வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பை விடுத்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக திட்டித் தீர்த்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவியிலிருந்து ஓய்வு பெறும் சந்தர்ப்பத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப்போதிருந்த 61 அரச கட்சி உறுப்பினர்களில் 56 பேர் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சி தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் என தெரிவித்திருந்தனர்.
எனினும் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தோம்.
ஆனால் நான் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்காததை கூட அவர் பொருட்படுத்தாமல் அப்போதிருந்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டு எனக்கு எதிராக மேடை பேச்சுக்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரணில் விக்ரமசிங்கவிடம் அவரது கட்சியிலுள்ள 23 முக்கிய உறுப்பினர்களை தான் பதவிக்கு வந்ததன் பின்னர் தனது கட்சிக்கு அழைத்து கொள்கின்றேன் என வாக்குறுதியளித்திருந்தார்.
எனினும் அவரால் அந்த வாக்குறுதியை செயற்படுத்த முடியாமல் போன நிலையில் அறுவருக்கு மாத்திரம் தனது கட்சியில் இடங்கொடுத்தார்.
அவரின் இந்நடவடிக்கைகளை நான் அறிந்திருந்தும் பழைய விடயங்களை பெரிதுபடுத்த கூடாது எனும் காரணத்தினால் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசி அழைப்பொன்றை விடுத்தேன்.
அதன் போது அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்தார். நான் அமைதியாக அவர் கூறியவற்றையெல்லாம் கேட்டு விட்டு குறிப்பிட்ட சிலர் மாத்திரமேயறிந்த அவரின் வாழ்க்கை இரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் மகிந்த என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார், என்னை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து என்னை மிகவும் கேவலப்படுத்தினார், எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது.
இந்நிலையில் கடந்த கடந்த 9 வருடங்களாக அவர் நடத்திய அரசியல் சீரழிவுகளை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப்பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர்.
எனினும் மீண்டும் ஒருமுறை நான் அரசியலுக்கு வர விரும்பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மானித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தேன் என்றார்.
– See more at: http://www.newjaffna.co/moreartical.php?newsid=36163&cat=nnews&sel=current&subcat=14#sthash.lYYnNNJv.dpuf
வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பை விடுத்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக திட்டித் தீர்த்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவியிலிருந்து ஓய்வு பெறும் சந்தர்ப்பத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப்போதிருந்த 61 அரச கட்சி உறுப்பினர்களில் 56 பேர் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சி தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் என தெரிவித்திருந்தனர்.
எனினும் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தோம்.
ஆனால் நான் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்காததை கூட அவர் பொருட்படுத்தாமல் அப்போதிருந்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டு எனக்கு எதிராக மேடை பேச்சுக்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரணில் விக்ரமசிங்கவிடம் அவரது கட்சியிலுள்ள 23 முக்கிய உறுப்பினர்களை தான் பதவிக்கு வந்ததன் பின்னர் தனது கட்சிக்கு அழைத்து கொள்கின்றேன் என வாக்குறுதியளித்திருந்தார்.
எனினும் அவரால் அந்த வாக்குறுதியை செயற்படுத்த முடியாமல் போன நிலையில் அறுவருக்கு மாத்திரம் தனது கட்சியில் இடங்கொடுத்தார்.
அவரின் இந்நடவடிக்கைகளை நான் அறிந்திருந்தும் பழைய விடயங்களை பெரிதுபடுத்த கூடாது எனும் காரணத்தினால் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசி அழைப்பொன்றை விடுத்தேன்.
அதன் போது அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்தார். நான் அமைதியாக அவர் கூறியவற்றையெல்லாம் கேட்டு விட்டு குறிப்பிட்ட சிலர் மாத்திரமேயறிந்த அவரின் வாழ்க்கை இரகசியத்தை கூறினேன்.
உடனே அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் மகிந்த என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார், என்னை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து என்னை மிகவும் கேவலப்படுத்தினார், எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது.
இந்நிலையில் கடந்த கடந்த 9 வருடங்களாக அவர் நடத்திய அரசியல் சீரழிவுகளை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப்பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர்.
எனினும் மீண்டும் ஒருமுறை நான் அரசியலுக்கு வர விரும்பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மானித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தேன் என்றார்.
ஜனாதிபதிக்காக அங்கப்பிரதட்சணம்
05-02-2014
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் தான் மூன்று கிலோ மீற்றர் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிகொண்ட நபர் ஒருவர் அதனை நேற்று நிறைவேற்றியுள்ளார்.
ஆனைமடு, நாகவில பகுதியைச் சேர்ந்த சனத் குமார எனும் இளைஞரே இவ்வாறு தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
அவர் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து மூன்றரை மணி நேரத்தில் மூன்று கிலோமீற்றர் தூரத்தை நிறைவு செய்து தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்