மும்பை: இந்தி நடிகை சோனம் கபூர் தனது வைர நெக்லஸைக் காணவில்லை என மும்பைப் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் மும்பை ஜூகு 7-வது சாலையில் உள்ள பங்களா வீட்டில் தனது தாய் சுனிதாவுடன் வசித்து வருகிறார்

கடந்த 4-ந்தேதி சோனம் கபூர் பாந்திராவில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய சோனம், தனது அறையில் இருந்த மேஜையில் தான் அணிந்திருந்த வைர நகைகளைக் கழற்றி வைத்துள்ளார்.
அந்த நகைகளை மும்பையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றிடம் ஒப்பந்த அடிப்படையில், நடிகை சோனம் கபூர் வாங்கியிருந்தார்.
 12-1423726346-sonam-kapoor-1-1-600
அவர் அணிந்து கொள்வதற்காக நகைக்கடை நிர்வாகம் 6 பெட்டிகளில் பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மறுநாள் காலை சம்பந்தப்பட்ட நகைக்கடை விற்பனை பிரதிநிதிகள் நகைகளை வாங்கிச் செல்வதற்காக சோனம் கபூரின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது நகைகளை எடுத்து கொடுப்பதற்காக நடிகை சோனம் கபூர் மேஜையை திறந்தபோது, அதில் வைர நெக்லஸ் ஒன்று காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சோனம் கபூர், தனது வைர நெக்லஸைக் காணவில்லை என ஜூகு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை சோனம் கபூரின் வீட்டு வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்றைய தினம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் வேலைக்காரர்கள் யாரும் அன்றைய தினம் நடிகை சோனம் கபூரின் அறைக்கு செல்வது போன்ற காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.
இதனால், விருந்து நிகழ்ச்சியில் சோனம்கபூர் தனது நெக்லஸைத் தவற விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே, விருந்து நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காணாமல் போன வைர நெக்லஸின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply