அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ். அதில் “துணிச்சலான முஜாஹிதீன்” என்ற தலைப்பில் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தியில், ‘மிஷல் ஒபாமா…உனது மகள்கள் மற்றும் கணவரை பார்த்துக் கொள். இது அவர்களுக்கு ரத்த காதலர் தினமாக தான் இருக்கும்.
அமெரிக்காவும், அதன் செயற்கைகோள்களும் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் எங்களின் சகோதரர்களை கொன்றுள்ளது. இதற்கு பதிலடியாக உங்கள் நாட்டின் சைபர் பாதுகாப்பை அதற்கு உள்ளிருந்தே தகர்ப்போம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று அமெரிக்காவின் பல டுவிட்டர் மற்றும் யூட்யூப் அக்கவுன்டகளை இவர்கள் ஊடுருவி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் பயங்கரம்.. 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை- பக்கத்து வீட்டுக்காரர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில் வட கரோலினா பல்கலைக் கழக மாணவர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்பினால் ஏற்பட்ட இழப்பு என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட டியா ஷேடி பராக்கத், அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா, யூசுரின் சகோதரி ரஸான் அபுசல்ஹா ஆகிய மூவரும் சேப்பல் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த மாணவர்கள். நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஸ்டீபன் ஹிக்ஸை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் நாத்திகவாதி என்பதும், மதங்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து ஸ்டீபன் கொலை குற்றம் உட்பட மூன்று பிரிவுகளில் கைது செய்யப்பட்டு துர்ஹம் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இது முழுக்க முழுக்க மதத்தின் மீதான வெறுப்பினால் நடைபெற்ற கொலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.