வடிவேலு அடுத்து ஹீரோவாக நடிக்கும் எலி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியானது. மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்தார்.
அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தெனாலிராமனை இயக்கிய யுவராஜ் தயாளன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். வித்யாசாகர் இசையமைக்க, ஆரூர்தாஸ் வசனம் எழுதுகிறார். ஜி சதீஷ் குமார், அமர்நாத் தயாரிக்கிறார்கள்.

டத்தில் வடிவேலுவின் வேடம் எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் ஆவலைத் தீர்க்கும் வகையில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
அதில் பழைய டைப் கார் ஒன்றின் பேனட் மீது, கட்டம் போட்ட பேன்ட், ஒரு சிவப்பு ஓவர் கோட், மஞ்சள் ஸ்கார்ப் காஸ்ட்யூமில் சாய்ந்தபடி போஸ் கொடுக்கிறார் வடிவேலு. சுருள் முடி, ரவுண்டு கண்ணாடி, குறுகிய முறுக்கு மீசையுடன், பக்கா பழைய வடிவேலுவாக காட்சி தருகிறார்.
தெனாலிராமன் மாதிரி சீரியஸான படமில்லை.. இது சிரிப்புப் படம் என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது இந்த போஸ்டர்.
Tharai Thappattai Shooting Spot – Ilayaraja Visits Director Bala At The Shooting Spot – Exclusive