அமெரிக்க ஐனாதிபதி ஒபாமாவுக்கு, அடுத்தபடியாக இலங்கை ஜனாதிபதி மைத்திரியை வரவேற்க இந்தியா தயாராகவுள்ளதென்றால் இலங்கையின் முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவை வரவேற்பதற்கு பாரதமே தயாராகிக்கொண்டிருப்பதாகவும் அதற்காக தவம்கிடப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றுக்காலை தொலைபேசி அழைப்பை எடுத்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி, உலக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு தனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கொண்டுள்ளார்.
1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை கைப்பற்றியது போல, இம்முறையும் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு முடியவேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் இந்திய பிரதரம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, உள்ளிட்ட குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்வுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவில், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, பாடலி சம்பிக்க ரணவக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் (போலி) ஆதரவமைப்புகளுக்கு அரோகரா!
முன்னாள் ஐனாதிபதி மகிந்தவின் ஆட்சி முடிந்ததோடு…”தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் (போலி) ஆதரவாளர் அமைப்புகளுக்கும் வேலை வாய்பு இல்லாமல் போய்விட்டது.
குறிப்பிட்டு சொல்லப்போனால்.. தமிழகத்தில் “ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் நடத்துகின்றோம் என்ற போர்வையில் இனி யாரும் “கறுத்த கொடி” தூக்கமுடியாத நிலை தோன்றியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைபினருக்கும் அரோகரா!
இந்தியாவை மலைபோல் நம்பியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரை, இந்திய அரசாங்கம் இனிவருங்காலங்களில் பொருட்படுத்தாது என்பதோடு, அமெரிக்கா உட்பட்ட சர்வதேசத்தினரும் தமிழர்களை கைவிட்டுள்ளார்கள்.
மைத்திரிபால, ரணில் கூட்டு அரசாங்கம்… “இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற எல்லா நாடுகளையும் அரவணைத்து போகும் பட்சத்தில், சிங்கள அரசை இனி எந்தவொரு நாடும் தங்களுக்கு எதிரியாக பார்க்கமாட்டார்கள்.
இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் கூட்டமைப்பினர்கள் தான். காரணம் அவர்கள் தான் தமிழர்களை மைத்திரிக்கு வாக்களிக்க சொல்லி , அவரை ஐனாதிபதியாக்கியவர்கள்.
சர்வதேசத்தின் பார்வை தமிழகளின் பக்கம் இருப்பதுபோன்ற ஒரு மாயை சூழலும் இல்லாமல் போய்விட்டது.
மகிந்தவின் 10வருட ஆட்சி காலத்தில் தான் தமிழர்கள் கொஞ்சம் பலமாக இருந்த காலம் எனலாம். ஏனெனில்..எதிர்ப்புச் சக்தி இல்லாமல்போய்விட்டால் மனிதர்கள் பிணம்தானே.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தமிழீழத்துக்கான “பொதுவாக்கெடுப்பை” நடத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள் சர்வதேசத்தினரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கலாம்.
ஆனால்…சம்பந்தன் “ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு வேண்டும் என்கிறார். அதாவது, சிங்களவர்களின் ஆட்சிக்குள் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்கின்றோம், நாம் ஒன்றாக வாழமுடியும் என்பதுதான் அதன் அர்த்தம்.
அதனால் … தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை, தாயகம், தேசியம், சுயாட்சி என்கின்ற கோட்பாட்டு கனவுகளை தமிழரசுக்கட்சியின் கட்டுப்பாட்டில் தமிழர்கள் உள்ளவரை மறக்கவேண்டியதுதான்.