குரோதம், வைராக்­கியம் போன்ற அனைத்து தீய குணங்­களின் மொத்த வடி­வமாய் இருந்த சிறிய தந்தை அவள் ­கு­டும்­பத்தை வேர­றுக்க வேண்டும். புதிய விடி­யலில் அவள் உயி­ருடன் இருக்கக் கூடாது என்று இரவு முழு­வதும் தனது இமை­களை சற்றும் மூடாமல் அவளை பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் காத்திருந்தான்

பிறப்­புக்கும் இறப்­புக்கும் இடைப்­பட்­டது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்­கையை மகிழ்ச்­சி­யுடன் வாழ்­வ­தற்கு தான் அன்பு, பாசம், காதல், பாது­காப்பு என்ற உணர்வுச் சுவர்­க­ளினால் குடும்பம் என்னும் அழ­கிய கோயில் கட்­டப்­பட்­டுள்­ளது.

தாத்தா, பாட்டி, மாமன், மாமி, சித்தி, சித்­தப்பா, பெரி­யம்மா, பெரி­யப்பா என்று அன்­பாக பெயர் சொல்லி அழைக்கும் கூட்­டுக்­கு­டும்­பத்தில் மகிழ்ச்­சிக்கு ஏது குறைவு. ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றால் என்­ன­வென்றே தெரி­யா­த­வர்­களே அதிகம்.

இதற்கு காரணம் புரிந்­து­ணர்­வின்மை, விட்­டு­கொ­டுப்­பின்மை, சந்­தேகம் என்ற தீய சக்­தி­களின் கட்­டுக்­களில் குடும்­பங்கள் கட்­டப்­பட்­டுள்­ள­மையே ஆகும்.

அதுவும் சிறு சிறு பிரச்­சி­னை­க­ளுக்­கெல்லாம் விலை மதிப்­பற்ற மனித உயிர்­களை மிக துச்­ச­மாக வேட்­டை­யா­டுதல் குடும்­பங்­களில் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றன.

அதற்கு சிறந்த எடுத்­துக்­காட்டு அண்­மையில் காலி, தடல்ல பிர­தே­சத்தின் மக­மு­தலி மாவத்­தையில் இடம்­பெற்­றது. இக்­கொ லைச்சம்­ப­வத்தில் 24 வயது மதிக்­கத்­தக்க யுவ­தி­யொ­ருவர் உயி­ரி­ழந்­த­துடன்,அவ­ளது தாயும் சகோ­த­ரனும் கடு­மை­யான வெட்­டுக்­கா­யங்­க­ளுடன் காலி, கராப்­பிட்­டிய போதனா வைத்­தி­ய­சா­லையில் அவ­ரச சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கின்­றார்கள்.

இதே­வேளை 58 வய­தான குறித்த யுவ­தியின் மாமன் முறை­யான கொலை­யாளி கிங்­தொட்ட, பாலத்­திற்கு அருகில் ரயில் பாதையில் தலை வைத்து தற்­கொலை செய்­துள்ளான்.

இதை அடுத்து பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து யுவ­தியின் கண­வ­ரது சித்­தாப்­பா­வுக்கும், யுவ­தியின் குடும்­பத்­தா­ருக்­கு­மி­டையே நில­விய சச்­ச­ரவே இந்த கொலைக்­கான காரணம் என்று தெரிய வரு­கின்­றது.

jodiஇதன்­படி இச்­சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த எஸ்.ஜே சந்­த­மாலி மூன்று மாதங்­க­ளுக்கு முன் தான் யாழ். இரா­ணுவ முகாமில் இராணுவ வீர­ராகக் கட­மை­யாற்றும்  சிசி­ரவை (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) திரு­மணம் செய்து கொண்டாள்.

அதன்­படி தனது திரும­ணத்தின் பின் தனது பிறந்த வீட்டை விட்டு காலி, தடல்ல பிர­தே­சத்தின் மக­மு­தலி மாவத்­தை­யி­லுள்ள தன் கணவனான சிசி­ரவின் வீட்­டுக்கு புது மணப்­பெண்­ணாக தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.

திரு­ம­ண­மாகி சில நாட்கள் மட்­டுமே சந்­த­மா­லிக்­காக நேரத்தை செல­வ­ழித்த சிசிர மீண்டும் தனது தொழி­லுக்­காக யாழ்ப்­பா­ணத்­துக்கே சென்­று­விட்டான். அதன் பின் விடு­முறை நாட்­களில் மட்­டுமே சிசிர வீட்­டுக்கு வருவான்.

எனவே பெரும்­பாலும் சந்­த­மாலி கண­வனின் தாய், தந்தை, சகோ­தரன் என்ற தனது புகுந்த வீட்டு சொந்­தங்­களின் பாதுகாப்பிலேயே இருந்தாள். மேலும், அனை­வ­ரு­டனும் சக­ஜ­மாக பழகும் இயல்­பு­டைய அவ­ளுடன் மாமன், மாமி, மைத்­துனன் என அனை­வ­ருமே அன்­பாக இருந்­தார்கள்.

அது­மட்­டு­மின்றி கண­வனின் சிறிய தந்­தையின் வீடும் இவர்­களின் வீடு அமைந்­தி­ருந்த அதே வள­வுக்­குள்­ளேயே அமைந்திருந்­தது.

இது தான் குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­டையே குரோதம்,வைராக்­கியம் போன்ற தீய சக்­தி­களை ஊடு­ருவச் செய்­த­துடன் இறு­தியில் சந்­த­மா­லியின் உயிரைக் குடிக்­கு­ம­ள­வுக்கு பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது.

கண­வனின் சிறிய தந்­தைக்கு ஆரம்­பத்­தி­லி­ருந்து சந்­த­மா­லியை அவ்­வ­ள­வாகப் பிடிக்­க­வில்லை.. சிறிய சிறிய விட­யங்­க­ளுக்கும் அதி­க­மாக குழப்­ப­ம­டையும் குண­வி­யல்­பினை கொண்ட அவர் தொட்­ட­துக்­கெல்லாம் அவள் மீது குறை­களைச் சுமத்­தி­ய­வாறே இருந்தார்.

viduஇவ­ரு­டைய இந்த நட­வ­டிக்­கை­யினால் இரு குடும்­பங்­க­ளுக்கும் இடையில் அடிக்­கடி முறுகல் நிலைகள் தொடர்ந்த வண்­ணமே இருந்­தன.

இத­னி­டையே பௌர்­ணமி தின­மான பெப்­ர­வரி மாதம் மூன்றாம் திகதி விடு­முறை நாள் என்­பதால் அன்­றைய தினத்தில் தன்னைப் பார்க்க காலி தடல்ல, மக­மு­தலி மாவத்­தையில் அமைந்­துள்ள தனது கண­வனின் வீட்­டுக்கு வரு­மாறு, தன் தாய்க்கும், சகோ­த­ர­னுக்கும் சந்­த­மாலி அழைப்பு விடுத்­தி­ருந்தாள்.

எனவே மகளின் அழைப்­பினை ஆசை­யுடன் ஏற்ற தாய் தனது மக­னையும் கையோடு அழைத்துக் கொண்டு மகள் விரும்பிச் சாப்­பிடும் உணவு வகை­க­ளையும் செய்து எடுத்துக் கொண்டு சந்­த­மா­லியின் புகுந்த வீட்­டுக்கு பெப்­ர­வரி இரண்டாம் திகதி வந்து சேர்ந்தாள்.

சந்­த­மா­லி­யி­னதும், சிசி­ர­வி­னதும் திரு­ம­ணத்­துக்கு பிறகு மகளை பார்க்க அவள் புகுந்த வீட்­டுக்கு அவர்கள் வரு­வது அதுவே முதல் தடவை. எனவே தான் மகளின் அழைப்­பினை அவர்­களால் தட்­டிக்­க­ழிக்க முடி­ய­வில்லை.

பகல் வேளை­யாகும் பொழுது மகளின் புகுந்த வீடான காலி தடல்ல பிர­தே­சத்தை வந்­த­டைந்த இரு­வ­ரையும் கை,கால் முகத்தை கழுவி விட்டு சாப்­பிட வரு­மாறு கூறி, அவர்­களை வர­வேற்­ப­தற்­காக வகை வகையாய் சமைத்த உண­வுப்­பொ­ருட்­களை மேசையில் ஆயத்­த­மாக்­கினாள்..

இதேவேளை, அயல் வீட்­டி­லி­ருந்த சந்­த­மா­லியின் கண­வனின் சிறிய தந்தை தனது இளைய மகன் முறை­யான இளை­ஞ­னுக்கு ஒரு கோப்பை இறால் கறியை கொடுத்து அனுப்­பி­யுள்ளார்.

இதனை குறித்த பிள்­ளை­யி­ட­மி­ருந்து பெற்றுக் கொண்ட சந்­த­மாலி அந்த பிள்­ளையின் செய்கை கார­ண­மாக சற்றுக் கடிந்தும் கொண்டாள் இதனை தொலை­வி­லி­ருந்து மாமன் முறை­யான குறித்த நபர் அவ­தா­னித்­த­துடன் சந்­த­மா­லியின் வீட்­டினை நோக்கி வந்­துள்ளார்.

இதேவேளை, சந்­த­மாலி அந்த பிள்ளை கொண்டு வந்­தி­ருந்த இறால் கறியில் தனது தாயா­ருக்கும் தம்­பி­யா­ருக்கும் சற்று அதிகம் பரி­மாறி விட்டு தனது கண­வரின் தம்­பிக்கு குறைந்த அளவில் பரி­மா­றி­யுள்ளார்.

இத­னையும் அவ­தா­னித்த மாமன் முறை­யா­னவர் சந்­த­மா­லி­யுடன் சற்று ஆவே­ச­மாக முரண்­பட்­டுக்­கொண்டார். அவர் இதற்கு முன்னும் சந்­த­மா­லியின் மீது எதற்­கெ­டுத்­தாலும் குறை கண்டு பிடிப்­பவர். எனவே இதை அவர் விடு­வதாய் இல்லை.
policea
“நான் அவ­னுக்கு தான் அந்த இறால் கறியை அனுப்­பினேன் நீ எப்­படி உன்­னு­டைய தாய்க்கும், சகோ­த­ர­னுக்கும் இதைப் பரி­மாற முடியும்” என பலத்த சத்­தத்­துடன் கத்­தி­ய­துடன், கூடாத வார்த்­தை­க­ளையும் அவளை நோக்கி பிரயோகித்துள்ளார்.

அது­மட்­டு­மின்றி அவளின் தாயையும் தம்­பி­யையும் கூடவே பேசி­யுள்ளார். எனவே அவளும் பதி­லுக்கு அவரைத் தீட்டித் தீர்த்தாள். இதே வேளை சாந்­த­மா­லியின் தாயாரோ ஆசையாய் மகளைப் பார்க்க வந்த இடத்தில் இப்­படி நடந்து விட்­டதே என்று மகளை சாந்­தப்­ப­டுத்­தினாள்.

அதன் பின் அவ்­வி­டத்தை விட்டுச் சென்ற சிறிய தந்­தைக்கு மாலை வேளையில் நடந்த சம்­ப­வத்தை அவனால் மறக்க முடிய­வில்லை.

எனவே குரோதம், வைராக்­கியம் போன்ற அனைத்தின் தீய குணங்­களின் மொத்த வடி­வமாய் இருந்த சிறிய தந்தை அவள் குடும்­பத்தை வேர­றுக்க வேண்டும். புதிய விடி­யலில் அவள் உயி­ருடன் இருக்கக் கூடாது என்று இரவு தனது இமை­களை சற்றும் மூடாமல் அவளை பழி வாங்க வேண்டும் என்ற வெறி­யுடன் காத்­தி­ருந்தார்.

அதன்­படி முழு மதி தின­மான பெப்­ர­வரி மூன்றாம் திகதி அதி­காலை வேளை­யி­லேயே ஆழ்ந்த நித்­தி­ரை­யி­லி­ருந்த சந்­த­ மா­லியை கொலை செய்யும் நோக்­கத்­துடன் வீட்டின் மூலை­யி­லி­ருந்த கோட­ரியை எடுத்துக் கொண்டு அவளை வெட்ட சென்றார் அதன்படி இளம் பெண்­ணான சந்­த­மா­லியின் உடலை சர­மா­ரி­யாக வெட்டிச் சாய்த்தார்.

Prawn-coconut-curryஅது­மட்­டு­மின்றி சந்­த­மா­லியை காப்­பாற்ற முனைந்த அவ­ளது தாயையும், சகோ­த­ர­னையும் சர­மா­ரி­யாக வெட்­டினான். இதைத் தொடர்ந்து சந்­த­மாலி ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­துடன் ஏனைய இரு­வரும் பலத்த வெட்டு காயங்­க­ளுடன் காலி, கராப்­பிட்­டிய வைத்­தியசாலையில் அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதில் சந்­த­மா­லியின் சகோ­த­ரனின் நிலைமை மிகவும் கவ­லைக்­கி­ட­மா­க­வுள்­ள­தாக வைத்­தி­ய­சா­லையில் இருந்து வெளி வரும் செய்­திகள் மூலம் அறி­யப்­ப­டு­கின்­றது.

கோட­ரியால் தனது மரு­ம­க­ளையே தாக்கிக் கொலை செய்த கொலை குற்­ற­வா­ளி­யான சிசி­ரவின் சிறிய தந்தை கொழும்பு, காலி பிர­தான ரயில் பாதையில் உள்ள கிங்­தோட்டை ரயில் பாதையின் பாலம் அருகே சென்று அங்கு தண்­ட­வா­ளத்தில் தன் தலையை வைத்து ஓடும் ரயில் முன் தற்­கொலை செய்து கொண்டான்.

இதைத் தொடர்ந்து சடலம் துண்டு துண்டாய் சித றிய நிலையில் ஜீன் கங்கையிலிருந்து மீட் கப்பட்டது.

எனவே “ஆத்­திரக்கார­னுக்கு புத்தி” மட்டு என்­பார்கள். சாதா­ர­ண­மாக தீர்க்க வேண்­டிய ஒரு பிரச்­சினை இது. அற்பத் தன­மாக ஒரு கோப்பை இறால் கறிக்­காக ஒரு குடும்­பத்­தையே வேர­றுத்து உள்­ளமை மனி­தா­பி­மா­ன­மில்­லாத அரக்கன் என்­ப­தையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

Share.
Leave A Reply