அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.

இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான வைபவ், கடந்த மாதம் 28ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டிந்தது.

வைபவ் கப்பல் திருகோணமலையில், தரித்து நின்ற போது, இந்திய கடலோரக் காவல்படையினர், பல்்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

இதன்போது, கடற்புலிகளிடம் இருந்து சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்களைப் பார்வையிட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர். ஆச்சரியமடைந்தனர்.

கடற்புலிகள் உருவாக்கிய கடற்கலங்கள் தொடர்பாக சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர், இந்தியக் கடலோரக் காவல்படையினருக்கு விளக்கிக் கூறியிருந்தார்.

இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலான வைபவ் கடந்த 2ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

புலிகளின் விமானத் தாக்குதலுக்குப் பயந்து அதிபர் மாளிகையில் கட்டப்பட்ட பதுங்குகுழிகள் கண்டுபிடிப்பு

puliசிறிலங்கா அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியிலான பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை பற்றிய பல இரகசியங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியில், பதுங்குகுழி போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவை விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால் போர் நடந்த காலத்தில் கட்டப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

கொங்றீட்டினால் வலுவான முறையில் இந்த நிலத்தடி பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் துரத்திச்சென்று இளைஞனின் கையை வெட்டிய குழுவினர்
08-02-2014

article_1423392087-bloody-knife300யாழ்ப்பாணம் கோப்பாய் அம்மன் கோவிலுக்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை(08) இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞனின் கை வெட்டப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த ஏ.அலெக்ஸ்தீபன் (வயது 20) என்பவரே இவ்வாறு கையை இழந்து படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை வீதியில் துரத்தி சென்ற குழுவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் இளைஞனின் கையை மணிக்கட்டு பகுதியுடன் வெட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாண மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Share.
Leave A Reply