தென் கொரியாவின் இன்சோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் சுமார் 100 கார் வண்டிகள் ஒன்றோடொன்று நொறுங்குண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 42 பேர் காயமடைந்திருப்பதோடு எட்டுப் பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக யொன்ஹப் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

korea4_3195116cபனிமூட்டம் காரணமாக பஸ் வண்டி ஒன்று முன்னால் இருக்கும் கார் வண்டியோடு மோதியதை அடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

korea2_3195118cஇந்த  விபத்தில் தனது கார் வண்டியும் சிக்கிக்கொண்ட  39 வயது லீ கியொங்  என்ற ஓட்டுனர் குறிப்பிடும்போது, பனிமூட்டம் காரணமாக முன்னால் இருக்கும் 10 மீற்றர்கள் வரை கூட தெரியாத நிலையில் வாகனத்தை மெதுவாகவே செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு பின்னால் இருக்கும் கார் வண்டி மோதி முன்னிருக்கும் வண்டியின் மோதுண்டது” என்று அந்த ஓட்டுநர் விபரித்தார்.

Share.
Leave A Reply