டியுசனுக்கு சென்று விட்டு நண்பருடன் வீதியால் சென்ற மாணவியை வெள்ளை வானில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். யாழ் நகரப்பகுதியில் உள்ள டியுசன் நிலையத்திலிருந்து கல்வி கற்று விட்டு திரும்பிய வேளை இச்சம்பவம் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் உள்ள விக்டோரியா வீதி மற்றும் மணிக்கூடுகோபுர வீதி இணையும் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இதன் போது வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் பூநகரிப் பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க மேரி லவனிதா என்பவராவார்.

kidnaped_student_01குறித்த பெண்ணிற்கும் வெளிநாடு ஒன்றில் தொழில் புரியும் நபர் ஒருவருக்கும் ஏற்கனவே காதல் தொடர்பு இருந்த நிலையில் திடிரென முறிவடைந்தது.

அதன் பின்னர் தற்போது டியுசனில் கல்வி கற்ற நண்பர் ஒருவருடன் அப்பெண் நெருக்கமான தொடர்பினை பேணி வந்துள்ளார்.

kidnaped_student_02இவ்வாறு இருந்த நிலையில் தற்போது அப்பெண் கடத்தப்பட்டுள்ளார்.இந் நிலையில் குறித்த பெண்ணுடன் வீதியால் வந்த அப்பெண்ணின் நண்பரின் தெரிவித்த கருத்துப்படி வெளிநாட்டில் உள்ள நபரினால் தான் இக்கடத்தல் நடத்தப்பட்டது என்றும் வந்த வேன் இலக்கம் 56-1636 என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் வேனில் சம்பந்தப்பட்ட நபருடன் மூன்று நபர்கள் இருந்தனர் என குறிப்பிட்டனர்.

தற்போது சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply