயே அவர் இத னைத் தெரிவித்தார். அவர் வழங்கிய நேர்காணல் முழுமையாகக் கீழே தரப்படுகிறது.
கேள்வி: கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு க்கு இடையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், எந்தவிதமான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. அது குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
பதில்: கிழக்கு மாகாண சபையில் தமக்கு பதினொரு ஆசனங்களுடன் கூடிய பெரும்பான்மை இருக்கின்றமையினால், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவி தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்டனர்.
ஆனால், நாங்கள் அதற்கு உடன்படவில்லை. காரணம் என்னவென்றால், நாங்கள் ஏற்கனவே இருந்த அரசாங்கத்துடன் ஆட்சிய மைத்த பொழுது முதல் இரண்டரை வருடங்களுக்கு அவர்கள் முதலமைச் சர் பதவியை எடுத்துக்கொண்டனர்.
இரண்டாம் கட்டமாக கடைசி இரண்டரை வருடத்திற்கு முதலமைச்சர் பதவியை நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம் என்ற ஒப்பந்தம் எமக்கு இருந்தது. இந்த ஒப்பந்த அடிப்படையில் நாங்கள் இரண்டாம் கட்ட முதலமைச்சர் பதவியை கேட்டிருக்கின்றோம்.
அதேநேரம் ஆட்சி மாறியதால், முன்னைய அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே, புதிதாக ஒரு சபையை அமைத்து தேர்தல் இல்லாமல் பெரும்பான்மை பலத்தைக் காட்டி புதியதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பினர் கேட்டனர்.
அதற்கு அவர்கள் தங்களுக்கு முதலமைச்சர் பதவியைத் தரும்படி கேட்டனர். அதற்கு நாங்கள் இணங்கவில்லை.
வடக்கு, கிழக்கு இரண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் கீழ் இருப்பது பற்றி பிரச்சினைகள் எதுவுமில்லை. ஆனால், ஒரு யதார்த்தமான முறையில் இருக்க வேண்டும் எனக் கருதுகின்றோம்.
காரணம் ஏழு மாவட்டங்களிலும் சிங்களவர்கள் இருக்கின்ற போதிலும் கிழக்கிலாவது முஸ்லிம் முதலமைச்சர் இருப்பாராக இருந்தால் அது சமநிலையில் இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் கிழக்கிலும் முஸ்லிம்கள் தேவையில்லை. அங்கும் நாங்கள் தான் ஆட்சி செய்வோம் எனப் பிடிவாத போக்கில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றார்கள்.
அதற்கு நாம் கூறுவது என்னவென்றால், பிடிவாதம் பிடித்தாலும் பரவாயில்லை. நீங்களே ஆட்சியமையுங்கள் உங்களுடைய பலத்தை நிரூபித்து நீங்கள் ஆட்சியமையுங்கள்.
அதேவேளை நாங்களும் உங்களுடைய ஆட்சியில் இருப்போம். ஆனால், எந்தவிதமான அமைச்சுக்களையும் எடுக்காமலிருந்து உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற தெரிவையும் அவர்களுக்கு வழங்கினோம்.
ஏனெனில், தமிழ், முஸ்லிம் உறவுகள் முறிந்துக் கொண்டு செல்வதையும், பிரச்சினைக்கு உட்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான் நாங்கள் அவர்களுடன் ஒத்துழைப்பதாக கூறினோம்.
மூன்று மாதங்களில் தேர்தல் இடம்பெறவுள்ளது. எனவே மக்கள் மத்தியில் சென்று எங்களுக்கு உண்மையை நியாயப்படுத்த முடியாமல் இருக்கின்றது.
முதலமைச்சர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாங்கள் வழங்குவதால், அதனை முஸ்லிம் மக்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
அவ்வாறில்லாவிடில் தேர்தல் இடம்பெறும்வரை இப்போதுள்ளவாறு கிழக்கு மாகாண சபையை நடைமுறைப்படுத்துங்கள் என்றும் தேர்தலுக்குப் பின்னர் ஓர் முடிவை எடுப்போம் என்றும் நாங்கள் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளோம்.
ஆனால், உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். கூட்டமைப்பு இவ்வாறு கூறுவதால் நாங்கள் எதிர்க்கட்சிப் பக்கம் சென்று அமரமாட்டோம். அதிலும் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோம்.
கேள்வி: பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயக்கம் காட்டுகின்றீர்களா?
பதில்: தேர்தலையும் ஒரு காரணமா கக் கூறலாம். அதுமட்டுமல்லாது முஸ் லிம் காங்கிரஸின் வாய்ப்பு வரும் போது அதை எப்படி நாங்கள் மக்களி டம் நியாயப்படுத்துவது? அதற்கு கூட் டமைப்பினர் காரணம் குறிப்பிடுகை யில், நாங்கள் கடந்த முறை அமைச்சுப் பதவி தரலாம் என்று கூறி உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம் என்று கூறுகின்றார்கள்.
ஆனால் அந்நேரம் இருந்த சூழல் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. காரணம் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் தெடங்கியிருந்த காலகட்டம் அது.
வடகிழக்குக்கு வெளியில் இருக்கும் முஸ்லிம்கள் பெரிதும் அச்சப்பட்டனர். நாங்கள் போய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்தால் வடகிழக்கிற்கு வெளியில் இருக்கும் முஸ்லிம்கள் தமிழீழம் அமைக்க சென்று விட்டதாக கூறி முன்னைய அரசாங்கம் முஸ்லிம்கள் மீது பெரும் அடாவடித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கும்.
எங்களை அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு முடிவு எடுக்க வேண் டாம் என்று மார்க்க அறிஞர்கள், உலமாக்கள் எனப் பலரும் வந்து கேட்டுக்கொண்டனர்.
காரணம் வெளியில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்படும். இனவாதப்போக்கில் அப்போதைய அரசாங்க பிரசாரத்தை கொண்டு செல்லும் என்றெல்லலாம் கூறினார் கள். ஆகவே நாங்கள் அதையும் பரிசீ லிக்க வேண்டியிருந்தது.
ஆனால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுது விமர்சிக்கின்றனர். நாங்கள் ஒரு தனி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய சமூகத்திற்கும், சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் எமக்கு உரிமை இருக்கின்றது. எங்களை பிழை கூற வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. நாங்கள் தனி சமூகம் என்பதை உணராத அவர்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்பது நியாயமாக இல்லை.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒருமித்த கருத்துக்கொண்டு ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? எதிர்காலத்திலும் இது தொடர்வதற்கு நீங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்: இத்தேர்தல் முடிவில் எங்களால் தான் இந்த முடிவு வந்ததென்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள், தங்களால்தான் இந்த முடிவு வந்தது என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இதில் ஒன்றை மறக்க கூடாது. என்னவென்றால் வெறுமனே முஸ்லிம், தமிழ் மக்கள் இணைந்து இவ்வாட்சி மாற்றத்தை கொண்டு வந்திருக்க இயலாது.
இதில் சிங்கள வாக்குகளும் மிக முக்கியம் என்பதை உணரவேண்டும். மிதவாத போக்குள்ள சிங்கள வாக்குகளை ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் எடுத்துப் பார்த்தால், 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலை காட்டிலும் சிங்கள வாக்குகள் இந்ததேர்தலில் அதிகரித்தே காணப்படுகின்றன.
முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக வீழ்ந்த வாக்குகள் அதிகரித்துள்ளன. எமது மனதில் மட்டும் மாற்றம் வரவில்லை. சிங்கள மக்கள் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நல்லாட்சியை உருவாக்கவேண்டும், இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும், 18ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும், சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் கொண்டுவரவேண்டும் என பல கோஷங்களை கொண்டு முதன்முதல் அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கியது முஸ்லிம், தமிழர்கள் அல்ல பௌத்த துறவிகள்தான். சோபித்த தேரர், ரத்தின தேரர் போன்றவர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்டியிருந்தனர்.
தற்பொழுதும் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்களே முதலில் எழுந்தவர்கள். நாம் பின்னால் சென்று இணைந்து கொண்டவர்கள். எங்களால் தான் வெற்றிகிடைத்தது. நாம் தான் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தோம் என்றெல்லாம் கூற முடியாது.
இதில் முக்கிய பங்கு பெரும்பான்மை மக்களுக்கு உண்டு. சிங்கள மக்களின் மனதில் ஏற்பட்ட அந்த மாற்றங்கள் எங்களுக்கு ஒரு சாதகமான மாற்றங்களாக இருந்ததால் நாங்களும் அதற்கு பின்னால் போய்ச் சேர்ந்து கொண்டோம் என்பது தான் உண்மை.
கேள்வி: அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டக் குழு ஜனாதிபதியைச் சந்தித்து. என்ன விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தது?
பதில்: பரஸ்பரம் விளக்கமான ஒரு சந்திப்பு என்றே இதனைக் கூற வேண்டும். ஜனாதிபதி எல்லா கட்சிகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்கின்றார்.
அந்த வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட குழுவையும் அவர் சந்தித்திருந்தார். இதன்போது நாங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
பின் அவருடைய நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பிலும் அதன் அவசியம் பற்றியும் கலந்தாலோசித்தோம். மேலும் அந்த நூறுநாள் வேலைத் திட்டம் ஜனாதிபதி எதிர்பார்ப்பது போல் நிறைவேறுமாக இருந்தால், உண்மையிலேயே நல்லாட்சிக்கான ஒரு களம் அமைந்துவிடும்.
மற்றும் சமூகங்களுக்கிடையேயான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஓரளவிற்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் அதீதமாக நம்புகின்றார்.
மற்றும் கிழக்கு மாகாண சபை தொடர்பிலும் அவர் பேசியிருந்தார். கிழக்கு மாகாணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், முன்னைய அரசாங்கத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்திருந்தபோது, தற்போதைய ஜனாதிபதியும் அங்கம் வகித்திருந்தார்.
எனவே ஒப்பந்தத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு தான் ஆதரவு தருவேன் என்று அவர் கூறினார். இதற்கு மேல் ஜனாதிபதியிடம் நாங்கள் எந்தவிதமான கோரிக்கையும் முன்வைக்கவில்லை.
அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவிடமும் இந்த தேர்தலில் நாங்கள் எந்த விதமான புது நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. அப்போது நாங் கள் வைத்த ஒரே ஒரு நிபந்தனை. இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றுதான். இதைதவிர்த்து நாங்கள் வேறு எந்த நிபந்தனை களையும் முன்வைக்கவில்லை.
கேள்வி: கரையோர மாவட்டம் தொடர் பில் எந்தக். கோரிக்கைகளையும் முன்வைக்கப்போவதில்லை என்று நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். எனவே உங்களது கரையோர மாவட்டக் கோரிக்கையை மீளப் பெற்றுவிட்டீர்களா?
பதில்: இந்த நூறு நாள் திட்டத்தின் பின் தேர்தல் ஒன்று நடத்தப்படும். அதன்பின் புதிய அரசாங்கம் நிறுவப்படும். அந்த அரசாங்கம்தான் எமது கரையோர மாவட்டக் கோரிக்கை யினை நிறைவேற்றக்கூடிய அரசாங் கம்.
இந்த நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அதாவது ஒரு நிறைவேற்று அதிகாரமுள்ள கடும்போக்கான ஒரு ஜனாதிபதி இல்லாமல் போவார். அதற்கு பதிலாக சுயாதீன ஆணைக்குழுக்கள் அந்த இடத்தில் அமைக்கப்படும். நீதிமன்றங்கள் நிலையாகவும் நீதியாகவும் இயங்கும்.
நாட்டில் மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டதிட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. அப்படியான சூழ்நிலையில் இந்த கரையோர மாவட்ட விடயத்தை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சூழல் தானாகவே ஏற்படும். நாங்கள் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனி மாவ ட்டம் அல்லது தமிழர்களுக்கு என்று ஒரு மாவட்டம் கேட்கவில்லை.
தமிழ்ப் பேசும் மக்களுக்கு வசதியான சூழலையே கேட்கின்றோம். உதாரணமாக பார்த்தால், அம்பாறை மாவட்டத்தில் 76 சதவீதமான தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இந்த 76 சதவீதமானவர்கள் அனைவரும் இந்த கரையோரப் பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.
ஆனாலும் கச்சேரிகளை முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் பிரதேசமாக வைத்துக்கொண்டு நிர்வாக நடவடிக்கைகளை செய்கின்றார்கள். அவ்வாறிருக்கும்போது நாங்கள் எவ்வாறு அந்த நிர்வாகத்தில் பங்குகொள்ள முடி யும்.
53 வருடத்திற்கு முன்னரே அம் பாறை மாவட்டம் உருவானது. அன்று முதலே இதுவரை ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் சமாதான நீதவான் கூட அங்கு நியமிக்கப்படவில்லை. மேலும் தமிழ் தெரியாத ஒரு நபரே அங்கு அனைத்திற்கும் முதலிடம் வழங்குபவ ராக இருப்பார்.
எனவே, அப்படியான ஒரு இரும்புப் பிடிக்குள் அம்பாறை மாவட்டத்தை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அதிலிருந்து ஒரு விமோசன த்தை தான் நாங்கள் கேட்கின்றோம்.