கடந்த அரசாங்க ஆட்சியில் இடம் பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியுடன் மேலும் பல தகவல்களை வெளிபடுத்த ஆயத்தமாகவுள்ளதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல் பல தன்னிடம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்த மகிந்த, மொத்தம் 250 மில்லியன்: பட்டலி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 57 லட்ச வாக்குகளை பெற்றுள்ளார்.
அவர் ஒரு வாக்கிற்காக 43000 ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும் என கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பணம் மூலம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என புது டில்லி நிரூபித்து காட்டுகிறது அதற்கான மாதிரியை வெளிப்படுதியவர்கள் இலங்கையை விட்டு செல்வார்களா என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலுக்காக 250 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த, கோட்டா ஆகியோரிடம் விசாரணைக்கு காத்திருப்பு
இராணுவ சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முற்பட்டமை தொடர்பில் மகிந்த மற்றும் கோட்டாபயவிடம் விசாரணை செய்வதற்கான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவ தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோரிடமும், முன்னாள் பிரதமர் நீதியசரர் மொஹான் பீரிஸிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பான கோப்புகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடரின் அவரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக காவற்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.