நண்பி அணிந்திருந்த காதணியை திருடு வதற்காக அவரை கிணற்றில் தள்ளி பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் திண்டிவனத்தில் இடம் பெற்று ள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதா வது,
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சசிரேகா (14வயது). ஓமந்தூரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார்.
கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற சசிரேகா மாலைவரை வீடு திரும்பாதமையால், குடும்பத்தார் அவ ரை பல இடங்களிலும் தேடியுள்ளனர்.
ஆனால், சசிரேகா கிடைக்கவில்லை. இத னால் அன்றிரவு கிளியனூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால், முறை ப்பாட்டினை பொலிஸார் வாங்க மறு த்த தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் கோடி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சசிரேகாவின் சட லம் மிதந்து வந்துள்ளது. இதை அறிந்த ஊரார் கிளியனூர் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து மாணவி சசிரேகாவின் மர ணம் தொடர்பாக கிளியனூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத் தினர். இதன் போது சசிரேகாவினை அவரது பாடசாலை நண்பியான ஒருவர் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று சசிரேகா புதிய காதணிகளை அணிந்து பாடசாலைக்கு சென்றுள்ளார். இதன் மீது விருப்பு கொண்ட சசிரேகாவின் நண்பியான சக மாணவி பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது கோடி பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே சசிரேகாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவாறு சசி ரேகா அணிந்திருந்த புதிய கம்மலை போட்டு பார்த்துள்ளார்.
பின்னர் திடீரென சசிரேகாவை கிணற்றுக்குள் தள்ளி விட்டுள் ளார். நீரில் தத்தளித்த சசிரேகா சிறிது நேரத்தில் இறந்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னரே அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல இருந்துள்ளார்.
பாடசாலையில் இருந்து சசிரேகாவுடன் குறித்த மாணவிதான் கடைசியாக சென்றுள் ளார். இதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதுதான் உண்மை தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த மாணவியை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.