ஆசியாவின் அழகிய தீவாக இருக்கும் இலங்கையின் தன்னி கரற்ற கனவான்களைக் கொண்டி ருக்கும் கிரிக்கெட் அணியே கிண் ணத்தை வெற்றிவாகை சூட வேண்டும் என உள்நாட்டில் மட்டுமல்லாது உலகமெங்கும் பரந்து வாழும் அனைத்து இலங்கைய ர்களும் விரும்புகின்றார்கள்.
உலக கிண்ணத்தை வென்றெடுத்து விட் டால் உலகத்தையே வென்றுவிட்டதைப்போன்றதொரு பெரு மிதம். இது எமக்கு மட்டுமல்ல உலக கிண்ணத்தில் பங்கெடுக்கும் அனைத்து நாடுகளில் வாழும் மக்களின் எண்ணப்பாடும் இதுவாகவே இருக்கின்றது. கிரிக்கெட்டின் மீது அத்தனை பற்றுறுதி. இதில் இலங்கையர்கள் விதிவிலக்கல்ல.
அந்நிலையில் எம்மவர்களின் மீதானதொரு விரிவான பார்வை செலுத்தவேண்டியுள்ளது.
அறிமுகமும் வரலாறும்
1975ஆம் ஆண்டு முதலாவது உலக கிண்ணத்தில் டெஸ்ட் அந்தஸ்தைப் பெறாத நிலையில் காணப்பட்ட இலங்கையானது மேற்கிந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றிருந்த குழு ”பி” இல் உள்வாங்கப்பட்டிருந்தது. இத்தொட ரில் குழு நிலையில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்று வெளியேறியது.
அதனைத் தொடர்ந்து 1979ஆம் ஆண்டும் குழு ”பி”இல் இடம்பெற்றிருந்த இலங்கை முதற்சுற்றோடு வெளியேறியது. எனினும் இத் தொடரில் இங்கிலாந்தின் மன்செஸ்டரில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று உலக கிண்ணத்தொடரில் தனது முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது.
அதற்கடுத்ததாக 1983இல் குழு ”ஏ” இல் களமிறங்கிய இலங்கை போராடிய போதும் ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததால் முதற்சுற்றுடன் வெளியேறவேண்டியிருந்தது.
தொடர்ந்து 1987இல் எதிர்பார்ப்புக்களுடன் உலக கிண்ணத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை குழு ”பி” இல் இடம்பெற்றிருந்தது. 6 முதற்சுற்று ஆட்டங்களில் கலந்து கொண்ட இலங்கை அனைத்தி லும் தோல்வியுற்று மீண்டுமொரு தடவை முதற்சுற்றுடன் வெளி யேறியது.
அதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத் தில் அரவிந்த டி சில்வா தலைமை யில் சென்றிருந்த இலங்கை எட்டு போட்டிகளில் பங்கெடு த்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று எட்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண் டது.
1996 இல் தடம்பதித்த இலங்கை
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகள் கூட்டாக இணைந்து நடத்திய இத்தொடரில் வில்ஸ் கிண்ணம் என அழைக்கப்பட்ட உலக கிண்ணத்தை கைப் பற்றுவதற்காக அர்ஜுன ரணது ங்க தலைமையிலான இலங்கை குழாமில் அரவிந்த.டி.சில்வா (உப தலைவர்), ரொஷான் மகாநாம, சனத் ஜயசூரிய, அசங்க குருசிங்க, ஹஷான் திலகரட்ன, ரொமேஷ் களுவித்தாரன, குமார் தர்மசேன, சமிந்த வாஸ், பிரமோதய விக்கிரமசிங்க, முத்தையா முரளிதரன், ரவீந்திர புஷ்பகுமார, மாவன் அத்தபத்து, உபுல் சந்தன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
துலிப் மெண்டிஸ் அணியின் முகாமையாளராகவும் பயிற்சியாளராக டேவிட் வட்மோரும் செயற்பட்டிருந்தமை விசேடமானதாகும்.
1996 இல் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இடம்பெற்ற ஒரு நாள் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கை மீது இம்முறை உலக்கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இல்லா விட்டாலும் அரையிறுதிவரையிலாவது செல்லும் என்ற ஆருடங் கள் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழு ”ஏ”யில் இலங்கை இடம்பெற்றிருந்தது. முதலாவது கால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்த இலங்கை அவ்வணியை ஐந்து விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் முதற்தடவையாக நுழைந்தது.
முதலாவது அரையிறுதிப்போட்டி இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை எட்டு விக்கட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு இந்தியா 34.1 ஓவர்களில் எட்டு விக்கட் இழப்பிற்கு 120 ஓட்டத் தினையே பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் வெற்றிபெற்று முதற்தடவையாக இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
பலம்பொருந்திய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தீர்க்கமான இறுதிப்போட்டி பாகிஸ்தான் லாகூர் நகரில் அமைந்துள்ள கடாபி ஸ்டேடியத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெற்ற இலங்கை அணித்தலைவர் அர்ஜுன அவுஸ்திரேலிய அணியினை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார்.
கடந்த ஐந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றிபெற்றிருந்தது. அத்துடன் இரவு பகல் ஆட்டம் வேறு.
இந்நிலையில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் அர்ஜுனவின் தீர்மானம் குறித்த பலத்த வினாவெழுந்தது டன் அதிகமாவும் பேசப்பட்டது.
அந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற்றது. மார்க் டெயிலர் 74 ஓட்டங்களையும், ரிக்கிபொண்டிங் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அரவிந்த டி சில்வா 42 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.
242 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. போட்டி ஆரம்பித்து 6 ஓவ ர்கள் முடிவதற்கு முன்பாக தமது ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் இலங்கை இழந்தது.
சனத் ஜயசூரிய 7 பந்து களுக்கு முகங்கொடுத்து 9 ஓட்டங்களுடனும், களுவித்தாரண 13 பந்துகளுக்கு முகங்கொடுத்து 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 2வது விக்கட்டை இழக்கும்போது அணி 23 ஓட்டங்களையே பெற்றி ருந்தது.
இருப்பினும் அசங்க குருசிங்க, அரவிந்த டி சில்வா இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை 148 வரை அதிகரித்தனர். 31ஆவது ஓவரில் குருசிங்க ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து அர்ஜுன, அரவிந்த வெற்றி இலக்கை 46.2ஆவது ஓவரில் அடைந்தனர். 1996 வில்ஸ் உலகக் கிண்ணத்தை 7 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்ற இலங்கை 7ஆவது உலக கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களைப் பெற்ற அரவிந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டார். போட்டித்தொடரின் சிறப்பாட்டக்காரராக சனத் ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டியில் நடுவர்களாக ஸ்டீவ் பக்னர் (மேற்கிந்தியா) டேவிட் செப்பல் (இங்கிலாந்து) ஆகியோரும், 3ஆவது நடுவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கிரில் மிச்சியும் கடமை புரிந்தனர்.
போட்டி மத்தியஸ்தராக (இறுதித் தீர்மானத்துக்குரிய அதிகாரம் பெற்றவராக) கிளைவ் லொயிட் (மே.இந்தியா) கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய இலங்கை 1999ஆம் ஆண்டு உலக கிண்ணத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும் முதற்சுற்றுடனே வெளியேறியிருந்தது.
தொடர்ந்து ஆபிரிக்க கண்டத்தில் முதற்தடவையாக 2003இல் நடைபெற்ற 8 ஆவது உலகக் கிண்ணத்தொடரில் அரையிறுதிவரை சென்றிருந்த இல ங்கை அவுஸ்திரேலியாவுடன் டக்வேர்த் லூயிஸ் முறையில் தோல்வியுற்று வெளியேறியிருந்தது.
தொடர்ச்சியாக இரண்டு ஏமாற்றங்கள்
2007ஆம் ஆண்டு மேற்கிந்தியா வில் நடைபெற்ற 9ஆவது உலக கிண்ணத்தொடரில் குழு ”பி” இல் இடம்பெற்ற மஹேல ஜயவர்த்தன தலைமையிலான இலங்கை முதற்சுற்றில் அனைத்துப்போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
அரை இறுதியில் நியூஸிலாந்தை 81ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சந்தித்தது.
1996இல் இலங்கையிடம் கிண்ணத்தைப் பறிகொடுத்திருந்த அவுஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் அடம் கில்கிறிஸ்ட் (149 ஓட்டங்கள்) அபார துடுப்பாட்டத்தாண்டவம் இலங்கையின் உலகக் கிண்ணக்கனவை சிதறடையச் செய்யதது, இறுதியில் அவுஸ்திரேலியா டக்வோர்த் லூ யிஸ் முறையில் 53ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதனால் மீண்டுமொரு தடவை உலகக் கிண்ண த்தைக் கைப்பற்றும் இலக்கு தவறிப்போனது.
அடுத்து 2011இல் இந்திய, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து நடத்திய 10ஆவது உலக கிண்ணத்தில் குழு ”ஏ” இல் இடம்பெற்றிருந்த குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை குழு நிலையில் நான்கு வெற்றிகளுடன் மீண்டுமொரு தட வை நியூஸிலாந்தை அரை இறுதியில் சந்தித்து ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இறுதிப்போட்டியில் போட்டி யை நடத்திய நாடுகளில் ஒன்றான இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் இலங்கை சந்தித்தது. இப்போட்டியில் இலங்கையின் கிண்ண இலக்கை இறுதிநேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 91 ஓட்டங்களைப் பெற்ற இந்தியா அணித்தலைவர் டோனி சிதறடித் தார்.
ஆறு விக்கெட் வித்தியாசத் தில் இலங்கையை வீழ்த்திய இந்திய 28ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி சாதிக்க இலங்கைக்கு இரண்டாவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தை இழந்த ஏமா ற்றம்.
ஆஸி.கண்டத்தில் சாதிக்க காத்திருக்கும் சிங்கங்கள்
இவ்வாறான வரலாற்று தடங்களுடன் இம்முறை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள 11ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி பங்கேற்கின்றது.
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற பலமான அணிகளும் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற திடீர் அதிர்ச்சிகளை வழங்கும் அணிகளும் பங்கேற்றுள்ள குழு ”ஏ” இல் இல ங்கை இடம்பெற்றுள்ளது.
அஞ்சலோ மெத்யூஸ் தலைமை யில் திலகரட்ன டில்ஷான், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, லஹிரு திரிமன்னே, தினேஷ் சந்திமல், திமுத் கருணாரட்ன, ஜீவன் மெண்டிஸ், திஸர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மலிங்க, துஷ்மந்த சமீர, நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், சசித்ர சேனநாயக்க ஆகியோர் மீண்டும் தாய்நாட்டுக்கு உலகக் கிண்ணத்தைக் கொண்டுவருதற்காக களங்களில் போராடவுள்ளனர்.
தமது இறுதி உலகக் கிண்ணத்தொடரில் பங்கேற்றுள்ள குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோரின் அனுபவம் இலங்கைக்கு மிகப்பெரும்பலம். அணித்தலைவர்களாக, துடுப்பாட்டவீரர்களாக இவர்களின் அனுபவமும் நுணுக்கங்களும் இலங் கையின் வெற்றிகளுக்க ஆணிவேராக அமையும்.
அதேபோன்று மற்றுமொரு அனுபவ வீரரான திலகரட்ன டில்ஷானின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு ஆகியனவும் இலங்கையின் வெற்றியில் ஆதிக்கம் செலுத்தவுள்ளன.
குறிப்பாக இம்மூன்று வீரர்களும் முன்வரிசையில் களமிறங்குவதால் எதிரணிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதேநேரம் மத்தியவரிசை துடுப்பாட்டத்தை முழுமையாக அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸே சுமந்துகொண்டிருக்கின்றார்.
குறிப்பாக தினேஷ் சந்திமல், திமுத் கருணாரட்ன, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்காத பட்சத்தில் லகிரு திரிமன்னே ஆகியோர் மத்திய வரிசையில் வெளிப்படுத்தும் பிரகாசிப்புக்கள் போதுமானதாக இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. ஆகவே நிச்சயமாக இவ் இளைய வீரர்களின் துடுப்பாட்ட எழுச்சி மிகமிக அவசரமான அவசியமாகின்றது.
சகலதுறை வீரர்களான திஸர பெரேரா, ஜீவன் மெண்டிஸ் சசித்ர சேனநாயக்க ஆகியோர் அதிரடித்துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் பட்சத்தில் இலங்கை போட்டிகளை சிறப்பான முறையில் முடிவு செய்வதற்கு ஏதுவானதாக இருக்கும்.
அதேபோன்று அவர்கள் கூடுதலான விக்கெட்டுக்களை கைப்பற்றுவதிலும் அதிக கவனம் எடுக்கும் பட்சத்தில் இலங்கையின் பந்துவீச்சுப் பகுதி மேலுமொருபடி வலுவடையும்.
ஆஸி. மற்றும் நியூ. ஆகியவற் றின் ஆடுகளங்கள் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படாத போதும் இடதுகை சுழல்பந்து வீச்சாளர்களுக்கும் லெக்ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் கைகொடுப்பதாய் உள்ளது.
குறிப்பாக இவர்களால் விக்கெட்டுக்களை வீழ்த்தமுடியாது போனாலும் ஓட்டங்களை கட்டு ப்படுத்துவதற்குரிய வகையில் பந்துவீசுவதற்கு இவ் ஆடுகளங்க ளில் ஏது நிலைகள் காணப்படுகின்றன.
அதன் அடிப்படையில் இலங்கை குழாமில் இடது கை அனுபவ சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அதேபோன்று லெக் ஸ்பின்னர் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றா ர்கள்.
உலகத்தையே ஆட்டிவைத்த அபார வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது இலங்கையின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலமாகின்றது.
அத்துடன் அனுபவ வீரர் நுவான் குலசேகரவின் நுணுக்கமான ஸ்விங் முறைப் பந்துவீச்சும் அணிக்கு பெரிதும் கைகொடுக்க வுள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாகவிருக்கும் அவுஸ்திரேலிய நியூஸிலாந்து ஆடுகளங்களில் இவர்கள் நிச்சயமாக ஆதிக்கம் செலுத்துவார்கள்.
மேலும் இளம் வீரர்களான சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர ஆகியோரும் புதிய மாற்றத்தை துடிப்புடன் வெளிப்படு த்தும் பட்சத்தில் இலங்கையின் பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக அமையும். மேலும் நியூஸி லாந்தின் மிகச்சிறிய ஆடுகளங்களில் வெற்றி என்பது பந்து வீச்சாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
Catches Win Matches எனக்கூறுவார்கள். கடந்த உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் மூன்று பிடிகளை தவற விட்டமையால் கிண்ணக்கனவு தகர்ந்தது என்பதால் அதன் பெறுமதியை இலங்கை நன்கு அறியும்.
அத்துடன் இலங்கையின் களத்தடுப்பு சிறப்பாக காணப்படுவதுடன் டில்ஷான், திஸர, திரிமன்னே, மஹேல உட்பட ஏனைய வீரர்களும் சோர் வடையாது அப்பணியை தொடரவேண்டியது கட்டா யமாகின்றது. அதேபோன்று மிகப்பெரிய மைதானங்களைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் எல்லைக்கோடு வரை களத் தடுப் பாளர்களின் போராட்டம் மிக அத்தியாவசியமாகின்றது.
நம்பிக்கை
உலக கிண்ணத்தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்து மண்ணில் அவ்வணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பெற்றுக் கொண்ட படிப்பினைகள் இலங்கைக்கு பெரிதும் உதவுவதாக இருக்கும்.
பச்சைப்புற்றரை ஆடுகளங்களில் சவால்களுக்கு மத்தியிலான துடு ப்பாட்டம், நுணுக்கமான பந்து வீச்சு என்பவற்றை இலங்கை தற்போது நன்கறிந்துள்ளது.
இதனால் அவ்வாடு களங்களுக்கேற்ற வகையிலான மாற்றங்களுடன் பிரகாசிப்பதற்கு தயாராகவே இலங்கை உள்ளது. குறிப்பாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2–-4 என தோல்வி பயிற்சி ஆட்டத்தில் சிம்பாப்வேக்கு எதிரான பயிற்சி ஆட்ட தோல்வி என்பனவற்றின் அடிப்படையில் மட்டும் இலங் கையின் பலத்தை குறைத்து மதிப் படுவது சாலப்பொருத்தமான தொன்றல்ல.
19 வருடங்களின் பின்னர் மீண்டும் உலக கிண்ணத்தை தாயகத்திற்கு பெற்றுக்கொடுக்கும் கனவை நனவாக்குவதற்காக அவுஸ்திரேலிய கண்டத்தின் ஆடுகளங்களில் சிங்கங்களின் கர்ஜனை உச்சமானதாக இருக்கும் என நம்புவோம்.
இலங்கையர் சார்பில் தன்னிகரற்ற கனவான் களை கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை தெரி விப்பதுடன் வெற்றிக்காக எல்லோ ருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போமாக.