இலங்­கையின் 67ஆவது சுதந்­திர தின நிகழ்வில் தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு கலந்து கொண்­டமை பற்றி பல்­வேறு வாதப்பிரதி வாதங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இலங்­கையின் தேசிய சுதந்­திர கொண்­டாட்­டங்­களை தமிழ் மக்கள் புறக்­க­ணித்தே வந்­துள்­ளார்கள்.

இன்னும் விரி­வாக பார்ப்­போ­மாயின் 1956ஆம் ஆண்­டுக்கு பின்­னுள்ள எல்­லாக்­கா­லப்­ப­குதி சுதந்­திர தினக் கொண்டாட்டங்களையும் தமிழ் மக்கள் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் எதிர்த்தே வந்­துள்­ளனர்.

இந்த வர­லாற்­றுப்­போக்கை மாற்றும் வகையில் தமிழ்த் ­தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்­பினர் எம். ஏ. சுமந்­திரன் ஆகியோர் இலங்­கையின் 67ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்தில் கலந்து கொண்டுள்­ளனர்.

Untitled-1-720x480ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றிக்கும் புதிய ஆட்சி மாற்­ற­மொன்று உரு­வா­கு­வ­தற்கும் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கிய நிலை­யி­லேயே 67ஆவது சுதந்­தி­ர­தினக் கொண்­டாட்­டத்தில் கூட்­ட­மைப்பு கலந்து கொண்­டி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பினர் இவ்­வாறு கலந்து கொண்­டமை அவர்­களின் அர­சியல் போக்கு மாற்­றத்தைக் காட்­டு­கி­றதா? இல்­லை­யாயின் வர­லாற்று மாற்­றத்தைக் காட்­டு­கி­றதா?

இல்லை அர­சியல் மாற்­றத்தின் பொதுப்­போக்குத் தன்­மையைக் காட்­டு­கி­றதா? என்­பது பற்­றி­யெல்லாம் மக்கள் மத்­தியில் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கி­றது.

கடந்த 60 வருட கால அர­சியல் போக்கில் எதிர்ப்பு அர­சி­ய­லி­லேயே ஊறி நனைந்து போன சமூ­க­மாக தமிழ் மக்கள் பார்க்கப்பட்டி­ருக்­கி­றார்கள். அதிலும் குறிப்­பாக 1983ஆம் ஆண்­டுக்­குப்­ பின்­னுள்ள நிலை­மை­களை கோடிட்­டுக்­காட்ட வேண்டிய அவ­சி­ய­மில்லை.

இந்த தேசிய எதிர்ப்­புக்­கு­ரிய வர­லாற்­றுக்­கா­ர­ணங்­களை அடுக்கிக் கொண்டே போக முடியும்.

ஒரு சிறு­பான்மை இனம் ஒடுக்­கப்­ப­டு­வ­தற்­கு­ரிய சகல கார­ணங்­க­ளையும் சம்­ப­வங்­க­ளையும் தமிழ் மக்கள் சந்தித்திருக்கின்றார்கள். பெரும்­பான்மை   தேசிய   சமூ­க­மென்ற  பலத்தின் அடிப்­ப­டையில் அர­சியல் அநி­யா­யங்­களும் அட்டூ­ழி­யங்­களும் பெரும்­பான்மை சமூ­கத்தால் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

சேர்.பொன். இரா­ம­நாதன் சேர். பொன். அரு­ணா­சலம் போன்ற ஜாம்­ப­வான்­களின் அர­சியல் சாணக்­கிய ஒத்­து­ழைப்­புடன் பெறப்­பட்ட சுதந்­தி­ரத்தை தமிழ்­மக்கள் எப்­போ­தி­ருந்து பகிஷ்­க­ரிக்கத் தொடங்­கி­னார்கள் என்­ப­தற்கு வர­லாற்று பதி­வுகள் உண்டு.

மலை­யக மக்­களின் வாக்­கு­ரி­மையை   இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான பிரஜா உரிமை சட்­டத்தை இலங்­கையின் முத­லா­வது பிரதம­ரான டி. எஸ். சேனா­நா­யக்கா 15.11.1948இல் கொண்டு வந்தார்.

இந்த சட்­டத்தின் தீவி­ர­தாக்கம் 1949 ஆம் ஆண்டின் தேசிய சுதந்­தி­ரத்தின் மீது மலை­யக மக்­க­ளுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் அவநம்­பிக்­கை­களை ஊட்டி விட்­டன. இதன் பிர­தி­ப­லிப்­பா­கவே இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி தோற்றம் பெற்­றது.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் முத­லா­வது தேசிய மா­நாடு திரு­கோ­ண­ம­லையில் 1951ஆம் ஆண்டு ஏப்ரல் 13, 14, 15ஆம் திகதி­களில் நடை­பெற்­ற­போது தமிழ்த் ­த­லை­வர்கள் ஒன்றை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்கள்.

இலங்­கையின் உத்­தி­யோ­க­பூர்­வ­மான தேசிய கொடி தமிழ் மக்­களை இரண்­டாந்­த­ரப்­பி­ர­ஜை­க­ளென சுட்­டிக்­காட்­டு­கி­றது எனக்கு­றிப்­பிட்­டி­ருந்­தார்கள். இவையும் ஒரு­வகை எதிர்ப்­பு­ணர்வை காட்டி நின்­றன.

இந்த எதிர்ப்பின் உச்­ச­வெ­ளிப்­பா­டாக 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட சிங்­கள மொழிச்­சட்டம் ஆகி­யது. பண்­டா­ர­நாயக்கவினால் கொண்டு வரப்­பட்ட   தனிச்­சிங்­கள சட்ட மூலம் கார­ண­மாக காலி­மு­கத்­தி­டலில் தமிழ் மக்கள் (06.06.1956) சத்தி­யாக்­கி­ரகப் போராட்­ட­மொன்றை நடத்­தினர்.

இந்தச் சத்­தியாக் கிர­கத்தைப் பொறுக்க முடி­யாத இன­வா­திகள் கல­வ­ரத்தைத் தூண்­டி­னார்கள். தமிழ் தலை­வர்கள் தாக்கப்பட்டார்கள்.

sampanthan

இதன் தொடர்ச்­சி­யாகப் பல்­வேறு அர­சியல் கெடு­பி­டிகள் நடை­பெற்ற நிலையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தமிழரசுக்கட்­சியின் தலை­மையில் ஆர்ப்­பாட்­டங்கள் போராட்­டங்கள் இடம்­பெற்­ற­துடன் இலங்­கையின் 9ஆவது சுதந்­திர தினத்தை (1957) துக்க தின­மாக அனுஷ்­டிக்­கும்­படி தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

சுதந்­திர தினத்தை துக்க தின­மாக அனுஷ்­டித்­ததன் விளை­வாக திரு­கோ­ண­ம­லையில் தமிழர் ஒருவர் கொல்­லப்­பட்டார்.

திருகோ­ணமலை மக்கள் சுதந்­திர தினத்தை துக்க தின­மாக அனுஷ்­டித்த வேளையில் நகரில் அமைந்­துள்ள மணிக்­கூட்டு கோபு­ரத்தில் ஏறி   கறுப்­புக்­கொ­டி­யேற்ற முயற்­சித்த 22 வய­தான  நட­ராஜன் என்­பவன் மீது எப். ஜி. மனுவல் டி. சில்வா துப்பாக்­கிப்­பி­ர­யோகம் மேற்­கொண்­டதில் நட­ராஜன் ஸ்தலத்­தி­லேயே கொல்­லப்­பட்டான்.

இந்த சம்­பவம் வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மனதில் சொல்­லொண்ணாத் துயரை உரு­வாக்­கி­யது.

இதன் இன்­னொரு இன வெறுப்பு சம்­ப­ வங்­க­ளாக  1958ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி கொண்டு வரப்­பட்ட வாகனங்களுக்கான ‘சிங்­கள ஸ்ரீ’ யை கூறலாம்.

தமிழ் மக்கள் குறிப்­பாக வட கிழக்கு மக்கள் தீவி­ர­மாக   எதிர்த்­ததன் கடும் விளை­வுதான்  1958ஆம் ஆண்டு வெடித்த இனக்கல­வ­ர­மாகும்.

மே 26, 27ஆம் திக­தி­களில் பேரி­ன­வாத காடை­யர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடூர வன்­மு­றைகள் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் வீடு வாசல்­களை இழந்­தார்கள் கொல்­லப்­பட்­டார்கள்.

இந்த இனக்­கொ­டூரம் தமிழ் மக்கள் மத்­தியில் தீராத கோபத்­தையும் மாறாத வஞ்­சத்­தையும் உண்­டாக்­கி­யது என்­பது மறுக்கப்பட முடி­யாத உண்மை.

இதன் எதிர்­போக்குக் கார­ண­மா­கவே  1958ஆம் ஆண்­டுக்­குப்பின்  வந்த எல்லா  சுதந்­திர தினங்­க­ளையும் தமிழ் மக்கள் ஆவேசமாக எதிர்த்து வந்­தி­ருக்­கி­றார்கள்.   கறுப்புக் கொடி­களை ஏற்றி தமது தீவி­ர­மான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கி­றார்கள்.

இதன் இன்­னொரு பரி­மாணம் தான் 1972ஆம் ஆண்டு முன்னாள் பிர­தமர் திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­க­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட (22.05.1972) குடி­ய­ரசு எனும் விட­ய­மாகும்.

1970ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி முதல் 1971யூன் 20 வரை  புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்க முனைந்த வேளை தமிழரசுக்­கட்­சி­யினர் அர­சியல்   அமைப்­புக்கு முன்­வைத்த திருத்­தங்கள் யாப்பு ஆக்­கி­க­ளாலும் அர­சாங்­கத்­தாலும் நிராகரிக்கப்­பட்ட   நிலையில்   தமிழ் மக்கள்  மத்­தியில்   சுதந்­தி­ரத்­துக்கு  எதி­ரான  தீவி­ரத்­தன்மை  வளர்ந்த நிலையில் சுதந்திர தினத்தை  தீவிரமாக எதிர்க்கும்  முனைப்புக் கொண்­டார்கள்.

இதன் இன்­னொரு மறு­வ­டி­வம் தான் யாழில் 1974ஆம் ஆண்டு இடம்­பெற்ற (10.1.1974) உல­கத்­தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடை­பெற்ற அசம்­பா­வி­தங்­க­ளாகும். இதன் கூட்டு வடி­வங்­களே பின்­னாளில் ஆயுதப் போராக வெடித்­தது.

சுமார் கால் நூற்­றாண்டு காலம் (1983 – 2009) நடை­பெற்ற ஆயு­தப்போர் காலத்தில் சுதந்­திர தின­மென்­பது தமிழ் மக்­களால் எண்­ணிப்­பார்க்க முடி­யா­த­தொரு மோச­மான நாளா­கவே அது கரு­தப்­பட்­டது.

ஆனால் இன்­றைய சூழ்­நி­லையில் எல்­லாமே   மாற்­றத்­துக்­குள்­ளாகிக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் 67ஆவது தேசிய சுதந்­திர தினத்­துக்கு தமிழ்த் ­த­லை­வர்கள் சமூகமளித்திருந்தமை கடு­மை­யான விமர்­ச­னத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருப்­பது கவலை தருகின்ற விட­யம்தான்.

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தாக உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­த­ள­விலும் இலங்கை அரசாங்கம் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டது மாத்­தி­ர­மின்றி தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்ற அவர்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய நியா­ய­மான அர­சியல் தீர்வை நான் வழங்க தயா­ராக இருக்­கின்றேன் என்ற வாக்­கு­று­தி­களை முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  உள்­நாட்­ட­ள­விலும்  இந்­தியா உட்­பட சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் அளித்­தி­ருந்தார்.

அவர் நிலை­யா­னதும் நீடித்து நிற்­கக்­கூ­டி­ய­து­மான நியா­ய­மான அர­சியல் தீர்வை வழங்­குவார் என தமிழ் மக்­களும் குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும்  காத்­துக்­காத்து இருந்தே இறு­தியில் இலவு காத்த கிளிகள் ஆக்­கப்­பட்­டார்கள்.

யுத்­தத்­துக்கு உதவி புரிந்து  தமிழ் மக்­களின் அபி­லா­சை­க­ளுக்கு சாவு மணி­ய­டித்த இந்­திய வல்­ல­ரசு தன்னால் முன்­மொழியப்பட்ட 13ஆவது  திருத்தச் சட்­டத்தை பூர­ண­மாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மென இலங்கை அரசைக் கட்டாயப்படுத்தாது போக்­குக்­காட்­டியே ஏமாற்றி வந்­தார்கள்.

இந்த நிலையில் இந்­தி­யாவில் காங்­கிரஸ் ஆட்சி தோற்­க­டிக்­கப்­பட்டு நரேந்­தி­ர­மோ­டியின் தலை­மை­யி­லான பா.ஜ. கட்சி ஆட்சி பீட­மே­றி­யது. பாரதப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் வரு­கையின் மீது தமிழ் மக்கள் அதீத மக்கள் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்கள். இறு­தியில் அதுவும் கானல் நீரா­கிப்­போன கதை­யா­கவே ஆகி­யது.

இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லை­யில்தான் தற்­பொ­ழுது இலங்கை அர­சி­யலில் புதிய மாற்றம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது.

இந்த மாற்றம் தமிழ் மக்கள் விரும்­பு­கின்ற தீர்வை தந்­து­வி­டு­மென்று எதிர்­பார்க்க முடி­யாது விட்­டாலும் மாற்­றத்­துக்­கான அடை­யா­ளங்கள் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக தெரி­வதை நாம் நம்­பித்தான் ஆக வேண்டும்.

இலங்­கையின் புதிய மாற்­றத்­துக்­கான பங்­கா­ளி­காக வட கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இருந்­துள்­ளார்கள் என்­பதை உலகம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்­தில்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் சுதந்­திர தின­விழாவுக்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­கிறார். அவ­ரு­டைய ராஜ­தந்­தி­ரங்கள் தோற்­றுப்­போ­வ­தில்­லை­யென்ற நம்­பிக்கை வாதங்கள் தமிழ் மக்­களின் பொது­வான அபிப்­பி­ரா­ய­மாகும்.

பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை நம்பும் இலங்­கையின் பொதுத்­தேர்­தல்­க­ளிலும் சரி மறு­பு­றத்தே நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளிலும் சரி, வட­கி­ழக்கு மக்கள் எதிர்ப்பு அர­சியல் போக்­கையே கடைப்­பி­டித்து வந்திருக்கிறார்கள் என்­பதே யதார்த்தம்.

இதனால் தென்­ச­மூகம் தமிழ் மக்­களை விரோ­தி­க­ளா­கவும் எதி­ரி­க­ளா­கவும் பார்த்து வந்த காலங்­களே அதிகம். இதுவே வரலாற்றுப் பாட­மா­கவும் இருக்­கி­றது. இவற்­றுக்­கான மாற்­றத்தை தேட வேண்­டிய காலத்தின் கட்­டா­யத்தில் தமிழ் மக்கள் இருக்­கின்­றார்கள் என்­ப­தே­யுண்மை.

இரா.சம்­பந்­தனின் தீர்­மா­னிப்பு சரி­யா­னதா? பிழை­யா­னதா? என்ற வாதத்­துக்கு அப்பால் காலத்தின் நிய­தியும் தேவையும் கவனிக்­கப்­பட வேண்­டு­மென்­பதே சரி­யான விடை­யாக இருக்க முடியும்.

இலங்­கை­ய­ர­சி­யலில் தமிழ் மக்கள் இழக்­கப்­பட்­ட­வையும் ஏமாற்­றப்­பட்­ட­வையும் தோல்வி கண்­ட­வையும் அதி­க­மென்­பது மறுக்­கப்­பட முடி­யாத உண்­மைதான்.

ஆனால் எதிர்ப்பு நிலை­வா­தந்தான் எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் சரி­யான தீர்­வா­கு­மென்று நம்­பிக்கை கொண்­டி­ருப்­பது அர்த்த­மற்­றது என்­பதே புத்­தி­ஜீ­வி­களின் ஆழ்ந்த கருத்­தாக இன்று கரு­தப்­ப­டு­கின்­றது.

இதை பட்­ட­றிந்த பொது­மக்­களும் ஏற்­றுக்­கொள்­கி­றார்கள். எதிர்ப்பு நிலை­வாதம் தமிழ் மக்­க­ளுக்கு இன்று என்ன திர­வி­யத்தை தேடித் தந்­தி­ருக்­கி­றது என்று வினாவிப் பார்த்தால் கிடைக்கும் விடை பூஜ்­ஜி­ய­மா­கவே இருக்கும்.

இவ்­வி­டத்தில் ஒன்றை நினை­வு­ப­டுத்திப் பார்க்க முடியும். 13ஆவது திருத்தச் சட்­டத்தைக் கொண்­டு­வரச் செய்து வட­கி­ழக்கு இணைந்த மாகாண ஆட்­சி­மு­றை­யொன்றை இப்­போ­தைக்கு ஏற்­றுக்­கொள்­ளுங்கள்.

பின்­னாளில் பூரண வலு­வு­டைய ஆட்சி முறை­மையை உரு­வாக்கித் தரு­வோ­மென இந்­திய வல்­ல­ரசு அழுத்தம் தந்­த­வேளை ஏற்று நடந்­தி­ருந்தால் இன்­றைக்கு இந்த அவலம் நேர்ந்­தி­ருக்­குமா என்­பதை நினைத்­துப்­பார்க்க வேண்டும்.

மாற்­றங்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும். ஜீர­ணிக்­கப்­ப­டவும் வேண்டும். புதிய மாற்­றத்தின் போக்கை இந்த அரசில் காண முடியும் என்­ப­தற்கு அடை­யா­ள­மாக ஏலவே மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கரத்தைப் பலப்­ப­டுத்­திக்­கொண்டு தமிழ் மக்­களின் நேர்வி­ரோ­தி­க­ளாக இருந்த ஹெல உறு­ம­யவின் தலை­வர்­களும் ஜே.வி.பி. யின் பிர­தி­நி­தி­களும் இன்று தமிழ் மக்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் மாற்று நிலை­யொன்று இலங்­கை­ய­ர­சி­யலில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இரா­ணு­வத்தால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட சிறு­துண்டு நிலங்­க­ளைக்­கூட தமிழ் மக்­க­ளுக்கு மீண்டும் கைய­ளிக்­கப்­பட வேண்டுமென ஹெல உறுமய தலைவர்கள் அடித்துக்கூறும் அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளது.

sampanthanஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 67ஆவது சுதந்திர தினத்தில் உரையாற்றுகின்றபோது இதய சுத்தியோடு பின்வருமாறு கூறியமை தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்த விடயமாகும்.

30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, சமாதானம் வந்து விட்டதாக கூறப்பட்டாலும் வடக்கு தெற்கு மக்களின் இதயங்களை இணைப்பதற்கான இயலுமை இல்லாது போய்விட்டது.

எனவே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மனிதாபிமானம்மிக்கவர்களின் தேசமாக இலங்கையை கட்டியெழுப்பி முன்னோக்கி பயணிக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.

இவை அவரின் வார்த்தை ஜாலங்கள் என நாம் கருத முடியாது. ஏனெனில் கிராமத்தில் இப்படியொரு பழமொழி சொல்வார்கள். புலி ராஜ்ஜியம் போல் பசு ஆளுகை இருக்காது என்று.

இதன் கருத்தென்னவென்றால் புலி போன்ற அட்டகாசத்தை பசு செய்யாது என்பதாகும். இதன் மறைபொருள் என்னவென்றால் மைத்திரியின் ஆட்சி பசுவாண்மை கொண்டதாகவே இருக்குமென்பதாகும்.

எனவேதான் ஒன்றை நாம் மனங்கொண்டு பார்க்க வேண்டும். ஓடுகிற நதியோடு சேர்ந்து ஓடி நன்மைகளை பங்கு போட்டுக்கொள்வோர் இந்த நாட்டில் இருக்கும்போது எதிர் நீரோடி சாதிக்க முடியாதவற்றை இணைந்தோடி சாதிக்க நினைக்கும் சாணக்கியத்தையும் ராஜதந்திரத்தையும் நாம் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது.

Share.
Leave A Reply