இலங்கையின் சுதந்திரதினத்திற்கு மூன்று மொழிகளிலும் வாழ்த்துத் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க தான் ஆவலாக உள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியப் பிரதமர், தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘இலங்கை மக்களுக்கு சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான நமது உறவு பிரிக்க இயலாத ஒன்றாகும்”.
‘இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிறிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்”.