இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அவ்விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக சுதந்திர தின விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்ததாக அவர் கூறுகிறார்.

அதேவேளை கூட்டமைப்புக்குளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், எனினும் இது தொடர்பில் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சிபோல் அல்லாமல், இந்த ஆண்டின் சுதந்திர தின வைபவம், இராணுவ வெற்றியை மையப்படுத்தவில்லை என்றும், அப்படியான சூழலில் இந்த நிகழ்வில் பங்குபெறுவது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அனுப்பும் என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்கிற அடிப்படையிலேயே இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்ததன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவரது கருத்துக்களை இங்கே கேட்கலாம்.


/p>

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் சம்பந்தன் – கூட்டமைப்புக்குள் சர்ச்சை
04-02-2014
கொழும்பில் இன்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றுள்ளார்.

1972ம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக தமிழ்த் தலைவர் ஒருவர், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்தில் இருந்தே சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாக கடைப்பிடிக்கும் வழக்கம் இருந்து வந்தது.

எனினும், இம்முறை சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான எந்த உத்தரவாதமும் கிட்டாத நிலையில், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் இரா.சம்பந்தன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் இதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன், உடனடியாக கட்சியின் மத்திய செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கில் ஆட்சியமிக்க எமக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் வீடியோ இணைப்பு
04-02-2014

கிழக்கில் எமக்கு ஆட்சியமிக்க எமக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ் தேசிய கூட்டத்துக்கும் இடையில் 61 ஆயிரம் வாக்குகளே வித்தியாசம் அத்துடன் 3 இடத்தில் 2 இடங்களில் நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

கிழக்கில் எமக்கு ஆட்சியமிக்க எமக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாண சபை தேர்தலில்  முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ் தேசிய கூட்டத்துக்கும் இடையில் 61 ஆயிரம் வாக்குகளே வித்தியாசம் அத்துடன் 3 இடத்தில் 2 இடங்களில் நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

Share.
Leave A Reply