கிருஷ்ணகிரி: 6 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
கைதான நபர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி ஜடையன்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி டிரைவரான இவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூஜா (6) என்ற மகள் இருந்தாள். பூஜா 6 மாத குழந்தையாக இருந்த போது தீபா இறந்து விட்டார்.06-1423193132-lorry345-600

லாரி டிரைவர்
எனவே கோபால கிருஷ்ணன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி முத்துலட்சுமி (20) தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவர் என்பதால் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் லாரியில் வேலைக்கு சென்று விடுவார். இதனால் குழந்தை பூஜா, தனது சித்தி முத்துலட்சுமி மற்றும் தாத்தா பழனி (63), பாட்டி முத்தம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தாள்.
pethi

தாத்தாவுடன் படுத்திருந்த சிறுமி
யு.கே.ஜி. படித்து வந்த பூஜா, நேற்று முன்தினம் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினாள். இரவு தனது தாத்தா பழனி அருகே படுத்து தூங்கினாள். மற்றொரு இடத்தில் அவரது சித்தி முத்துலட்சுமியும், பாட்டி முத்தம்மாளும் தூங்கினார்கள்.
06-1423193341-suicide-in-well-600

காணவில்லை என நாடகம்
இரவு எழுந்த பழனி, சிறுமி பூஜாவை காணவில்லை என்று அலறியடித்தபடி கூறினார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூஜாவை தேடினார்கள். வீட்டு அருகில் உள்ள ஒரு கிணற்றில் சிறுமி பூஜா விழுந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.

06-1423193480-tn-police345-600

போலீஸ் வருகை
சிறுமியின் சாவில் சந்தேகம் அடைந்த சிலர் இது குறித்து கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சிறுமி பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

06-1423193512-arrest--600

தாத்தா கைது
இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பூஜாவை அவளது தாத்தா பழனியே, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, கிணற்றில் வீசி நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் சித்தி முத்துலட்சுமியையும் போலீசார் கைது செய்துள்ளனர். தனது குழந்தைக்கு, பூஜா இடையூறாக இருக்க கூடாது என்று பழனியுடன் சேர்ந்து முத்துலட்சுமி இந்த சதி திட்டத்தை தீட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
06-1423204218-premarital-sex-600

மருமகள் மீது ஆசை
கைதான பழனி அளித்துள்ள வாக்குமூலம்: எனது மகனின் 2வது மனைவி முத்துலட்சுமி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. எனது மகன் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு வேலைக்குசென்று விடுவதால் தனியாக இருக்கும் முத்துலட்சுமியை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று திட்டம்போட்டேன். கணவனை பிரிந்து இருக்கும் முத்துலட்சுமியும் இதற்கு சம்மதிப்பார் என்ற ஆசை எனக்கு இருந்தது.

06-1423204240-women-88-600

உல்லாசத்தை பார்த்த பேத்தி
வீட்டில் ஒருநாள் தனியாக இருந்த முத்துலட்சுமியிடம், நைசாக பேசி, எனக்கு சொந்தமான 13 ஏக்கர் விவசாய நிலம், கிணறு ஆகிய சொத்துக்களை எல்லாம் உனக்கு தருகிறேன்.
நாம் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருக்கலாம் என்றேன். இதற்கு முத்துலட்சுமியும் சம்மதித்தார். இதையடுத்து நாங்கள் அடிக்கடி கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தோம். ஆனால் நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பதை பூஜா பார்த்துவிட்டு, ‘தாத்தாவும், சித்தியும் கட்டிப்பிடித்து கொள்கிறார்கள்’ என்று எனது மனைவியிடம் கூறினாள்.
06-1423204173-women-abuse56-600

மருமகளுக்கும் சம்மதம்
பூஜாவால் நானும், முத்துலட்சுமியும் சேர முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் ஏற்பட்டது. எனவே பூஜாவை கொலை செய்ய திட்டமிட்டு இதுகுறித்து முத்துலட்சுமியிடம் கூறினேன். அவரும், பூஜா இருந்தால் எனக்கு சொத்து கிடைக்காது. எனவே உங்கள் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்றார். எனவே நான் பூஜாவை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் நானும், 5 மாத கர்ப்பிணியான முத்துலட்சுமியும் உல்லாசமாக இருந்தோம்.
06-1423204250-murder-1-600

கொலை
பின்னர் நான் படுத்திருந்த இடத்திற்கு அருகே வந்து பூஜா படுத்து தூங்கினாள். அப்போது நான் பூஜாவை அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் பழனி கூறியுள்ளார். இதனிடையே மருமகள் முத்துலட்சுமியிடமும் போலீஸ் எஸ்.பி கண்ணம்மாள் தனியாக விசாரணை நடத்தியுள்ளார்.
Share.
Leave A Reply