* ஒரு அதிகாரி மட்டும் கைது; விசாரணைக்கு உத்தரவு
* போதுமான அளவில் இந்தியா நடவடிக்கை இல்லை

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடை பயிற்சி சென்ற 57 வயதான இந்தியரை கொடூரமாக தாக்கிய அமெரிக்க போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரை டிஸ்மிஸ் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க போலீசின் இந்த மிருகத்தனமான தாக்குதல், திட்டமிட்ட இனவெறித்தனம் என்று தெரியவந்துள்ளது.

குஜராத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாய் படேல்,  அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில்  மேடிசன் நகரில் உள்ள தனது மகனை பார்க்க சென்றுள்ளார். அங்கு, மகனுடைய வீட்டில் தங்கியிருந்த படேல் கடந்த 16ம் தேதி காலை 8 மணி அளவில் வாக்கிங் சென்றார்.

அப்போது அங்கு காரில் வந்த அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் இருவர், அவரை மடக்கி விசாரித்தனர். ‘எனக்கு ஆங்கிலம் தெரியாது’ என்று கூறிய படேலை துருவித்துருவி தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். வீட்டுக்கு வந்து என் மகனிடம் பேசுங்கள் என்று கூறியதை அலட்சியப்படுத்தினர்.

அப்போது கர்சீப்பை எடுக்க பாக்கெட்டில் கையை விட்டார் படேல். துப்பாக்கியை தான் எடுக்கிறார் என்று சந்தேகப்பட்டு, ஒரு அதிகாரி, திடீரென படேல் கைகளை பின்னுக்கு முறுக்கி, தரையில் அப்படியே ஓங்கி சாய்த்தார். இதனால் படேலுக்கு தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.

தொடர்ந்து அவர் கைகளை, கால்களை முறுக்கியபடி கேள்விகளை கேட்டனர். ஆனால், மயங்கிப்போனார் படேல். அப்படியும் கிட்டத்தட்ட 20 நிமிடம் அங்கேயே தாமதப்படுத்தி அதன் பின், மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

இந்த சம்பவம் பெரும் காட்டுத்தீ போல பரவியது. இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய தூதரக அதிகாரிகளை அனுப்பி விசாரிக்க வைத்தது மத்திய அரசு. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அலபாமா போலீஸ் ஆணையர், படேலை தாக்கிய போலீஸ் அதிகாரி பார்க்கரை உடனே கைது செய்ய உத்தரவிட்டார்.

அவர் மீது இனவெறித் தாக்குதல் வழக்கும் போடப்பட்டுள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை, இனவெறித்தனம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுக்கவே இல்லை; வெள்ளை மாளிகை வருத்தம் தெரிவித்ததும் கப்சிப்பாகி விட்டது. தூதரக அதிகாரிகளும் இதில் மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி கண்டுகொள்ளவில்லை.

ஒபாமா சொன்ன சகிப்பு அமெரிக்காவிலேயே இல்லை

இந்தியாவுக்கு சமீபத்தில் வந்து சென்ற அதிபர் ஒபாமா, இந்தியாவில் சகிப்பு தன்மையை காந்தி போதித்தார்; இப்போது அது இல்லை’ என்பது போல கமென்ட் அடித்தார். ஆனால், இது போன்ற சம்பவங்களால் அமெரிக்காவில் தான் சகிப்பு தன்மை இல்லை; இத்தனை ஆண்டாகி விட்டபோதிலும் இனவெறித்தனத்தை விடவில்லை என்று அமெரிக்காவில் உள்ள பல இந்திய அமைப்புகள் கண்டித்துள்ளன.

போலீஸ் சொன்ன பொய் காரணம்

‘இது திட்டமிட்ட இனவெறித்தனம். வெள்ளையர் அதிகம் உள்ள பகுதியான மேடிசன் நகரில் அடிக்கடி இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது தான் அது வெளியில் தெரிகிறது. மற்றபடி சிறிய அளவில் இந்தியர்களை உதாசீனப்படுத்துவது, கிண்டல் அடிப்பது போன்றவை அடிக்கடி நடக்கிறது’ என்று அங்குள்ள இந்தியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக படேல் குடும்பத்தினர், அலபாமா கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளனர். அவர்களின் வக்கீல் ஹாங்க் ஷெராட் கூறுகையில்,‘ படேல் அமைதியாக நடந்து சென்றுள்ளார். கார் பார்க்கிங் பகுதிகளை அவர் பார்க்கவே இல்லை. பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்ததாக கூறும் போலீசார் அதற்கு ஆதாரம் தரவில்லை. மூன்றாம் தர நடவடிக்கை, சட்டவிரோதமாக கைவிலங்கிட்டது இனவெறித்தனமான நடவடிக்கையாகவே தெரிகிறது’ என்றார்.

‘மருத்துவ செலவு ஒபாமா தர வேண்டும்’

கணவர் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்டது குறித்து, குஜராத்தில் உள்ள அவரது மனைவி சகுந்தலா கூறியதாவது: அமெரிக்காவில் எனது மகன் அதிகளவில் சம்பாதிக்கவில்லை. அவரது சிகிச்சை செலவுகளை ஒபாமாதான் ஏற்க வேண்டும். இதனை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக குஜராத் அரசோ அல்லது மத்திய அரசோ என்னை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு சகுந்தலா தெரிவித்தார்.

குஜராத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாய் படேல், அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் மேடிசன் நகரில் உள்ள தனது மகனை பார்க்க சென்றுள்ளார். அங்கு, மகனுடைய வீட்டில் தங்கியிருந்த படேல் கடந்த 16ம் தேதி காலை 8 மணி அளவில் வாக்கிங் சென்றார்.

அப்போது அங்கு காரில் வந்த அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் இருவர், அவரை மடக்கி விசாரித்தனர். ‘எனக்கு ஆங்கிலம் தெரியாது’ என்று கூறிய படேலை துருவித்துருவி தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். வீட்டுக்கு வந்து என் மகனிடம் பேசுங்கள் என்று கூறியதை அலட்சியப்படுத்தினர்.

அப்போது கர்சீப்பை எடுக்க பாக்கெட்டில் கையை விட்டார் படேல். துப்பாக்கியை தான் எடுக்கிறார் என்று சந்தேகப்பட்டு, ஒரு அதிகாரி, திடீரென படேல் கைகளை பின்னுக்கு முறுக்கி, தரையில் அப்படியே ஓங்கி சாய்த்தார். இதனால் படேலுக்கு தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.

தொடர்ந்து அவர் கைகளை, கால்களை முறுக்கியபடி கேள்விகளை கேட்டனர். ஆனால், மயங்கிப்போனார் படேல். அப்படியும் கிட்டத்தட்ட 20 நிமிடம் அங்கேயே தாமதப்படுத்தி அதன் பின், மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

இந்த சம்பவம் பெரும் காட்டுத்தீ போல பரவியது. இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய தூதரக அதிகாரிகளை அனுப்பி விசாரிக்க வைத்தது மத்திய அரசு. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அலபாமா போலீஸ் ஆணையர், படேலை தாக்கிய போலீஸ் அதிகாரி பார்க்கரை உடனே கைது செய்ய உத்தரவிட்டார்.

அவர் மீது இனவெறித் தாக்குதல் வழக்கும் போடப்பட்டுள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை, இனவெறித்தனம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுக்கவே இல்லை.

வெள்ளை மாளிகை வருத்தம் தெரிவித்ததும் கப்சிப்பாகி விட்டது. தூதரக அதிகாரிகளும் இதில் மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி கண்டுகொள்ளவில்லை.

ஒபாமா சொன்ன சகிப்பு அமெரிக்காவிலேயே இல்லை

இந்தியாவுக்கு சமீபத்தில் வந்து சென்ற அதிபர் ஒபாமா, இந்தியாவில் சகிப்பு தன்மையை காந்தி போதித்தார்; இப்போது அது இல்லை’ என்பது போல கமென்ட் அடித்தார்.

ஆனால், இது போன்ற சம்பவங்களால் அமெரிக்காவில் தான் சகிப்பு தன்மை இல்லை; இத்தனை ஆண்டாகி விட்டபோதிலும் இனவெறித்தனத்தை விடவில்லை என்று அமெரிக்காவில் உள்ள பல இந்திய அமைப்புகள் கண்டித்துள்ளன.

போலீஸ் சொன்ன பொய் காரணம்

‘இது திட்டமிட்ட இனவெறித்தனம். வெள்ளையர் அதிகம் உள்ள பகுதியான மேடிசன் நகரில் அடிக்கடி இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது தான் அது வெளியில் தெரிகிறது. மற்றபடி சிறிய அளவில் இந்தியர்களை உதாசீனப்படுத்துவது, கிண்டல் அடிப்பது போன்றவை அடிக்கடி நடக்கிறது’ என்று அங்குள்ள இந்தியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக படேல் குடும்பத்தினர், அலபாமா கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளனர். அவர்களின் வக்கீல் ஹாங்க் ஷெராட் கூறுகையில்,‘ படேல் அமைதியாக நடந்து சென்றுள்ளார்.

கார் பார்க்கிங் பகுதிகளை அவர் பார்க்கவே இல்லை. பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்ததாக கூறும் போலீசார் அதற்கு ஆதாரம் தரவில்லை. மூன்றாம் தர நடவடிக்கை, சட்டவிரோதமாக கைவிலங்கிட்டது இனவெறித்தனமான நடவடிக்கையாகவே தெரிகிறது’ என்றார்.

‘மருத்துவ செலவு ஒபாமா தர வேண்டும்’

கணவர் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்டது குறித்து, குஜராத்தில் உள்ள அவரது மனைவி சகுந்தலா கூறியதாவது: அமெரிக்காவில் எனது மகன் அதிகளவில் சம்பாதிக்கவில்லை.

அவரது சிகிச்சை செலவுகளை ஒபாமாதான் ஏற்க வேண்டும். இதனை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக குஜராத் அரசோ அல்லது மத்திய அரசோ என்னை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு சகுந்தலா தெரிவித்தார்.

Share.
Leave A Reply