ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரான ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

கொழும்பிலிருந்து விசேட விமானமொன்றில் திருகோணமலை சென்ற அவர், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசுடன் செய்து கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இப்பதவியேற்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

kudamai

கிழக்கு மாகாண ஆட்சியை  அமைப்பதற்கு  கூட்டமைப்பினர்களுக்கு சரியான சந்தர்ப்பம்  ஒன்று  கிடைத்திருந்தது.  யாருடனும்  நாம் ஒன்றினைந்து போகமாட்டோம், வெளியே  இருந்து  குற்றமும், குறையும்   சொல்லிக்கொண்டு    திரிவோம்  என்பதுதான்  கூட்டமைப்பினர்களின்  கொள்ளையாகும்.

கிடைக்கப்பெற்ற  சந்தர்ப்பங்களை  சரியாக  பயன்படுத்தாவிட்டால் , அது திரும்ப கிடைக்கப்போவதில்லை். இனிவரும் காலங்களில்…  கூட்டமைப்பினர் விரலை  வாய்க்குள் வைத்து  சூப்பிக்கொண்டு  இருக்கவேண்டியது தான்.

கூட்டமைப்புக்கு  வாக்களித்த  மக்கள் வாயை பிளந்து கொண்டு  வானத்தை பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.  எதுவும்  நடக்கப்போவதில்லை.

முதலமைச்சர் பதவி: முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

150206152121_protest_against_slmc_leadership_over_new_cm_appoinment_640x360_bbc

இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானத்தைக் கண்டித்து அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உருவ பொம்மையொன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டபோது, அங்கிருந்த பொலிஸார் தீ பரவமால் அதனை அணைத்தனர்.

அவ்வேளையில், பொலிஸாருக்கும் ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டபோது பொலிஸாரால் அந்த உருவ பொம்மை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கிழக்கு மகாணசபையின் ஆட்சிமாற்றத்தின் போது, முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினரான ஏ. எம். ஜெமீல் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து கோரிக்கை வந்திருந்தது.

hakimஆனால், முதலமைச்சர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாபிஸ் நசீர் அஹமட்டையே முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பரிந்துரை செய்தது.

இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஏ. எம் ஜெமீல், அதற்கு ஆதரவை தெரிவிக்கும் உறுதிப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்துவிட்டதாக தெரியவருகின்றது.

தனக்கு அந்த பதவி வழங்கப்படாவிட்டாலும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று அவரால் கட்சித் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

muslimஇதனிடையே, ஏ. எம் ஜெமீலை கட்சியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இன்று நண்பகல் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கட்சியின் சாய்ந்தமருது பிரதேச மத்திய குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply